ஒரு ஊரையே ஏத்தீட்டு போகலாம்... கோடிக்கணக்குல பணம் இருந்தாலும் இந்த டொயோட்டா காரை உடனேலாம் தர மாட்டாங்க...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta). இது எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். GX, VX மற்றும் ZX என மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அத்துடன் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் என மொத்தம் 2 வகையான இருக்கை அமைப்புகளுடன், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் கிடைக்கிறது. டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) என்ற புதிய மாடல் விற்பனைக்கு வந்து விட்டாலும் கூட, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு இன்னமும் மிகப்பெரிய அளவிலான 'டிமாண்ட்' இருக்கவே செய்கிறது.

Toyota Innova Crysta

இது இந்த காருக்கான காத்திருப்பு காலத்திலேயே (Waiting Period) தெளிவாக தெரிகிறது. இந்தியாவில் நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதம், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கான காத்திருப்பு காலம் 6 மாதங்கள் வரையாக உள்ளது. அதாவது நீங்கள் முன்பதிவு (Booking) செய்த நாளில் இருந்து 6 மாதங்கள் கழித்துதான் உங்களுக்கு கார் டெலிவரி செய்யப்படும்.

ஆனால் பிராந்தியம், டீலர்ஷிப், வேரியண்ட் மற்றும் கலர் போன்ற காரணிகளை பொறுத்து இந்த காத்திருப்பு காலம் மாறுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே துல்லியமான காத்திருப்பு காலத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், உங்கள் வீட்டிற்கு அருகே உள்ள டொயோட்டா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்பை அணுகுவது நல்லது.

Toyota Innova Hycross

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் பொருத்தப்பட்டிருப்பது 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 148 பிஹெச்பி பவர் மற்றும் 343 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் இணைக்கப்பட்டிருப்பது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் ஆரம்ப விலை 19.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 26.30 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற காராக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி திகழ்கிறது கொண்டுள்ளது. சௌகரியமான பயணத்தை வழங்குவதால்தான், வாடிக்கையாளர்கள் பலரும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாகவே காத்திருப்பு காலம் அதிகமாக இருக்கிறது.

டொயோட்டா நிறுவனம் இந்த ஆண்டின் இறுதிக்குள் புதிய எஸ்யூவி (SUV) ரக கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுமா? என்பது சந்தேகம்தான். இதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, March 8, 2024, 23:26 [IST]
English summary
Toyota innova crysta waiting period march 2024 all details
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+