7 அல்லது 8 பேர் போகலாம்.. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டாவில் புதிய தேர்வு அறிமுகம்.. விலை இவ்ளோ கம்மியா!
இந்தியர்களின் ஃபேவரிட் எம்பிவி (MPV) ரக கார் மாடல்களில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா (Toyota Innove Crysta)வும் ஒன்றாகும். இந்த கார் மாடலிலேயே டொயோட்டா நிறுவனம் புதிய ஜிஎக்ஸ் பிளஸ் (GX+) எனும் தேர்வை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து உள்ளது.
இந்த தேர்வை ஏழு அல்லது எட்டு இருக்கைகள் தேர்வில் வாங்கிக் கொள்ள முடியும். இதற்கு அறிமுக விலையாக ரூ. 21.39 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மேலும், இது 7 இருக்கைகளைக் கொண்ட ஜிஎக்ஸ் பிளஸ் வேரியண்டின் விலை ஆகும்.

இதன் எட்டு இருக்கைகள் கொண்ட வேரியண்ட் ரூ. 21.44 லட்சத்திற்கு விற்கப்படும். இரண்டு குடும்பங்கள் ஒன்றாக சேர்ந்து சுற்றுலா செல்வதற்கு ஏற்ற கார் மாடல் இதுவாகும். பெரிய குடும்பமாக இருப்பின் ம் ஜிஎக்ஸ் மற்றும் விஎக்ஸ் ஆகிய இரண்டு வேரியண்டுகளுக்கு இடையில் புதிய ஜிஎக்ஸ் பிளஸ் வேரியண்ட் நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றது.
அதிக வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களைத் தாங்கிய ஓர் தேர்வே இது ஆகும். பின் பக்கத்தில் கேமிரா, டேஷ் கேமிரா மற்றும் தானாக மடக்கிக் கொள்ளும் வசதிக் கொண்ட கண்ணாடி போன்ற சிறப்பம்சங்கள் பல இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதுதவிர கூடுதல் பிரீமியம் ரைடு ஃபீலை வழங்கும் விதமாக மர பேனல்கள், துணியாலான இருக்கை கவர்கள் ஆகியவற்றாலும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா ஜிஎக்ஸ் பிளஸ் தேர்வு அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. எஞ்சினைப் பொருத்தவரை இதில் 2.4 லிட்டர் டீசல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த மோட்டார் அதிகபட்சமாக 150 எச்பி பவரையும், 343 என்எம் டார்க் திறனை வெளியேற்றும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே இதில் வழங்கப்படுகின்றது. இந்தியாவில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா ரூ. 19.99 லட்சம் தொடங்கி ரூ. 26.30 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இன்னோவா ஹைகிராஸ் எனும் மாடலிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் பெட்ரோல் தேர்வு மட்டுமே வழங்கப்படுகின்றது. பெட்ரோலுடன் சேர்த்து ஹைபிரிட் ஆப்ஷனும் இந்த இன்னோவா ஹைகிராஸ் காரில் வழங்கப்படுகின்றது. தற்போது பெரும் புள்ளிகள் பலரின் ஃபேவரிட் கார் மாடலாக இது மாறி வருவது குறிப்பிடத்தகுந்தது.
நடிகர் ரஜினிகாந்த் தொடங்கி மதுரை முத்து வரை என பிரபலங்கள் பலர் இந்த கார் மாடலையே பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் விரைவில் இன்னோவா க்ரிஸ்டா விற்பனையில் இருந்து அகற்றப்படும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நாட்டில் டீசல் வாகனங்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் அடிப்படையிலேயே அது வெளியேற்றப்படும் என கூறப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் டொயோட்டா அறிவிக்கவில்லை. அதேநேரத்தில் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் எப்போதும்போல் தடையின்றியே விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஓர் பெட்ரோல் மோட்டார் கொண்ட தேர்வு என்பதால் இது இப்போதைக்கு விற்பனையில் இருந்து அகற்றப்பட வாய்ப்பில்லை என கூறப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா நிறுவனம் விரைவில் இன்னோவா இவி-யை விற்பனைக்குக் கொண்டு வரும் என்றும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இன்னோவா இவியின் கான்செப்ட் மாடலை டொயோட்டா வெளியீடு செய்தது. இதன் வெளியீட்டால் இன்னோவா பிரியர்கள் பலர் தற்போது அதன் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கத் தொடங்கி இருக்கின்றனர். இது க்ரிஸ்டா டீசல் வேரியண்டிற்கு மாற்றாககூட களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








