டொயோட்டா இன்னோவா காரின் காத்திருப்பு காலம் 6 மாசமாம்! ஏன் இவ்வளவு டிமாண்ட் தெரியுமா?
டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா கிரைஸ்டா காருக்கு தற்போது காத்திருப்பு காலம் என்பது 6 மாதங்களுக்கும் அதிகமாக இருக்கிறது. இதனால் இந்த தீபாவளிக்கு இன்னோவா கிரைஸ்டா காரை வாங்க விரும்புபவர்கள். இப்பொழுதே அந்த காரை புக் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சமீப காலமாக குடும்பத்துடன் பயணிக்கும் எம்பிவி ரக கார்களை மக்கள் அதிகம் விரும்பி வாங்கி வருகின்றனர். இதனால் இந்த செக்மெண்டில் உள்ள கார்களின் விற்பனை அதிகமாக இருந்து வருகிறது. இந்த செக்மெண்டில் உள்ள கார்கள் சிறப்பாக விற்பனையாவதால், இதற்கு காத்திருப்பு காலமும் அதிகமாகி கொண்டே இருக்கிறது.

டொயோட்டா நிறுவனத்தில் சிறப்பாக விற்பனையாகும் காராக இன்னோவா கிரைஸ்டா கார் தான் இருக்கிறது. இந்த கார் தற்போது அப்டேட் செய்யப்பட்டு புதிய லுக்கில் இருப்பதால் மக்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர். இதனால் இந்த காரின் விற்பனை எண்ணிக்கை என்பது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. இதனால் புதிதாக இந்த காரை வாங்க நினைப்பவர்களுக்கு நீண்ட காத்திருப்பு காலம் இருக்கிறது.
தற்போது இன்னோவா கடைசியா காரை புக் செய்தால் சராசரியாக ஆறு மாதம் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. வேரியன்டை பொறுத்து காத்திருப்பு காலம் அதிகமாகவோ குறையவோ, அதிகமாகவோ வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதனால் வரும் தீபாவளிக்கு இந்த காரை வாங்க நினைப்பவர்கள் இப்பொழுதே இந்த காரை புக் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா கடைசியா காரை பொருத்தவரை ரூ 19.99 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. இதன் டாப் மாடல் விலை ரூ26.30 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இது மொத்தம் மூன்று விதமான விற்பனையில் உள்ளன ஜிஎக்ஸ், விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் ஆகிய வேரியன்ட்கள் விற்பனையில் உள்ளன.
இந்த கார் மொத்தம் 7 மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்கள் கொண்ட காராக இருக்கிறது. இந்த காரின் நிறத்தை பொறுத்தவரை சூப்பர் வைட், வைட் பியர்ல் கிரிஸ்டல் ஷைன், ஆட்டிடியூட் பிளாக் மற்றும் அவெண்ட் கிரேடு பிரான்ஸ் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் பலர் இந்த காரின் லுக்கிற்காகவே இந்த காரை அதிகமாக தேர்வு செய்கிறார்கள்.

இந்த காரின் இன்ஜின் ஆப்ஷனை பொருத்தவரை 2.4லிட்டர் 4 சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 148பிஎச்பி பவரையும் 343என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 2.7 லிட்டர் இன்ஜின் உடன் 6ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் இருந்தது. இதை தற்போது டொயோட்டா நிறுவனம் நிறுத்திவிட்டது.
இந்த காரில் உள்ள அம்சங்களை பொருத்தவரை போட்டியாளர்களுக்கு கடும் போட்டியை வழங்கும் ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன. வயர்லெஸ் டோர் லாக், மல்டி ஃபங்ஷன் ஸ்டேரிங் வீல், அதிக குவாலிட்டியான கருப்பு பைபர் சீட் கவரிங், மேம்படுத்தப்பட்ட டச் ஸ்கிரீன், இன்போடைமென்ட் சிஸ்டம், வயர்லெஸ் கார் கனெக்ட் தொழில்நுட்பம் உள்ளிட்ட அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை மல்டிபிள் ஏர் பேக்குகள் உள்ளன. இதுபோக சீட்டு பெல்ட் ரிமைண்டர், பார்க்கிங் சென்சார் இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ஸ்பீடு அலர்ட், வெஹிகிள் ஸ்டேபிள் கண்ட்ரோல், தெஃப்ட் பிரிவென்ஷன், பிரேக் அசிஸ்ட் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன. இந்த நாள் மக்கள் மத்தியில் இந்த காருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா நிறுவனம் இந்த காருக்கான காத்திருப்பு காலத்தை ஆறு மாதமாக தற்போது வைத்துள்ளது. இது சராசரியான காத்திருப்பு காலம் தான், இந்த தீபாவளிக்கு நீங்கள் இந்த காரை உங்கள் வீட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றால், இப்பொழுதே சென்று இந்த காரை புக் செய்து கொள்ளுங்கள். அப்பொழுதுதான் இந்த தீபாவளிக்கு உங்கள் வீட்டை இந்த கார் அலங்கரிக்கும்.


Click it and Unblock the Notifications









