பணக்காரர்களையும் கவர்ந்திழுக்கும் தோற்றம் - விலை குறைவான டொயோட்டா கார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

டொயோட்டா (Toyota), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்று. கடந்த சில வருடங்களாக, பிரபலமான மாருதி சுஸுகி கார்களை அடிப்படையாக கொண்டு தனது கார்களை உருவாக்குவதை டொயோட்டா வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்த வகையில், சில வருடங்களுக்கு முன் விற்பனைக்கு வந்த டொயோட்டா கார் தான், கிளான்ஸா (Glanza) ஆகும். இந்த நிலையில், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு டொயோட்டா கிளான்ஸாவில் புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் கிளான்ஸா காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

தீபாவளியின் போதுதான் நிறைய பேர் புதியதாக கார்களை வாங்க விரும்புவர் என்பதை அறிந்து நிறைய கார் நிறுவனங்கள் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அறிவிக்கின்றன. அதேநேரம், சில கார் நிறுவனங்கள் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் தங்களது கார்களில் புதிய ஸ்பெஷல் எடிசன்களை அறிமுகம் செய்கின்றன.

toyota glanza signature edition spotted

அந்த வகையில், டொயோட்டா நிறுவனம் அதன் கிளான்ஸா, அர்பன் க்ரூஸர் ஹைரைடர், இன்னோவா ஹைகிராஸ் மற்றும் ஃபார்ச்சூனர் கார்களில் புதியதாக 'சிக்னெச்சர்' (Signature) என்கிற பெயரில் ஸ்பெஷல் எடிசன்களை அறிமுகம் செய்துள்ளது. அர்பன் க்ரூஸர் ஹைரைடர் சிக்னெச்சர் எடிசனை ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். மெர்சிடிஸ்-மேபக் கார்களை போன்று, ஹைரைடர் சிக்னெச்சர் எடிசனும் லக்சரியான தோற்றத்தில் ட்யூயல்-டோன் பெயிண்ட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

டீலர்ஷிப் ஷோரூமின் வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹைரைடர் சிக்னெச்சர் எடிசன் கார் ஒன்றின் வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோன்று, கிளான்ஸா சிக்னெச்சர் எடிசனின் வீடியோ ஒன்றும் தற்போது யூடியூப்பில் வெளியாகி உள்ளது. டொயோட்டா கிளான்ஸா காரின் அனைத்து வேரியண்ட்களிலும் இந்த ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு விதமான விலைகளில் கிளான்ஸாவின் சிக்னெச்சர் எடிசன் கிடைக்கும்.

toyota glanza signature edition spotted

இ, எஸ், ஜி மற்றும் வி என 4 வேரியண்ட்களில் கிளான்ஸா சிக்னெச்சர் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது நமக்கு கிடைத்துள்ள வீடியோவில், கிளான்ஸா காரின் எண்ட்ரீ-லெவல் இ வேரியண்ட்டின் அடிப்படையிலான சிக்னெச்சர் எடிசன் கார் காட்டப்பட்டுள்ளது. ஹைரைடர் சிக்னெச்சர் எடிசனை போல் இல்லாமல், கிளான்ஸா சிக்னெச்சர் எடிசன் கார் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், காரின் முன்பக்க கிரில், ரூஃப் மற்றும் பில்லர்கள் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. இதனால், கிளான்ஸா சிக்னெச்சர் எடிசனும் வெள்ளை & கருப்பு என ட்யூயல்-டோனில் காட்சியளிக்கிறது. முன்பக்க கிரில், பம்பர் மற்றும் பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள் உள்ளிட்டவற்றில் டைல்ஸ்களில் வழங்கப்படுவதை போன்றதான ஹைட்ரோ-டிப்பிங் ஃபினிஷிங் கொடுக்கப்பட்டுள்ளது. காரை சுற்றிலும் நிறைய இடங்களில் சிக்னெச்சர் எடிசன் முத்திரைகளை பார்க்க முடிகிறது.

toyota glanza signature edition spotted

காருக்கு வெளியே நம்மை கவரக்கூடிய மற்றொரு அம்சம் என்னவென்றால், காரின் 15-இன்ச் சக்கரங்கள் ஆகும். காருக்கு உள்ளே, இந்த கிளான்ஸா சிக்னெச்சர் எடிசன் ஆரஞ்ச் மற்றும் கிரே நிற கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இருக்கைகள் ஆரஞ்ச் நிறத்தில் வழங்கப்பட்டு இருப்பது வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே ஆரஞ்ச் நிறத்தை காரினுள் டேஸ்போர்டு மற்றும் கதவுகளில் காண முடிகிறது.

ஸ்டேரிங் சக்கரம் வெல்வட் ஃபினிஷிங்கிலும், காருக்குள் கேபினை சுற்றிலும் விளக்குகளும் வழங்கப்பட்டுள்ளன. மற்றப்படி, புதிய தொழிற்நுட்ப அம்சங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை. டொயோட்டா கிளான்ஸாவில் 1.2 லிட்டர் 4-சிலிண்டர், நேச்சுரலி-அஸ்பிரேட் பெட்ரோல் எ்ன்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸை பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்பெஷல் எடிசன் கார்களை அறிமுகம் செய்வதன் முக்கிய நோக்கமே வாடிக்கையாளர்களை கவர்வது ஆகும். புதிய கிளான்ஸா சிக்னெச்சர் எடிசனை பார்த்தால், எவரொருவரும் அதன் அழகில் மயங்கிவிடுவர். ஏனெனில், காருக்கு வெளியே வெள்ளை நிறமும், காருக்கு உள்ளே ஆரஞ்ச் நிறமும் மிகவும் பொருத்தமான காம்பினேஷனாக விளங்குகின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, October 19, 2024, 13:00 [IST]
English summary
Toyota glanza signature edition spotted in dealership showroom yard check all details here
மேலும்... #toyota #diwali #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X