7 பேர் போகலாம், கியர் மாத்த தேவையில்லை! டொயோட்டா ரூமியான் ஜி ஏடி வேரியன்ட் அறிமுகம்!

டொயோட்டா நிறுவனம் தனது ரூமியான் காரின் ஜி ஏடி என்ற வேரியன்டை இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் அதன் மேனுவல் வெர்ஷன் காரை விட ரூபாய் 1.40 லட்சம் அதிகமான விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த காருக்கான புக்கிங்கும் தற்போது துவங்கி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டொயோட்டா நிறுவனம் தற்போது ரூமியான் என்ற காரை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக தனது மிட் லெவல் ஆட்டோமேட்டிக் வேரியண்டான ரூமியான் ஜி ஏடி என்ற காரை என்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ரூ13 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இது இந்த காரின் மேனுவல் வெர்ஷன் விலையை விட ரூபாய் 1.40 லட்சம் அதிகமாகும்.

toyota rumion G AT launched

இந்த காருக்கான புக்கிங் தற்போது டொயோட்டா நிறுவனம் துவங்கி உள்ளது ரூபாய் 11000 திரும்ப செலுத்தக்கூடிய டோக்கன் பணத்தை கொடுத்து இந்த காரை புக் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. தற்போது டொயோட்டா நிறுவனத்தின் ரூமியான் காரைப் பொறுத்தவரை இந்தியாவில் விற்பனையாகும் 7 சீட்டர் எம்பிவி கார்களில் ஒன்றாக இருக்கிறது.

இந்த கார் எஸ், ஜி, வி ஆகிய மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனை ஆகிறது இதுவரை எஸ் மற்றும் வி ஆகிய வேறு என்று ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன் இருந்தது. தற்போது மிட் வேரியன்டிலும் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

toyota rumion G AT launched

1.5 லிட்டர் 4 சிலிண்டர் நேச்சுரல் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 13 எச்பி பவரையும் 137 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 88 பிஎச்பி பவரையும், 121.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த டொயோட்டா ரூமியான் ஜி ஏடி காரைப் பொறுத்தவரை ஜி மேனுவல் வேரியண்ட் காரில் இருக்கும் அதே அம்சங்கள் தான் இந்த காரிலும் இருக்கிறது. முக்கியமாக கீ லெஸ் என்ட்ரி, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், 7இன்ச் கொண்ட டச்ஸ்கிரீன் இன்போடைமென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ அம்சங்கள், கனெக்டெட்கார், ஸ்டேரிங் வீல் மவுண்ட், கண்ட்ரோல் டூயல் டோன் அலாய் வீல் ஆகிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

toyota rumion G AT launched

இந்த டொயோட்டா ரூமியான் காரின் விலையைப் பொறுத்தவரை ரூபாய் 10.44 லட்சம் என்ற விலையில் பேஸ் வேரியண்ட் விற்பனையாகி வருகிறது. இதுவே ரூபாய் 13.73 லட்சம் என்ற விலையில் டாப் வேரியன்ட் ஆட்டோமேட்டிக் வெர்ஷன் வெளியாகி விற்பனையாகி வருகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலை தான்.

இந்த காரின் சிஎன்ஜி வேரியன்டிற்கான புக்கிங் கடந்த ஆண்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதிகமான புக்கிங் வந்து விட்டதால் அந்த கார்கள் எல்லாம் தயாரித்து விற்பனையான பிறகே அடுத்த புக்கிங் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த புக்கிங் துவங்கி உள்ளது. இதனால் ரூமியான் சிஎன்ஜி காரை வாங்க நினைப்பவர்கள் தற்போது புக்கிங் செய்து கொள்ளலாம்.

டொயோட்டா நிறுவனத்தின் ரூமியான் காரைப் பொறுத்தவரை மார்க்கெட்டில் உள்ள மாருதி சுஸூகி எர்டிகா காரின் டொயோட்டா பேட்ஜ் வெர்ஷன் காராக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் மார்க்கெட்டில் உள்ள கியா கேரன்ஸ், மாருதி சுசுகி எக்ஸ்எல் 6 ஆகிய கார்களுக்கு போட்டியாக மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் தான் இந்நிறுவனம் மாருதி சுஸூகி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் என்ற காம்பேக்ட் எஸ்யூவி கூபே காரை ரீ பேட்ஜ் செய்து டொயோட்டா டைசர் என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் தற்போது விற்பனைக்காக டீலர் ஷிப்களுக்கு வந்துள்ளது மற்றொரு முக்கியமான செய்தியாக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா நிறுவனம் இந்த ரூமியான் காரின் ஜி ஏடி வேரியன்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்த காரில் உள்ள அனைத்து வேரியன்ட்களிலும் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன்கள் உள்ளன. தற்போது மக்கள் மத்தியில் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்கள் மிக முக்கியமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதால் இந்த அறிமுகத்தை அந்நிறுவனம் செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, April 29, 2024, 18:34 [IST]
English summary
Toyota rumion g at launched in india at 13 lakh price
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X