20 வருஷம் ஆகியும் நின்னு பேசுது... பேருக்காகவே இந்த காரை எல்லாரும் கண்ணை மூடிட்டு வாங்கீட்டு இருக்காங்க...

இந்திய கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் டொயோட்டா இன்னோவா (Toyota Innova) என்ற பெயர் மிகவும் பிரபலம். டொயோட்டா குவாலிஸ் (Toyota Qualis) காருக்கு மாற்றாக, கடந்த 2005ம் ஆண்டில்தான், டொயோட்டா இன்னோவா கார் அறிமுகம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 20 வருடங்கள் கடந்து விட்ட நிலையில், தற்போதைய நிலையில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) ஆகிய பெயர்களில் மொத்தம் 2 மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இவை இரண்டும், இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையில், முக்கியமான பங்களிப்பை வழங்கி வருகின்றன. நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதமும் இது தொடர்ந்துள்ளது. நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான டொயோட்டா இன்னோவா காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

Toyota Innova Crysta

இதன்படி டொயோட்டா நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக 8,052 இன்னோவா கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8,900 ஆக இருந்தது. இது 10 சதவீத வீழ்ச்சி ஆகும்.

இது சிறிய அளவிலான வீழ்ச்சிதான் என்பதால், டொயோட்டா இன்னோவா உடனடியாகவே மீண்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போது பண்டிகை காலம் என்பதால், டொயோட்டா இன்னோவா விரைவில் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என கருதப்படுகிறது. இங்கே குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது.

Toyota Innova Crysta Airbag

விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும் கூட, நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டொயோட்டா நிறுவனத்தின் கார்களின் பட்டியலில், இன்னோவாதான் முதல் இடத்தை பிடித்துள்ளது. இங்கே மற்றொரு விஷயத்தையும் நாங்கள் கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும்.

நாங்கள் இந்த செய்தியில் கூறியிருப்பது, இந்திய சந்தையில் டொயோட்டா இன்னோவா காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை ஆகும். அதாவது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் ஆகிய 2 மாடல்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையைதான் நாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ளோம்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார், 19.99 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 26.55 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் விற்பனை செய்யப்படும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில், டீசல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்படுகிறது. மறுபக்கம் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார், 19.77 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 30.98 லட்ச ரூபாயாக உள்ளது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைதான். டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை போலவே, டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரும், 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஆனால் இந்த காரில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் கிடையாது. பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையில், நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, டொயோட்டா இன்னோவா மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. விலை சற்று அதிகம் என்றாலும் கூட, இது அதற்கு ஏற்ற வகையில் பிரீமியமான ஒரு தயாரிப்புதான்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 23, 2024, 13:10 [IST]
English summary
Toyota innova crysta hycross sales report september 2024
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+