விழா கால ஸ்பெஷல் எடிசன் காரை அறிமுகம் செய்த டொயோட்டா! இந்த கார் இவ்ளோ மைலேஜை தருமா!!
டொயோட்டா (Toyota) நிறுவனம் இந்த விழாக் காலத்தை முன்னிட்டு சிறப்பு பதிப்பு கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடலான அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Urban Cruiser Hyryder) கார் மாடலிலேயே அது சிறப்பு பதிப்பை விற்பனைக்கு களமிறக்கி இருக்கின்றது. அது டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஃபெஸ்டிவல் லிமிடெட் எடிசன் (Urban Cruiser Hyryder Festival Limited Edition) எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும். மேலும், இந்த பதிப்பில் ஹைபிரிட் (Hybrid) மற்றும் நியோ டிரைவ் (NEODRIVE) ஆகிய இரு பவர்டிரெயின் ஆப்ஷன்களை டொயோட்டா வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது.
ஜி (G) மற்றும் வி (V) ஆகிய இரண்டு வேரியண்டுகளிலேயே இந்த விழாக் கால சிறப்பு பதிப்பு விற்பனைக்குக் கிடைக்கும். அதேவேளையில், குறைவான நாட்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு பதிப்பு கார் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. அதாவது, வருகின்ற 31 அக்டோபர் வரை மட்டுமே இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும்.

இந்த சிறப்பு பதிப்புடன் ரூ. 50 ஆயிரத்து 817 மதிப்புள்ள காம்ப்ளிமென்டரி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால், இது குறிப்பிட்ட சில டீலர்ஷிப்புகளில் மட்டுமே கிடைக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. வழக்கமான அர்பன் க்ரூஸர் ஹைரைடரைக் காட்டிலும் இந்த சிறப்பு சற்று அதிக அலங்காரத்தைப் பெற்றதாகக் காட்சியளிக்கின்றது.
அந்தவகையில், இதன் உட்பகத்தை அழகுப்படுத்தும் விதமாக 3டி ஃப்ளூர்மேட், லெக்ரூமுக்கான லைட், டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் உள்ளிட்டவை கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கும். இதுதவிர, காரின் வெளிப்புறத்தில் மட்ஃப்ளாப்புகள், டோர் விசர்கள், டோரில் குரோம் ஹேண்டில்கள், ஹூட் பகுதியில் எம்பளம் மற்றும் பாடி கிளாடிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
தொடர்ந்து, முன் மற்றும் பின் பக்கத்தில் பம்பர், ஹெட்லேம்ப், ஃபெண்டர் மற்றும் பின் பக்கத்தில் டோர் லிட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமாதிரியான சிறப்பான அம்சங்களுடனேயே சிறப்பு பதிப்பு அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது.
எனவே இந்த காருக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு வரும் நாட்களில் இரட்டிப்பாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மிக சிறந்த மைலேஜ் தரும் திறன் கொண்ட கார் மாடல் ஆகும். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கே 27.97 கிலோ மீட்டர் வரையில் மைலேஜ் தரும்.
இது அராய் சான்றளித்த மைலேஜ் விபரம் ஆகும். அர்பன் க்ரூஸர் ஹைரைடரில் வழங்கப்பட்டு இருக்கும் ஸ்ட்ராங்கான ஹைபிரிட் தொழில்நுட்பமே இந்த அதிக மைலேஜ் திறனுக்கு காரணம் ஆகும். டொயோட்டா அர்பன் க்ரூஸர் இந்தியாவில் பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் பெட்ரோல்-ஹைபிரிட் ஆகிய ஆப்ஷன்களிலேயே டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இதில் ஹைபிரிட் அம்சம் கொண்ட தேர்விற்கும், சிஎன்ஜிக்கும்தான் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே இதில் சிறப்பு பதிப்பு தற்போது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் ரூ. 11 லட்சம் தொடங்கி ரூ. 20 லட்சம் வரையிலான விற்கப்படுகின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காருக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே டொயோட்டா தற்போது சிறப்பு பதிப்பை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இதுதவிர விழாக் கால சிறப்பு சலுகைகளையும் டொயோட்டா நிறுவனம் அதன் கார் மாடல்களுக்கு வழங்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








