29 கிமீ மைலேஜ் தரும் டொயோட்டா காரின் விலை இவ்ளோதானா! ஷோரூம்ல இப்பவே பாயை போட்டு படுத்தற வேண்டியதுதான்!

இந்திய சந்தையில் டொயோட்டா (Toyota) மற்றும் மாருதி சுஸுகி (Maruti Suzuki) ஆகிய 2 நிறுவனங்களும் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன. இந்த கூட்டணி பல்வேறு கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில் இந்த கூட்டணியின் மற்றொரு புதிய கார் நாளை (ஏப்ரல் 3) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

டொயோட்டா டைசர் (Toyota Taisor) என்ற பெயரில் விற்பனைக்கு வரவுள்ள இந்த புதிய கார், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) காரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் (Rebadged Version) ஆகும். எனவே மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் வழங்கப்பட்டுள்ள அதே இன்ஜின் ஆப்ஷன்கள்தான் (Engine Options), டொயோட்டா டைசர் காரிலும் வழங்கப்படவுள்ளன.

Taisor Teaser

இதன்படி டொயோட்டா டைசர் காரில், 89 பிஹெச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடிய 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர 99 பிஹெச்பி பவர் மற்றும் 148 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடிய 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படலாம்.

மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில், பெட்ரோல் மட்டுமல்லாது, சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் சிஎன்ஜி வெர்ஷன்களில், 1.2 லிட்டர் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்படுகிறது. இந்த இன்ஜின் ஒரு கிலோவிற்கு 28.51 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவிக்கிறது.

Toyota Taisor Teaser

இதே சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன், டொயோட்டா டைசர் காரிலும் வழங்கப்படலாம். இந்த காரிலும் இதே அளவிற்கான மைலேஜை நாம் உறுதியாக எதிர்பார்க்க முடியும். ஆனால் டொயோட்டா டைசர் காரில் சிஎன்ஜி வெர்ஷன் நாளைக்கே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுமா? என்பது உறுதியாக தெரியவில்லை.

>

ஒருவேளை முதலில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் மட்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். அதற்கு பிறகு ஒரு சில மாதங்கள் கழித்து, சிஎன்ஜி வெர்ஷன் தனியாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். எனவே இந்த விஷயத்தில் என்ன நடக்க போகிறது? என்பதை தெரிந்து கொள்ள நாம் நாளை வரை காத்திருக்க வேண்டும்.

டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், டொயோட்டா டைசர் காரில், 5 ஸ்பீடு மேனுவல், 5 ஸ்பீடு ஏஎம்டி, 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ஆகிய கியர் பாக்ஸ் (Gear Box) ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வசதிகள் (Features) மற்றும் டிசைன் (Design) ஆகிய அம்சங்களிலும், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் மற்றும் டொயோட்டா டைசர் ஆகிய 2 கார்களும் பெரும்பாலும் ஒன்று போலவே இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் வெறும் 8 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் டொயோட்டா டைசர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 13.50 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), டாடா நெக்ஸான் (Tata Nexon), கியா சொனெட் (Kia Sonet) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) ஆகிய கார்களுக்கு போட்டியாக டொயோட்டா டைசர் கார் விற்பனைக்கு வரவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 2, 2024, 14:28 [IST]
English summary
Toyota taisor india launch tomorrow expected price mileage
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+