டொயோட்டா எலெக்ட்ரிக் கார் இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா! ஷோரூம்ல இப்பவே ஒன்னு சொல்லி வைக்கணும்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி இவிஎக்ஸ் (Maruti Suzuki eVX). இதுதான் மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்த எலெக்ட்ரிக் கார், வரும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் விற்பனைக்கு களமிறக்கப்படவுள்ளது. இதை தொடர்ந்து இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வரும் டொயோட்டா (Toyota) எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் அடிப்படையில், ஒரு டொயோட்டா எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருகிறது என்பது ஏற்கனவே நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

ஆனால் டொயோட்டா நிறுவனத்தின் அந்த எலெக்ட்ரிக் கார் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது? என்பது தெரியாமல் இருந்தது. இந்த கேள்விக்கு தற்போது நமக்கு பதில் தெரிய வந்துள்ளது. இதன்படி 2025 காலண்டர் ஆண்டின் 2வது காலாண்டில், இந்த டொயோட்டா எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு களமிறக்கப்படவுள்ளது.

Toyota Urban Crossover Concept

அதாவது வரும் 2025ம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் இந்த டொயோட்டா எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காருடன் ஒப்பிடும்போது, இந்த எலெக்ட்ரிக் கார் நிறைய மாற்றங்களை கொண்டிருக்கும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரில், 4 வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுமா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வரும் இந்த டொயோட்டா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காரில், 4 வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Toyota Urban Crossover Concept Side Design

குஜராத் மாநிலத்தில் உள்ள சுஸுகி நிறுவனத்தின் தொழிற்சாலையில்தான் டொயோட்டா நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் கார் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுவதுடன் மட்டுமல்லாது, இங்கிருந்து ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியங்களில் உள்ள நாடுகளுக்கும் இந்த எலெக்ட்ரிக் கார் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

டொயோட்டா நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் காரில், 60 kWh திறன் கொண்ட பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 550 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த டிரைவிங் ரேஞ்ச், தொலை தூர பயணங்களுக்கும் ஏற்றதாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டொயோட்டா-சுஸுகி கூட்டணியின் அடிப்படையில், இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் நிறைய கார்களை, டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்து வருகிறது. இதில், நிறைய கார்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த வரிசையில், மாருதி சுஸுகி இவிஎக்ஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வரும் டொயோட்டா எலெக்ட்ரிக் காரும், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 20 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதுதான் இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும். இதன் அறிமுகத்தை தொடர்ந்து, இந்திய சந்தையில் இன்னும் பல்வேறு புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார்களை டொயோட்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 30, 2024, 17:22 [IST]
English summary
Toyota india first electric car launch timeline out check details here
மேலும்... #toyota #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+