31 கிமீ மைலேஜை வாரி வழங்கும் டொயோட்டா காரின் விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் போட்டி போட்டுகிட்டு வாங்கறாங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza). இது பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன்தான், டொயோட்டா க்ளான்சா என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.
மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா ஆகிய 2 நிறுவனங்களும் கூட்டணி அமைத்து இயங்கி வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் டொயோட்டா க்ளான்சா காரின் கடந்த ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி டொயோட்டா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 3,740 க்ளான்சா கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 3,327 ஆக மட்டுமே இருந்தது. இது 12.4 சதவீத வளர்ச்சி ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா க்ளான்சா காரின் ஆரம்ப விலை 6.86 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10 லட்ச ரூபாயாக இருக்கிறது.
இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். டொயோட்டா க்ளான்சா காரின் பெட்ரோல்/மேனுவல் மாடல் ஒரு லிட்டருக்கு 22.35 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியது. அதே நேரத்தில் இதன் பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் மாடல் ஒரு லிட்டருக்கு 22.94 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த காரின் சிஎன்ஜி/மேனுவல் மாடல் ஒரு கிலோவிற்கு 30.61 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என டொயோட்டா நிறுவனம் கூறியுள்ளது. டொயோட்டா க்ளான்சா காரின் சிஎன்ஜி வெர்ஷனில், மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
ஓரளவிற்கு குறைவான விலை மற்றும் சிறப்பான மைலேஜ் ஆகிய காரணங்களால்தான், டொயோட்டா க்ளான்சா காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு க்ளான்சா காரும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனத்துடன் கூட்டணி அமைத்தது, இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனத்திற்கு நன்மையை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். வரும் காலங்களில் இந்த 2 நிறுவனங்களின் கூட்டணியில் இன்னும் பல்வேறு புதிய கார்களை நாம் விற்பனைக்கு எதிர்பார்க்க முடியும்.
இந்திய சந்தையில் டொயோட்டா க்ளான்சா தவிர, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta), டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) ஆகிய கார்களும் மிகவும் பிரபலமாக இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








