புதிய தொழிற்சாலையை அமைக்கிறது டொயோட்டா! இந்த மாநிலத்திற்கு இவ்ளோ பெரிய அதிர்ஷ்டமா! யாருமே எதிர்பாக்கல!
டொயோட்டா நிறுவனத்தின் கார்களுக்கு இந்திய சந்தையில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. டொயோட்டா நிறுவனத்தின் கார்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவையாக இருப்பதுதான் இதற்கு காரணம். டொயோட்டா நிறுவனத்தின் பழைய கார்களான குவாலிஸ் மற்றும் இன்னோவா போன்றவை, எவ்வித பிரச்னையும் இல்லாமல் பல லட்சம் கிலோ மீட்டர்கள் ஓடிய பல்வேறு செய்திகளை நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். இந்த வரிசையில் டொயோட்டா நிறுவனத்தின் புதிய தலைமுறை கார்களும் கூட, வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொண்டுள்ளன. எனவே டொயோட்டா நிறுவனம் அதிக அளவிலான கார்களை உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது.
டொயோட்டா நிறுவனத்திற்கு தற்போதைய நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூர் நகருக்கு அருகே உள்ள பிடதியில் 2 தொழிற்சாலைகள் உள்ளன. இந்த 2 தொழிற்சாலைகளிலும் மொத்தமாக சேர்த்து ஒரு ஆண்டுக்கு 3.42 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் டொயோட்டா நிறுவனத்தின் கார்களுக்கான தேவை அதிகரித்து கொண்டே வருகிறது.

எனவே பிடதியில் 3வது தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை டொயோட்டா நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு அறிவித்தது. பிடதியில் அமைக்கப்படவுள்ள 3வது தொழிற்சாலையில், 3,300 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படவுள்ளது. வரும் 2026ம் ஆண்டில் இந்த 3வது தொழிற்சாலை செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டொயோட்டா நிறுவனம் பிடதியில் அமைக்கப்படவுள்ள 3வது தொழிற்சாலையின் உற்பத்தி திறன் ஒரு ஆண்டுக்கு 1 லட்சம் கார்களாக இருக்கும். எனவே இந்த தொழிற்சாலை செயல்பாட்டிற்கு வந்தால், டொயோட்டா நிறுவனத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி திறன் ஒரு ஆண்டுக்கு 4.42 லட்சம் கார்களாக உயரும்.

இந்த சூழலில், மஹாராஷ்டிரா மாநில அரசுடன் (Maharashtra Government), டொயோட்டா நிறுவனம் தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில், புத்தம் புதிய க்ரீன்ஃபீல்டு உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை டொயோட்டா நிறுவனம் ஆராயவுள்ளது.
புதிய தொழிற்சாலைக்காக, மஹாராஷ்டிரா மாநில அரசுடன் டொயோட்டா நிறுவனம் செய்து கொண்டுள்ள இந்த ஒப்பந்தம், தற்போது ஆட்டோமொபைல் உலகில் முக்கியமான பேசு பொருளாக மாறியுள்ளது. இங்கு டொயோட்டா நிறுவனத்தின் தொழிற்சாலை அமைக்கப்பட்டால், அது பசுமை தொழில்நுட்பங்களுக்கான உற்பத்தி மையமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாத எலெக்ட்ரிக் வாகன தொழில்நுட்பங்கள் போன்றவற்றை டொயோட்டா நிறுவனம் இந்த புதிய தொழிற்சாலையில் உருவாக்கலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக இந்த தொழிற்சாலையில் கணிசமான தொகையை முதலீடு செய்ய டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ஆனால் அந்த தொகை எவ்வளவு? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த தொகை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இது இறுதி செய்யப்பட்டவுடன் ஒரே கட்டமாக முதலீடு செய்யப்படாது என கூறப்படுகிறது. அதற்கு பதிலாக சில ஆண்டுகள் நேரம் எடுத்து, படிப்படியாக முதலீடு செய்யப்படும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனத்தின் கார்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. எனவே டொயோட்டா நிறுவனம் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், புதிய தொழிற்சாலைகளை அமைப்பது மிகவும் அவசியமான ஒன்றுதான்.


Click it and Unblock the Notifications








