பைக் மாதிரி மைலேஜ் தரும் காரை களமிறக்கியது டொயோட்டா! இனி ரோட்ல திரும்பன பக்கமெல்லாம் இந்த காரை பாக்கலாம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த டொயோட்டா டைசர் (Toyota Taisor) கார், நேற்று (ஏப்ரல் 3) அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.

புத்தம் புதிய டொயோட்டா டைசர் காரில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் (Naturally Aspirated Petrol) மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் (Turbo Petrol) இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) கொடுக்கப்பட்டுள்ளன. இதில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன், சிஎன்ஜி (CNG) ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் சிஎன்ஜி மாடலில், இந்த இன்ஜின் ஒரு கிலோவிற்கு 28.51 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்குகிறது. இதே அளவிற்கான மைலேஜை புத்தம் புதிய டொயோட்டா டைசர் காரிலும் நாம் உறுதியாக எதிர்பார்க்க முடியும்.

Toyota Taisor

வசதிகளை (Features) பொறுத்தவரையில், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் என ஏகப்பட்ட அம்சங்கள் டொயோட்டா டைசர் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பை (Safety) பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், இபிடி உடன் ஏபிஎஸ், ரியர் டீஃபாகர் போன்ற அம்சங்களை எல்லாம் டொயோட்டா டைசர் கார் பெற்றுள்ளது. E, S, S+, G மற்றும் V என மொத்தம் 5 வேரியண்ட்களில் (Variants), டொயோட்டா டைசர் கார் கிடைக்கும்.

Toyota Taisor Rear Design

இதில், ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 7.74 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலை 13.04 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இது சரியான விலை நிர்ணயமாக கருதப்படுகிறது. எனவே டொயோட்டா டைசர் கார் விற்பனையில் சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா டைசர் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள், 11 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, டொயோட்டா டைசர் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அதே சமயம் டொயோட்டா டைசர் காரின் டெலிவரி (Delivery) பணிகள் எப்போது தொடங்கப்படும்? என்ற கேள்வி அனைவர் மனதிற்குள்ளும் ஓடி கொண்டுள்ளது. இதற்கு தற்போது நமக்கு பதில் கிடைத்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வந்துள்ள டொயோட்டா டைசர் காரின் டெலிவரி பணிகள் வரும் மே மாதத்தில் இருந்து தொடங்கப்படவுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), டாடா நெக்ஸான் (Tata Nexon), நிஸான் மேக்னைட் (Nissan Magnite) மற்றும் ரெனால்ட் கைகர் (Renault Kiger) ஆகிய கார்களுடன், டொயோட்டா டைசர் போட்டியிடும்.

டைசர் காரின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட்ட பிறகு, இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை உயரும் என்பது எங்கள் கருத்து. வரும் காலங்களில் மாருதி சுஸுகி-டொயோட்டா கூட்டணியில், இன்னும் பல்வேறு புதிய கார்களை இந்திய வாடிக்கையாளர்கள் உறுதியாக எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 4, 2024, 23:01 [IST]
English summary
Toyota taisor delivery details out price mileage variants
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+