காரோட விலை 30 லட்ச ரூபாதான்.. ஆனா இப்ப பாக்க கோடி ரூபா காருக்கே டஃப் கொடுக்குது.. இப்படி ஒரு மாற்றமா!

இந்தியாவில் விற்பனையில் கிடைக்கும் விலை உயர்ந்த கார் மாடல்களில் ஒன்றே டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire) ஆகும். இது ஓர் எம்பிவி ரக கார் மாடல் ஆகும். அதிக சொகுசு ரைடு அனுபவத்தை வழங்கக் கூடிய கார் மாடலாகவும் இது காட்சியளிக்கின்றது.

மேலும், குடும்பத்துடனும் இந்த காரில் பயணிக்க முடியும். அந்த அளவிற்கு மிகப் பெரிய இட வசதிக் கொண்டதே டொயோட்டா வெல்ஃபையர். ஒரே நேரத்தில் 7 பேர் வரை இந்த காரில் அமர்ந்து பயணிக்க முடியும். இந்த கப்பல் போன்ற காருக்கு இந்தியாவில் ஃபேன் பட்டாளம் அதிகம்.

Toyota innova hycross modified

குறிப்பாக, திரை நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் மத்தியில் இந்த கார் மிகப் பெரிய அளவில் பிரபலமைடந்து காட்சியளிக்கின்றது. இத்தகைய காராகவே மற்றுமொரு புகழ்பெற்ற டொயோட்டா தயாரிப்பை இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மாற்றி இருக்கின்றனர். டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் எம்பிவியையே அவர்கள் டொயோட்டா வெல்ஃபையர் தோற்றத்திற்கு மாற்றி இருக்கின்றனர்.

இந்தியாவில் மிகப் பெரிய டிமாண்டைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடலாக இன்னோவா ஹைகிராஸ் இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி இந்த கார் மாடலுக்கு காத்திருப்பு காலம் 2 ஆண்டுகள் வரை இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆமாங்க, இன்னோவா ஹைகிராஸ் காரை இப்போது புக் செய்தால் அது கைகளுக்கு வர 2 ஆண்டுகள் வரை ஆகிவிடுமாம்.

Modified toyota innova hycross interior

அதேவேளையில், இந்த காரை கள்ளச் சந்தையில் டீலர்கள் சிலர் 3.5 லட்ச ரூபா முதல் 4 லட்ச ரூபா வரையிலான கூடுதல் விலையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த மாதிரியான ஓர் டிமாண்ட் உள்ள காரையே அதன் உரிமையாளர் ஒருவர் அதற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக மாற்றி அமைத்திருக்கின்றார்.

இன்னோவா ஹைகிராஸின் வெளிப்புற தோற்றத்தை வெல்ஃபையர் பாடி பேனல்களைக் கொண்டே அவர் மாற்றி இருக்கின்றார். இந்த பாடி கிட்டை அவர்கள் வெளிநாடுகளில் இருந்து பிரத்யேகமாக இறக்குமதி செய்ததாகக் கூறப்படுகின்றது. இதுதவிர, இத்தாலியன் நப்பா லெதரைக் கொண்டும் இந்த காரின் உட்பக்கத்தை அலங்கரித்திருக்கின்றனர்.

Modified toyota innova hycross steering wheel

இதுதவிர, இன்னும் பல மாற்றங்களை அவர்கள் உள் மற்றும் வெளிப்பக்கத்தில் செய்திருக்கின்றனர். தற்போது உருவம் மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் இந்த கார் டெலிவரி பெற்ற மூன்று நாட்களிலேயே மாற்றியமைப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது குறிப்பிடத்தகுந்தது. இதனை கார் உரிமையாளரே யுட்யூப் சேனல் ஒன்றிற்கு தெரிவித்து இருக்கின்றார்.

இந்த காரின் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் காரின் உட்பகுதி மேற்கூரையில் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை இருப்பதைப் போல ஸ்டார் லைட்டுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், புதிய எல்இடி டெயில் லைட், புதிய 18 அங்குல அலாய் வீல்கள், டயருடன் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Modified toyota innova hycross roof

மேலும், இருக்கைகளுக்கு பின்னால் பொழுதுபோக்கு திரைகள், இன்ஃபோடெயின்மென்ட் திரை, ஸ்கை வியூ பனோரமிக் சன்ரூஃப் ஆகியவையும் இந்த காரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்து. இதுபோன்று இன்னும் பல சிறப்புகளைச் சேர்ந்து சாதாரணமான இன்னோவா ஹைகிராஸ் காரை பல கோடி ரூபாய் ஒர்த்துள்ள காராக மாற்றி இருக்கின்றனர்.

இன்னோவா ஹைகிராஸ் ஹைபிரிட் ரூ. 25,72 லட்சம் தொடங்கி ரூ. 30.68 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த காரையே இந்தியாவில் உள்ள பிரபலங்கள் பலர் பயன்படுத்தி வருகின்றனர். உதாரணமாக, நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்கூட டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரையே பயன்படுத்தி வருகின்றார். மைலேஜ் தரும் விஷயத்தில் இந்த கார் மாடல் கில்லாடி என்பது குறிப்படித்தகுந்தது.

Modified toyota innova hycross rear

வழக்கமான பெட்ரோல் மோட்டார் கொண்ட இன்னோவா ஹைகிராஸ் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 16 கிமீ மைலேஜை தரும் எனில் இந்த மாடலின் ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட இன்னோவா ஹைகிராஸ் லிட்டர் ஒன்றிற்கே 23 கிமீ வரையில் மைலேஜை வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுபோன்று இன்னும் பல சிறப்புகளை இந்த கார் தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே இந்தியாவில் இந்த காருக்கு வரவேற்பு பலமடங்கு அதிகரித்துக் காட்சியளிக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காருக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் இந்த காருக்கு காத்திருப்பு காலம் மிக அதிகமாக உள்ளது. இதனாலேயே இந்த காரை பலர் மாடிஃபை செய்ய தயக்கம் காட்டுகின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே பல கோடி ரூபாய் ஒர்த்தான காராக அது மாற்றப்பட்டு இருக்கின்றது.

இது பலரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. அதேவேளையில், இதுபோன்று காரின் உருவத்தை மாற்றும் வகையில் மாடிஃபை செய்வது மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றமாகும். இதற்கு அபராதம் அல்லது வாகன பறிமுதல் போன்ற மிகக் கடுமையான நடவடிக்கைகள் போலீஸ் தரப்பில் இருந்து எடுக்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, March 11, 2024, 11:28 [IST]
English summary
Toyota innova hycross modified into vellfire mpv
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X