இன்னோவா காரை வாங்கலாம்ன்ற கனவுல இருக்கீங்களா? அத தூக்கி குப்பையில போட வேண்டியதுதான்.. அவசரப்பட்டு ஏத்திட்டாங்க

இந்த ஆண்டு முடிவடைய இன்னும் வெகு சில நாட்களே உள்ளன. ஆகையால், ஆண்டு இறுதியை விற்பனை வளர்ச்சி உடன் நிறைவு செய்ய முன்னணி நிறுவனங்கள் பலவும் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் அடிப்படையில் அவர்கள் ஆஃபர்களை வாரி வழங்கவும் தொடங்கி இருக்கின்றனர். சூழல் இப்படியாக இருக்க, டொயோட்டா (Toyota) நிறுவனம் சற்றே வித்தியாசமாக அதன் இன்னோவா (Innova) கார் மாடலின் விலையை உயர்த்தி அனைவரையும் அதிர்ச்சியில் மூழ்கச் செய்து இருக்கின்றது. நிறுவனம் அதன் இன்னோவா ஹைகிராஸ் (Innova Hycross) கார் மாடலின் விலையையே உயர்த்தி இருக்கின்றது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி (MPV) ரக கார் மாடல்களில் ஒன்றாக இன்னோவா ஹைகிராஸ் மாறி இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இதன் விலையை உயர்த்தி அனைவருக்கும் பேரிடியை ஏற்படுத்தி இருக்கின்றது. குறிப்பாக, இந்த வாகனத்தை வாங்கலாம் என்கிற திட்டத்தில் இருந்தவர்களுக்கு கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

Toyota innova hycross price hiked

ரூ. 17 ஆயிரம் தொடங்கி ரூ. 36 ஆயிரம் வரை இதன் விலை உயர்த்தப்பட்டு இருக்கின்றன. வேரியண்ட் வாரியாக இந்த விலை உயர்வு பொருந்தும். இன்னோவா ஹைகிராஸ் கார் மாடலுக்கு இந்தியாவில் 45 நாட்கள் தொடங்கி ஆறு மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நீண்டு காணப்படுகின்றது.

இந்த அளவிற்கு டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கும் சூழலில்தான் விலை உயர்வை டொயோட்டா மிகவும் துணிச்சலாக செய்திருக்கின்றது. இந்த விலை உயர்வால் இன்னோவா ஹைகிராஸ் கார் மாடலின் விற்பனையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை அறிந்தே இவ்வாறு டொயோட்டா செய்திருக்கின்றது. ஏனெனில் முன்னணி நிறுவனங்கள் பல அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய வாகனங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.

Toyota innova hycross front view

ஆகையால், ஜனவரி 2025 முதல் 2 சதவீதம் தொடங்கி 3 சதவீதம் வரை புதிய வாகனங்களின் விலைகள் உயர இருக்கின்றன. டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் சமீபத்திலேயே ஒரு லட்சம் யூனிட்டுள் விற்பனை எனும் இமாலய சாதனையை இந்தியாவில் படைத்தது. இந்த கார் மாடல் நாட்டில் ஆறு விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஜிஎக்ஸ் (GX), ஜிஎக்ஸ் ஓ (GX 0), விஎக்ஸ் (VX), விஎக்ஸ் ஓ (VX 0), இசட்எக்ஸ் (ZX) மற்றும் இசட்எக்ஸ் ஓ (ZX 0) ஆகியவையே அவை ஆகும். இவற்றில் ஆரம்ப நிலை தேர்வுகளான ஜிஎக்ஸ் மற்றும் ஜிஎக்ஸ் ஓ ஆகியவற்றின் விலையில் ரூ. 17 ஆயிரமும், நடுநிலை தேர்வுகளான விஎக்ஸ் மற்றும் விஎக்ஸ் ஓ ஆகியவற்றின் விலைகளில் ரூ. 35 ஆயிரமும் உயர்த்தப்பட்டு இருக்கின்றது.

அதிகபட்சமாக ரூ. 36 ஆயிரம் இசட்எக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் ஓ ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டு இருக்கின்றன. இவையே உயர்நிலை தேர்வுகளாகும். சிறப்பம்சங்கள் கொட்டிக் கிடக்கும் தேர்வுகளாக இவையேக் காட்சியளிக்கின்றன. இதனால்தான் இவற்றின் விலைகள் மட்டும் சற்று கூடுதலாக உயர்த்தப்பட்டு இருக்கின்றன.

இன்னோவா ஹைகிராஸ் இந்தியாவில் வழக்கமான பெட்ரோல் மோட்டார் மற்றும் பெட்ரோல் - ஹைபிரிட் தொழில்நுட்பம் என இரண்டு விதமான ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் ஹைபிரிட் அம்சம் கொண்ட இன்னோவா ஹைகிராஸ் கார் மாடலே அதிகம் மைலேஜ் தரக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது. அது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 23.24 கிமீ வரையில் மைலேஜ் தரும். அதேநேரத்தில் வழக்கமான பெட்ரோல் மோட்டாரைக் கொண்ட இன்னோவா ஹைகிராஸ் 16.13 கிமீ வரையில் மட்டுமே மைலேஜை தரும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி ரக கார் மாடல்களில் ஒன்றாக இன்னோவா ஹைகிராஸ் உள்ளது. அதிக இட வசதி, அதிக ஆடம்பர வசதி மற்றும் அதிகம் மைலேஜ் உள்ளிட்ட காரணங்களுக்காக இது தற்போது பணக்காரர்கள் மற்றும் நடுத்தர மக்களின் கனவு வாகனமாக மாறி வருகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்த காரை வாங்கும் கனவில் இருந்தவர்களுக்கு ஆப்பு வைக்கும் விதமாக விலை உயர்வை டொயோட்டா செய்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 10, 2024, 11:22 [IST]
English summary
Toyota innova hycross mpv sees price increase and revised waiting period
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+