மினி டொயோட்டா ஃபார்ச்சூனர் வர போகுதா!.. விலை பாதிக்கு பாதி குறைவா இருக்கும் போலையே!

இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடல்களில் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner)-ம் ஒன்றாகும். பிரமாண்ட தோற்றம், என்ன மாதிரியான கரடு-முரடான சாலையாக இருந்தாலும் சமாளிக்கும் திறன் மற்றும் ஆடம்பர அம்சங்கள் ஆகியவற்றிற்கு பெயர்போன கார் மாடலாகவே இந்த ஃபார்ச்சூனர் காட்சியளிக்கின்றது. இதனால்தான் பலரின் கனவு வாகனமாகவும் ஃபார்ச்சூனர் இருக்கின்றது. ஆனால், அதன் அதிக விலை காரணமாக பலருக்கு எட்டாக் கனியாக காட்சியளிக்கின்றது. இந்த நிலையிலேயே சமீப சில காலமாக டொயோட்டா நிறுவனம் ஃபார்ச்சூனர் காரின் மினி வெர்ஷனை உருவாக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த சூழலிலேயே மினி ஃபார்ச்சூனர் காரின் உற்பத்தி வெகு விரைவிலேயே தொடங்க உள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த ஆண்டின் இறுதிக்குள்ளேயே மினி டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் உற்பத்தி பணிகள் தொடங்கப்பட உள்ளது. முதலில் தாய்லாந்து நாட்டிலேயே மினி ஃபார்ச்சூனர் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றது.

Mini-fortuner suv set for 2024 launch

இதற்கு அடுத்தபடியாகவே இந்தியா போன்ற மற்ற நாடுகளில் மினி டொயோட்டா ஃபார்ச்சூனர் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த காரை இங்கு எதிர்பார்க்கலாம். மினி டொயோட்டா ஃபார்ச்சூனர், எஃப்ஜே க்ரூஸர் (Toyota FJ Cruiser) எனும் பெயரிலேயே விற்பனைக்கு வர இருப்பதாக கூறப்படுகின்றது. இதற்கு நிறுவனம் டொயோட்டா ஹைகிராஸ் விலையையே நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விலையும் இதற்கு இணையானதாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம். இன்றைய நிலவரப்படி டொயோட்டா ஃபார்ச்சூனர் ரூ. 60 லட்சத்திற்கும் அதிகமான ஆன்-ரோடு விலையிலேயி விற்கப்படுகின்றது. ஆனால், மினி ஃபார்ச்சூனர் ரூ. 25 லட்சம் தொடங்கி ரூ. 40 லட்சம் வரையிலான விலையிலேயே விற்பனைக்கு வர இருக்கின்றது.

Toyota land cruiser mini

ஆனால், இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அது விற்பனைக்கு வரும்போதே என்ன விலையில் விற்பனைக்கு வரும் என்பது தெரிய வரும். மினி ஃபார்ச்சூனர் விற்பனைக்கு வரும் எனில் மஹிந்திரா தார் ராக்ஸ் காருக்கு போட்டியாக அமையும். டொயோட்டா நிறுவனம் அதன் மினி ஃபார்ச்சூனர் காரை கடந்த 2023 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற வாகன ஷோ ஒன்றிலேயே முதல் முறையாக காட்சிப்படுத்தியது.

கான்செப்ட் மாடலாகவே அது அப்போது காட்சிப்படுத்தப்பட்டது. இந்த நிலையிலேயே அதை உற்பத்திக்கு அனுப்பி வைக்கும் அளவிற்கு முன்னேறியிருக்கின்றது. இந்த காரை ஐஎம்வி ஓ பிளாட்பாரத்தை தழுவியே உருவாக்கி இருக்கின்றது. எனவே கவர்ச்சிக்கும், சிறப்பம்சங்களுக்கும் சற்றும் பஞ்சமில்லா காராகவே இது விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக, இந்த காரின் வீல்-பேஸும், இன்னோவா கிரிஸ்டா காரின் வீல் பேஸும் ஒத்ததாக இருக்கும் என கூறப்படுகின்றது. ஃபார்ச்சூனரின் வீல் பேஸ் 4,795 மிமீ ஆகும். ஆனால், க்ரிஸ்டாவோ 2,750 மிமீ வீல் பேஸையேக் கொண்டிருக்கின்றது. சிறப்பம்சங்கள் விஷயத்தில் இந்த கார் ஹைலக்ஸ் மற்றும் இன்னோவாவை ஒத்ததாகவே இருக்கும் என கூறப்படுகின்றது.

குறிப்பாக, மினி ஃபார்ச்சூனரின் டேஷ்போர்டு ஹைலக்ஸை அப்படியே ஒத்ததாக உள்ளது. எனவே பெரிய தொடுதிரை, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய வசதிகளுடன் இடம் பெறலாம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர, ஆட்டோமேட்டிக் க்ளைமேட், கார் இணைப்பு தொழில்நுட்பம் போன்ற ஏகப்பட்ட முக்கிய அம்சங்களையும் இந்த காரில் எதிர்பார்க்கலாம்.

எஞ்சின் விஷயத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு ஆப்ஷன்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. இன்னோவா க்ரிஸ்டா மற்றும் இன்னோவா ஹைகிராஸ் கார்களில் வழங்கப்படும் எஞ்சின் ஆப்ஷன்களே இதில் எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்று இன்னும் பல அம்சங்கள் மினி டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க கருத்து: இந்தியாவில் அரசியல்வாதிகள் மற்றும் பணக்காரர்களின் பிரியமான கார் மாடலாகவே ஃபார்ச்சூனர் காட்சியளிக்கின்றது. இந்த காரால் அனைத்து விதமான சாலைகளையும் சமாளிக்க முடியும். இதுபோன்று தனித் திறனைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்தியாவில் இந்த காருக்கு இப்போதும் சிறப்பான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. மினி ஃபார்ச்சூனர் விலையில் குறைவாக இருந்தாலும், தற்போதைய ஃபார்ச்சூனரை பிரதிபலிக்க இந்த கார் துளியும் தவறாது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 31, 2024, 13:54 [IST]
English summary
Toyota to unveil mini fortuner suv by 2024 anticipated launch details
மேலும்... #toyota #toyota fortuner #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+