ஃபார்ச்சூனர் காருக்கு உண்டான கெத்தே போச்சே! இப்படி ஒரு அவமானம் டொயோட்டாவிற்கு தேவையா?
கடந்த ஜனவரி மாதம் டொயோட்டா நிறுவனம் தனது நிறுவனத்தில் எவ்வளவு கார்களை விற்பனை செய்துள்ளது என்ற விரிவான அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி டொயோட்டா இன்னோவா கிரைஸ்டா மற்றும் இன்னோவா ஹைகிராஸ் ஆகிய கார்கள் தான் அந்நிறுவனத்தில் சிறப்பாக விற்பனையான கார்களாக உள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டொயோட்டா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் விற்பனை செய்த கார்கள் குறித்த விற்பனை விபரங்களை தற்போது வெளியிட்டுள்ளது இதில் முதலிடத்தில் இன்னோவா ஹைகிராஸ் மற்றும் இன்னோவா கிரைஸ்டா ஆகிய கார்கள் உள்ளன மொத்தம் 9400 கார்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெறும் 1427 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன. தற்போது 7673 கார்கள் கூடுதலாக விற்பனையாகி 558.72% விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது.

2வது இடத்தில் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் கார் இருக்கிறது. இது எஸ்யூவி ரக காராகும். இந்த கார் கடந்த ஜனவரி மாதம் 5543 காரர்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4194 கார்கள் தான் விற்பனையாகியுள்ளது தற்போது கூடுதலாக 1349 கார்கள் விற்பனையாகி உள்ளன. இது 32.14 சதவீத வளர்ச்சியாகும்.
பட்டியலில் மூன்றாவது இடத்தில் கிளான்ஸா கார் இருக்கிறது. இது ஒரு ஹேட்ச்பேக் ரக காராகும் கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 3,740 கார்கள் விற்பனையாகிருந்தன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3,327 கார்கள் தான் விற்பனையாகியுள்ளது. தற்போது 413 கார்கள் கூடுதலாக விற்பனையாகி 12.41% விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது.

பட்டியலில் நான்காவது இடத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் 3213 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3698 கார்கள் விற்பனையாக இருந்தன. தற்போது 485 கார்கள் குறைவாக விற்பனையாகி 13.12 சதவீத விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த பட்டியலில் வீழ்ச்சியை சந்தித்த ஒரே கார் இதுதான்.
பட்டியலில் ஐந்தாவது இடத்தில் டொயோட்டா ரூமியான் என்ற எம்பிவி ரக கார் இருக்கிறது. இந்த கார் கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 639 கார்கள் மட்டுமே விற்பனையாக இருந்தன. இது சமீபத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்ட கார் என்பதால் கடந்தாண்டு இந்த கார் விற்பனை இல்லை. இதனால் விற்பனையில் வளர்ச்சி வீழ்ச்சி குறித்த தகவல்கள் எதுவும் நம்மால் பார்க்க முடியாது.

கேம்ரி காரை பொருத்தவரை இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறது. இது ஒரு செடான் ரக காராகும். தனது ஜனவரி மாதம் மொத்தம் 312 கார்கள் விற்பனை ஆகியுள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெறும் 59 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. தற்போது கூடுதலாக 253 கார்கள் விற்பனையாகி 428.81% விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது.
இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் ஹிலக்ஸ் ரக கார் இருக்கிறது. இது ஒரு பிக்கப் ரக காராகும். கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 289 கார்கள் விற்பனையாகி இருந்தன. இதுவே 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெறும் ஒரு கார் மட்டுமே விற்பனையாகியிருந்தது. தற்போது கூடுதலாக 258 கார்கள் விற்பனையாகி 28,800% விற்பனை வளர்ச்சி பெற்று உள்ளது.
இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கும் கார் வில்ஃபயர் ரக காராகும். கடந்த ஜனவரி மாதம் 61 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெறும் 22 கார்கள் தான் விற்பனையாகி இருந்தது. தற்போது அதைவிட 39 கார்கள் கூடுதலாக விற்பனையாகி 177.27% விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா நிறுவனம் கடந்து 2023-ம் ஆண்டு பல்வேறு புதிய கார்களை அறிமுகப்படுத்தியதன் காரணமாக அந்நிறுவனத்தின் விற்பனை என்பது சிறப்பாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு நடந்த விற்பனையை விட தற்போது கூடுதலாக விற்பனையாகி வருகிறது. இதில் ஃபார்ச்சூனர் காருக்கு மவுசு குறைந்து வருவது நமக்கு தெள்ளத் தெளிவாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications









