இந்த டொயோட்டா காரில் இதை மட்டும் பண்ணுங்க!! மைலேஜ் நிச்சயமா அதிகமாக கிடைக்கும்!
டொயோட்டா ஹைரைடர் (Toyota Hyryder), இந்தியாவில் சமீப காலத்தில் டொயோட்டா நிறுவனம் அறிமுகப்படுத்திய மாடர்ன் கார்களுள் ஒன்று. நம் நாட்டில் இந்த டொயோட்டா காரை மக்கள் பலர் வாங்கியுள்ளனர். அத்தகையவர்கள் ஹைரைடர் காரில் எந்தெந்த முறையை பின்பற்றினால் அதிக மைலேஜை பெறலாம் என்பதையும், இந்த காரின் செயல்படுதிறனை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் தற்சமயம் விற்பனை செய்யப்படும் நல்ல மைலேஜ் தரக்கூடிய டொயோட்டா கார்களுள் ஒன்றாக ஹைரைடரை சொல்லலாம். இந்த காரில் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த பெட்ரோல் என்ஜினில், மேனுவல் ஆப்ஷனில் அதிகப்பட்சமாக 20.58kmpl வரையிலான மைலேஜையும், ஆட்டோமேட்டிக் ஆப்ஷனில் 27.97kmpl மைலேஜையும் பெறலாம் என ARAI சான்றளித்துள்ளது.

நிஜ உலகில் இவ்வளவு மைலேஜ் கிடைக்காது என்றாலும், கிட்டத்தட்ட இந்த மைலேஜை ஹைரைடரில் பெற முடியும். இதுமட்டுமின்றி, சிஎன்ஜி ஆப்ஷனிலும் இந்த டொயோட்டா எஸ்யூவி கார் விற்பனை செய்யப்படுகிறது. ஹைரைடர் சிஎன்ஜி காரில் 26.6kmpkg வரையிலான மைலேஜை பெறலாம் என டொயோட்டா தெரிவிக்கிறது. பெட்ரோல் விலையை காட்டிலும் சிஎன்ஜி-இன் விலை குறைவாக உள்ளதால், ஹைரைடர் சிஎன்ஜி காரில் பெரியதாக எரிபொருள் செலவு இருக்காது.
இவ்வளவு நேரம் நாங்கள் சொன்னது எல்லாம் சும்மா டிரைலர் தான்... மெயின் பிக்சர் ஹைப்ரீட் ஆப்ஷன் உடனான ஹைரைடர் காரில் தான் உள்ளது. ஆம், டொயோட்டா இன்னோவா காரை போன்று டொயோட்டா ஹைரைடர் காரும் ஸ்ட்ராங்க் ஹைப்ரீட் வெர்சனில் கிடைக்கிறது. இந்த வெர்சனில் ஹைரைடர் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் எலக்ட்ரிக் மோட்டார் கிடைக்கும்.

டொயோட்டா ஹைரைடர் என்று மட்டுமில்லாமல், பொதுவாகவே கார்களில் அதிக மைலேஜை பெற சில யுக்திகளை பின்பற்றலாம். அதில் முக்கியமானது, ஒரே சீரான வேகத்தை பின்பற்றுவது ஆகும். என்ஜினிற்கு பெரியதாக எந்த வேலையும் கொடுக்காமல், அதன் பணியில் அடிக்கடி தலையிடாமல் இருந்தாலே அது சிறப்பாக செயல்படும். என்ஜின் சிறப்பாக செயல்பட்டாலே, மைலேஜ் தானாக அதிகமாக கிடைக்க துவங்கிவிடும்.
ஆதலால் முடிந்தவரையில், ஆக்ஸலரேஷன் மற்றும் பிரேக்கை அடிக்கடி பயன்படுத்தாதீர்கள். சில கிமீ அதிகமாக செல்ல வேண்டியிருப்பினும், நெடுஞ்சாலைகளில் ஹைரைடர் காரை ஓட்டுவது அதன் மைலேஜை அதிகமாக பெற சிறந்த வழியாகும். இதற்காக தான் க்ரூஸ் கண்ட்ரோல் வசதி ஹைரைடர் காரில் கொடுக்கப்படுகிறது. நெடுஞ்சாலைகளில் செல்லும்போது, அடிக்கடி ஆக்ஸலரேஷனை மேனுவலாக கொடுக்க வேண்டியிருப்பதை க்ரூஸ் கண்ட்ரோல் குறைக்கும்.

நிமிட கணக்கில் ஒரே இடத்தில் நிற்க வேண்டியிருந்தால், காரின் என்ஜினை ஆஃப் செய்துவிடுவது நல்லது. முடிந்தால், டிராஃபிக்கில் நிற்கும்போது கூட இதை பின்பற்ற முயலுங்கள். சடர்ன் பிரேக்கிங் காரின் மைலேஜை குறைக்கும். ஆதலால், முன்னால் செல்லும் வாகனங்களுக்கு மிக நெருக்கமாக செல்வதை தவிர்க்கவும். அதேபோல், ஆக்ரோஷமாக ஆக்ஸலரேஷன் பெடலை மிதிப்பதும் மைலேஜை குறைக்கக்கூடிய செயலாகும். நமது டிரைவிங் ஸ்டைலை பொறுத்தே காரின் மைலேஜ் இருக்கும் என்பதை மறக்காதீர்கள்.
டிரைவிங் ஸ்டைலை போன்று, கார் இயங்கும் சாலையின் தரமும் எந்தவொரு காரின் மைலேஜிலும் முக்கியமான காரணியாக விளங்குகின்றது. காரின் மைலேஜ் விஷயத்தில் டயர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆதலால், டயர்கள் சரியான கண்டிஷனில் உள்ளதா என்பதை அவ்வப்போது செக் செய்யவும். அதேபோல், காருக்குள் ஏசியை அதிகமாக பயன்படுத்துவதும் என்ஜினின் பளுவை அதிகரித்து, மைலேஜை குறைக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா ஹைரைடர் காரில் எவ்வளவு மைலேஜை பெறலாம் என்பதை இந்த தொகுப்பில் ஆரம்பத்திலேயே பார்த்திருந்தோம். ஏற்கனவே கூறியதுபோல், அவை ஓர் மூடிய வளாகத்திற்குள் அளவிடப்பட்டவை ஆகும். நிஜ உலகில் கொஞ்சம் குறைவாகவே மைலேஜ் கிடைக்கும். இருப்பினும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழிக்காட்டுதல்களை பின்பற்றுவதன் மூலம் உங்களது ஹைரைடர் காரில் சிறப்பான மைலேஜை பெறலாம்.


Click it and Unblock the Notifications









