அமரன் பட வசூலே இதுக்கு முன்னாடி ஒன்னுமில்லாம போயிருச்சு.. விற்பனையில் சூப்பர் ஸ்டாராக மாறிய டொயோட்டா கார்..

இந்தியாவில் அதிகம் மைலேஜ் தரும் கார்களுக்கு எப்போதும் டிமாண்ட் அதிகம். அந்தவகையில், டொயோட்டா (Toyota)வின் அதிக மைலேஜ் தரும் கார் மாடல் ஒன்றிற்கு இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அது வேறு எந்த கார் மாடலும் அல்ல, அந்நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்றான இன்னோவா ஹைகிராஸ் (Innova HyCross) கார் மாடல்தான் அது ஆகும். இதுவே தற்போது விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டி சாதனைப் படைத்து உள்ளது.

1 லட்சம் யூனிட்டுகள் விற்பனை என்கிற சாதனையையே இன்னோவா ஹைகிராஸ் இந்தியாவில் படைத்திருக்கின்றது. டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் அதிகம் மைலேஜ் தரும் கார் மாடல் மட்டுமல்ல, அதிக பயணிகள் பயணிக்கும் வகையில் அதிக இருக்கைகள் வசதியைக் கொண்ட கார் மாடலாகவும் காட்சியளிக்கின்றது.

Toyota innova hycross crosses 1 lakh unit sales

அதன் இந்த வசதியே இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற காரணமாக இருக்கின்றது. மிக முக்கியமாக அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலரின் மனம் கவர்ந்த கார் மாடலாக இன்னோவா ஹைகிராஸ் மாறியுள்ளது. இந்தியாவில் இன்னோவா ஹைகிராஸ் எம்பிவி விற்பனைக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.

2022 நவம்பர் மாதத்திலேயே இந்த கார் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையிலேயே, குறுகிய காலகட்டத்திற்குள் இந்த கார் மாடல் மட்டும் தனி ஆளாக 1 லட்சம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திருக்கின்றது. நீண்ட தூர பயணம் செய்யவும், குடும்பத்துடன் பயணிக்கவும் ஏதுவான வாகனமாக இன்னோவா ஹைகிராஸ் காட்சியளிக்கின்றது.

இதுதவிர, தொழில்நுட்ப வசதிகளையும இந்த கார் மாடல் மிக தாராளமாகக் கொண்டிருக்கின்றது. இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்க காரணமாக உள்ளது. மிக முக்கியமாக ஓட்டோமேன் இரண்டாம் வரிசை இருக்கைகள், வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள் மற்றும் ஏர் கன்டிஷனிங் சிஸ்டம் உள்ளிட்டவற்றை பயணிகளின் சொகுசான டிராவல் அனுபவத்திற்காக இந்த காரில் டொயோட்டா வழங்கி இருக்கின்றது.

அதுதவிர, பின் பக்கத்தில் பவர் டோர், 65க்கம் மேற்பட்ட கார் இணைப்பு அம்சம், டொயோட்டாவின் சேஃப்டி சென்ஸ் மற்றும் பல அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன. எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினே வழங்கப்பட்டு இருக்கின்றது.

இத்துடன் எரிபொருள் சிக்கனத்திற்காக இன்னோவா ஹைகிராஸ் காரில் செல்ஃப் சார்ஜிங் வசதிக் கொண்ட ஸ்ட்ராங் ஹைபிரிட் (Self-Charging Strong Hybrid Electric System) அம்சமும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுவே அந்த காரை அதிகம் மைலேஜ் தரக் கூடியதாக மாற்றியிருக்கின்றது. அதாவது இந்த அம்சம் கொண்ட இன்னோவா ஹைகிராஸ் லிட்டர் ஒன்றிற்கே 23.24 கிமீ வரையில் மைலேஜ் தரும்.

அதேநேரத்தில், டொயோட்டா நிறுவனம் இந்த அம்சம் இல்லாத நிலையிலிலும் இன்னோவா ஹைகிராஸ் காரை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அதாவது, ஹைபிரிட் வசதி அல்லாத பெட்ரோல் மோட்டாரை மட்டுமே கொண்டதாக அந்த தேர்வு இருக்கும். மேலும், இதுவே ஆரம்ப நிலை இன்னோவா ஹைகிராஸ் தேர்வும் ஆகும். இது லிட்டர் ஒன்றிற்கு 16 கிமீீ வரையில் மைலேஜ் தரும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இன்னோவா கார் மாடலானது இன்னோவா கிரிஸ்டா மற்றும் இன்னோவா ஹைகிராஸ் என இரண்டு விதமாக விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் கிரிஸ்டா டீசல் எஞ்சினை மட்டுமே கொண்டதாகவும், ஹைகிராஸ் பெட்ரோல், பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் ஆகிய வசதிகளைக் கொண்டதாகவும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இப்போது கிடைத்திருக்கும் அமோக விற்பனை வரவேற்பானது இன்னோவா ஹைகிராஸ்-க்கானது மட்டுமே ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, November 22, 2024, 17:10 [IST]
English summary
Toyota innova hycross reaches 100 000 unit sales in india celebrating two years of innovation
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+