ரூ.10.56 லட்சத்தில் புதிய டொயோட்டா கார் ரெடி - தீபாவளிக்கு ஒண்ணு வாங்க வேண்டியதுதான்!!

டொயோட்டா (Toyota) நிறுவனம் அதன் டைசர் (Taisor) காரில் புதிய லிமிடெட் எடிசன் (Limited Edition)-ஐ அறிமுகம் செய்துள்ளது. வரவிருக்கும் தீபாவளி பண்டியை முன்னிட்டு இந்த புதிய டொயோட்டா டைசர் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.10.56 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய லிமிடெட் எடிசன் மூலமாக டைசர் காரை டர்போ என்ஜின் உடன் வாங்கலாம். புதிய டைசர் லிமிடெட் எடிசன் காரை பற்றியும், இந்த காரில் கிடைக்கக்கூடிய ஆக்ஸஸரீகளை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஜப்பானிய கார் நிறுவனங்களான சுஸுகியும், டொயோட்டாவும் கூட்டணியில் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இதனால், இந்தியாவிலும் மாருதி சுஸுகி உடன் டொயோட்டா கூட்டணியில் உள்ளது. ஆனால், கார்கள் விற்பனையை பொறுத்தவரையில் மாருதி சுஸுகி மாதத்திற்கு லட்சம் கார்கள் விற்பனை உடன் எங்கேயோ உள்ளது. டொயோட்டா மாதத்திற்கு 10,000- 20,000 என்கிற அளவில்தான் கார்களை விற்பனை செய்து வருகிறது.

toyota taisor limited edition launched

இதன் காரணமாகவே, மாருதி சுஸுகியில் விற்பனை செய்யப்படும் நிறைய கார்களை அடிப்படையாக கொண்டு டொயோட்டா தனது கார்களை உருவாக்கி வருகிறது. இந்த வகையில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதே டொயோட்டா டைசர் ஆகும். இந்த காரில் தான் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்பெஷல் எடிசன் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்பெஷல் எடிசன் என சொல்வதை காட்டிலும் லிமிடெட் எடிசன் என்றுதான் வேண்டும். ஏனெனில், அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி வரையில் மட்டுமே இந்த கார் விற்பனை செய்யப்பட உள்ளது. புதிய டைசர் லிமிடெட் எடிசன் உடன் சில ஆக்ஸஸரீகள் கிடைக்கும். இவை காரின் வெளிப்பக்கம் மற்றும் உட்பக்கம் என இரு பக்கங்களிலும் தோற்றத்தை மேம்படுத்தும்.

டொயோட்டா ஜென்யூன் ஆக்ஸஸரீஸ் என அழைக்கப்படும் இவற்றின் மதிப்பு ரூ.20,160 ஆகும். இந்த ஆக்ஸஸரீகளை பொருத்திக் கொள்வதன் மூலம் டைசர் லிமிடெட் எடிசனின் முன் மற்றும் பின்பக்க ஸ்பாய்லர்கள் கிரானைட் கிரே மற்றும் சிவப்பு நிறத்தில் கிடைக்கும். கதவுகளில் சில பாதுகாப்பான்களும், ஹெட்லைட்ஸ், முன்பக்க க்ரில் மற்றும் சைடு மோல்டிங் பகுதிகளை சுற்றிலும் க்ரோம் கார்னிஷும் கிடைக்கும்.

இந்த லிமிடெட் எடிசன் காருக்குள் டோர் விஸர்ஸ், அனைத்து வெப்ப நிலைகளிலும் தாங்கக்கூடிய ஃப்ளோர் மேட்ஸ் மற்றும் டோர் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கூறியதுபோல், புதிய டைசர் லிமிடெட் எடிசன் கார் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே கிடைக்கும். டைசர் காரின் சில வேரியண்ட்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் இந்த டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 100 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் கியர்பாக்ஸை பெறலாம். புதிய டைசர் லிமிடெட் எடிசன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.56 லட்சத்தில் இருந்து ரூ.12.88 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. டொயோட்டா டைசர் காரில் 90 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனும் கொடுக்கப்படுகிறது.

இந்த நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸை வாங்கலாம். இது இல்லாமல், டைசர் சிஎன்ஜி காரும் மார்க்கெட்டில் விற்பனையில் உள்ளது. டைசர் சிஎன்ஜி காரில் அதிகப்பட்சமாக 78 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். டைசர் சிஎன்ஜி கார் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே கிடைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா நிறுவனம் சமீபத்தில்தான் அதன் புதிய ஹைரைடர் ஃபெஸ்டிவல் எடிசனை அறிமுகம் செய்து இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது டைசர் லிமிடெட் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஒன்றே ஒன்றுக்கு தான்... தீபாவளி சமயத்தில் கார்கள் விற்பனையை அதிகரிப்பது ஆகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 17, 2024, 15:37 [IST]
English summary
Toyota taisor limited edition launched in india price features all details here
மேலும்... #toyota #new launches #diwali #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+