மாருதியோட இன்னொரு காரையும் டொயோட்டா அதோட பேட்ஜ்ல மாத்தி விற்பனைக்கு கொண்டார போகுது! இதோ டீசர் படம்!

மாருதி சுஸுகி (Maruti Suzuki)-இன் சில கார் மாடல்களை டொயோட்டா (Toyota) நிறுவனம் அதன் பிராண்ட் பெயரில் ரீ-பேட்ஜ் (Re-badge) செய்து இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதாவது, மாருதி சுஸுகியின் புகழ்பெற்ற கார் மாடல்கள் சிலவற்றை தன்னுடைய சொந்த தயாரிப்பைப் போல லோகோவையும், இன்னும் சில மாற்றங்களை (அலங்கார மாற்றங்களை) மட்டும் செய்து அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலைிலேயே ஏற்கனவே விற்பனையில் மாருதியின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட கார் மாடலில் மற்றுமொரு ஓர் கார் மாடலை இணைக்கும் முயற்சியில் டொயோட்டா களமிறங்கி இருக்கின்றது. இந்த கார் மாடலின் டீசர் (Teaser) படத்தையே டொயோட்டா தற்போது வெளியிட்டு இருக்கின்றது. டொயோட்டா நிறுவனம் இம்முறை மாருதி சுஸுகியின் ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) கார் மாடலையே ரீ-பேட்ஜ் செய்திருக்கின்றது.

Toyota taisor teased in india

இந்த காரை அது டெய்சர் எனும் பெயரிலேயே விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதன் டீசல் படத்தையே நிறுவனம் தற்போது வெளியிட்டு இருக்கின்றது. விரைவில் இந்த கார் விற்பனைக்கு வர இருப்பதை முன்னிட்டே டீசர் படத்தை வெளியிட்டு இருக்கின்றது, டொயோட்டா. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் ஓர் கிராஸோவர் ரக எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும்.

இந்த காரை நிறுவனம் அர்பன் க்ரூஸர் டெய்சர் எனும் பெயரில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. நாளை மறுநாளே (ஏப்ரல் 3) இந்த கார் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்யப்பட இருக்கின்றது. என்ன மாதிரியான மாற்றங்களுடன் இந்த காரை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வருகின்றது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

Toyota taisor grill

இருப்பினும், இப்போது வெளியாகி இருக்கும் டீசர் படங்களை வைத்து பார்க்கையில், டொயோட்டா நிறுவனம் பேட்ஜ்களை மட்டுமே மாற்றி அமைக்கவில்லை. அலங்கார விஷயத்திலும் கணிசமான மாற்றங்களைச் செய்திருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது. கிரில், ஹெட்லைட், பின் பக்க லைட் செட்-அப் மற்றும ரூஃப் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் மாடலின் ஹெட்லைட்டில் மூன்று சதுரமான எல்இடி லைட்டுகள் இடம் பெற்றிருக்கும். ஆனால், டொயோட்டா டெய்சரில் ஒரே பட்டையான லைட்டுளே பன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதேபோல், தேன்கூடு போன்ற சிறிய சிறிய துளைகள் கொண்ட கிரில்லே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

Toyota taisor front view

இதுபோன்று இன்னும் பல மாற்றங்களை வெளிப்புறத்தில் கொண்ட ஓர் கார் மாடலாகவே டெய்சர் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாகவே மாருதி ஃப்ரான்க்ஸ் காரிடம் டெய்சர் வேறுபட்டுக் காட்சியளிக்கி இருக்கின்றது. இதேபோல், காரின் உட்பக்கத்திலும் கணிசமான மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. அந்தவகையில், டேஷ்போர்டு, ஸ்டியரிங் வீல் மற்றும் இருக்கைகள் உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, டெய்சரில் 9 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா மற்றும் ஹெட்ஸ்-அப் திரை ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன. அதேவேளையில், மாற்றங்கள் உருவம் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றில் மட்டுமே எதிர்பார்க்கப்படுகின்றன.

Toyota taisor side view

எஞ்சின் விஷயத்தில் எந்த மாற்றமும் எதிர்பார்க்கப்படவில்லை. ஆகையால், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் மாடலில் வழங்கப்படும் அதே எஞ்சின் மற்றும் கியர் ஆப்ஷன்களே டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சரிலும் எதிர்பார்க்கப்படுகின்றது. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி மோட்டார் ஆப்ஷனில் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர் விற்பனைக்கு வரும்பட்சத்தில் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பிரபல கார் மாடல்களான ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 300, கியா சொனெட், நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

Toyota taisor roof

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகியும், டொயோட்டாவும் அதன் கார் உற்பத்தி பிளாட்பாரங்களையும் மற்றும் தொழில்நுட்பங்களையும் கூட்டணியின் கீழ் பகிர்ந்துக் கொள்கின்றன. அந்தவகையிலேயே, இரு நிறுவனங்களும் தங்களின் தயாரிப்புகளை பரிமாற்றிக் கொண்டு பேட்ஜ்களை மட்டும் மாற்றி விற்பனைச் செய்துக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, April 1, 2024, 14:02 [IST]
English summary
Toyota revealed teaser pictures of urban cruiser taisor car
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X