இவ்ளோ முரட்டு தனமான காருக்கா டொயோட்டா உரிமம் வாங்கியிருக்கு! பக்கத்து வீட்டுகாரர்களையும் சேத்து கூட்டி போகலாம்

டொயோட்டா (Toyota) நிறுவனம் மிகவும் முரட்டுத் தனமான தோற்றம் கொண்ட கார் மாடல் ஒன்றிற்கு பேடண்ட் பதிவைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டில் ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் நடைபெற்ற வாகன ஷோ (Japan Mobility Show 2023)-விலேயே எக்ஸ்-வேன் கியர் (X-Van Gear) எனும் கான்செப்ட் (Concept) மாடலைக் காட்சிப்படுத்தியது. மிகவும் முரட்டுத் தனமான தோற்றம் கொண்ட கார் மாடல் அதுவாகும்.

மேலும், இது ஓர் எம்பிவி ரக கார் மாடலாகும். இதற்கே நிறுவனம் தற்போது பேடண்ட் (Patent) செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த காரை கான்செப்ட்டாக டொயோட்டா காட்சிசப்படுத்தியபோது, அதை நிறுவனம் ஆய்விற்காக மட்டுமே உருவாக்கி இருக்கும், இதன் உற்பத்தி பணிகள் இப்போது தொடங்கப்படாது என்று யூகிக்கப்பட்டது.

Toyota x van gear concept

காரின் உருவத்தை வைத்தே இவ்வாறு கணிக்கப்பட்டது. ஆனால், இந்த யூகிப்புகளுக்கு தற்போது முற்று புள்ளி வைத்திருக்கின்றது டொயோட்டா நிறுவனம். நிறுவனம் இந்த காருக்கு பேடண்ட் பதிவைச் செய்திருப்பதனால், டொயோட்டா நிறுவனம் எப்போது வேண்டுமானாலும் எக்ஸ்-வேன் கியரின் உற்பத்தி பணிகளைத் தொடங்கும் என்கிற சூழல் உருவாகி இருக்கின்றது.

உற்பத்தி செய்துவிட்டால் அடுத்து என்ன அந்த கார் உலக நாடுகளில் விற்பனைக்கு வருவதுதான் மிச்சம். ஆனால், இது இந்தியாவில் உடனே விற்பனைக்கு வருமா என்பது சந்தேகம்தான். எதிர்காலத்தில் அது விற்பனைக்கு வருவதற்கான சாத்தியக் கூறுகளே இருக்கின்றன. முதலில் ஜப்பான் சந்தையிலேயே இந்த கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

மற்ற எம்பிவி கார் மாடல்களில் இருந்து பல நிலைகளில் இந்த எம்பிவி கார் மாறுபட்டுக் காட்சியளிக்கின்றது. இதற்கு மிக சிறந்த உதாரணமாக எக்ஸ்-வேன் கியரின் வெளிப்புற தோற்றமும், கதவுகளும் இருக்கின்றன. காரில் உள்ள கதவுகள் மற்ற காரில் உள்ள கதவுகளிடம் இருந்து மிகப் பெரிய அளவில் மாறுபட்டுக் காட்சியளிக்கின்றன.

முன் மற்றும் பின் பக்கம் என இரண்டிலும் ஸ்லைடிங் வகை கதவுகளே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. சுலபமாக பயணிகள் ஏறி இறங்க ஏதுவாக இந்த செட்-அப் வழங்கப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், இந்த காரில் அதிக பயணிகளால் பயணிக்க முடியும். அதற்கேற்ப மூன்று வரிசை இருக்கை அமைப்பு எக்ஸ்-வேன் கியரில் இடம் பெற இருக்கின்றது.

மேலும், இதன் சன்ரூஃப்-ம் காரின் முழு நீளத்திற்கும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. இதற்காக மூன்று துண்டுகள் சன்ரூஃப் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆகையால், குடும்பத்துடன் எஞ்ஜாய் செய்து பயணிக்க ஏதுவான காராக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆறு பேர் முதல் 7 பேர் வரை இந்த காரில் பயணிக்க முடியும்.

குறிப்பாக, முன்பக்க இருக்கை சுழலும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. இதனால் முதியவர்களாலும் சுலபமாக ஏறி-இறங்க முடியும். எனவே டொயோட்டா நிறுவனம் இந்த காரை முழுக்க முழுக்க ஃபேமில பயன்பாட்டிற்கான வாகனமாக தயார் செய்திருப்பது துள்ளியமாக தெரிகின்றது. இதன் வெளிப்புற தோற்றம் நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடலான எஃப்ஜே க்ரூஸரை பிரதிபலிக்கும் வகையில் இருக்கின்றது.

குறிப்பாக, முன் பக்கமே இந்த கார் மாடலை நினைவுப்படுத்தும் வகையில் இருக்கின்றது. இந்த கார் பற்றிய அதிகாரப்பூர்வ விபரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. விரைவில் அதுகுறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, இந்த காரின் உற்பத்தி பணிகள் எப்போது தொடங்கும்?, எந்தெந்த உலக நாடுகளில் விற்பனைக்கு இந்த கார் அனுப்பி வைக்கப்படும் என்பது போன்ற முக்கியமான தகவல்களையும் விரைவில் எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எம்பிவி ரக கார்களுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாக எர்டிகா இருக்கின்றது. மலிவு விலை காரணமாக அந்த காருக்கு இந்தியர்கள் நல்ல வரவேற்பை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். டொயோட்டா இப்போது பதிவு செய்திருக்கும் கார் அதிக பிரீமியம் வசதிகளைத் தாங்கியதாக இருக்கின்றது. இந்த மாதிரியான அம்சம் கொண்ட காருக்கும் நல்ல டிமாண்ட் இந்தியாவில் நிலவிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 26, 2024, 12:15 [IST]
English summary
Toyota patented x van gear mpv here is more details
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X