26 கிமீக்கு மேல் மைலேஜ் குடுக்கும் இந்த டொயோட்டா கார்ல 7 பேர் போலாமா! இந்த ரேட்டுக்கு கண்ண மூடிட்டு வாங்கலாம்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா ரூமியான் (Toyota Rumion). எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த டொயோட்டா ரூமியான் காரின் நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி டொயோட்டா நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1,968 ரூமியான் கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் அதற்கு முந்தைய ஆகஸ்ட் மாதம் வெறும் 1,721 ரூமியான் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இது 12.55 சதவீத வளர்ச்சி ஆகும்.

டொயோட்டா ரூமியான் காரில் பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை இரண்டுமே 1.5 லிட்டர் இன்ஜின்கள்தான். பவர் அவுட்புட் மற்றும் மைலேஜ் (Mileage) ஆகியவை மட்டும்தான் வேறு. அதாவது பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட் 103 பிஎஸ்/137 என்எம் ஆகும்.

Toyota Rumion

ஆனால் சிஎன்ஜி இன்ஜினின் பவர் அவுட்புட் 88 பிஎஸ்/121.5 என்எம் மட்டுமே. சிஎன்ஜி இன்ஜினின் பவர் அவுட்புட் குறைவாக இருந்தாலும் கூட, சிறப்பான மைலேஜ் கிடைக்கும். அதைப்பற்றியும் விரிவாக பார்க்கலாம். டொயோட்டா ரூமியான் காரின் பெட்ரோல் இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

இதில், மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 20.51 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 20.11 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் சிஎன்ஜி இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது.

Toyota Rumion Side Design

இது ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வசதிகளை (Features) பொறுத்தவரையில் 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன்றவை எல்லாம் டொயோட்டா ரூமியான் காரின் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.

இவை எல்லாம் தவிர, 6 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஏசி, க்ரூஸ் கண்ட்ரோல், பேடில் ஷிஃப்டர்கள், கீலெஸ் எண்ட்ரி மற்றும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள் போன்ற வசதிகளும் டொயோட்டா ரூமியான் காரில் வழங்கப்படுகின்றன. அத்துடன் டொயோட்டா ரூமியான் காரில் பாதுகாப்பு வசதிகளுக்கும் (Safety Features) பஞ்சமில்லை.

பாதுகாப்பை பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரியர் பார்க்கிங் கேமரா போன்றவை எல்லாம் டொயோட்டா ரூமியான் காரின் முக்கியமான அம்சங்கள் ஆகும். இவ்வளவு சிறப்பம்சங்கள் நிரம்பிய டொயோட்டா ரூமியான் காரின் ஆரம்ப விலை 10.44 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 13.73 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டொயோட்டா ரூமியான் 7 சீட்டர் கார் ஆகும். எனவே அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலும், அதிக மைலேஜ் கிடைக்க கூடிய வகையிலும் ஒரு காரை எதிர்பார்த்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு டொயோட்டா ரூமியான் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்பது எங்கள் கருத்து.

More from DriveSpark

Article Published On: Friday, October 18, 2024, 18:42 [IST]
English summary
Toyota rumion sales report september 2024 price mileage features
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+