430கிமீ ரேஞ்ச் தரும் கப்பல் மாதிரியான காரை இந்த விலைக்கு தர போறாங்களா! விற்றா போதும்னு நினைக்குதா டொயோட்டா!

டொயோட்டா (Toyota) நிறுவனம் அதன் அதிகம் ரேஞ்ச் தரும் எலெக்ட்ரிக் கார் (Electric car) மாடலை இந்த உலகிற்கு அறிமுகம் செய்து இருக்கின்றது. பிஇசட்3எக்ஸ் (bZ3X) எனும் மின்சார கார் மாடலையே அது வெளியீடு செய்திருக்கின்றது. ஓர் முழு சார்ஜில் இந்த மின்சார கார் 430 கிமீ தூரம் வரை பயணிக்கும். இத்தகைய அதிகம் ரேஞ்ச் தரும் கார் மாடலை குறைவான விலையில் விற்பனைக்குக் கொண்டு வர டொயோட்டா திட்டமிட்டு இருப்பது தெரிய வந்திருக்கின்றது. 11.5 லட்சம் என்கிற விலையிலேயே இதனை டொயோட்டா விற்பனைச் செய்ய இருக்கின்றது.

ஆனால், முதலில் சீனா நாட்டிலேயே இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இதற்கு பின்னரே உலக சந்தையில் இந்த காரை டொயோட்டா விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டொயோட்டா நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரை ஜிஏசி (GAC) உடன் இணைந்தே தயார் செய்திருக்கின்றது.

Toyota unveils bz3x electric compact suv

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இதன் டெலிவரி பணிகளைத் தொடங்கவும் அது திட்டமிட்டு இருக்கின்றது. மூன்று விதமான தேர்வுகளில் சீனாவில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும். 430 ஏர் பிளஸ், 520 ப்ரோ பிளஸ் மற்றும் 620 மேக்ஸ் ஆகியவையே அவை ஆகும். இதில் 430 ஏர் பிளஸ் மாடலே ஆரம்ப நிலை தேர்வாகும்.

இதுவே ஓர் முழு சார்ஜில் 430 கிமீ ரேஞ்சை வழங்கும். இந்த ரேஞ்ச் திறனுக்காக 50.03 kWh பேட்டரி பேக் அதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இதேபோல், அந்தந்த வேரியண்டுகள் அவற்றின் வேரியண்ட் பெயருக்கு ஏற்ப ரேஞ்சை வழங்கும். அதாவது, 520 ப்ரோ பிளஸ் ஓர் முழு சார்ஜில் 520 கிமீ ரேஞ்சையும், 620 மேக்ஸ் ஓர் முழு சார்ஜில் 620 கிமீ ரேஞ்சையும் வழங்கும்.

பிஇசட்3எக்ஸ் ஓர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்த காரில் பன்முக தொழிலநுட்ப வசதிகளை டொயோட்டா வழங்கி இருக்கின்றது. 14.6 அங்குல தொடுதிரை சிஸ்டம் மற்றும் 8.8 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் திரை மற்றும் பன்முக கன்ட்ரோல்களைத் தாங்கிய ஸ்டியரிங் வீல் ஆகியவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இத்துடன், இன்றைய கால இளைஞர்களைக் கவரும் விதமாக வயர் ஸ்மார்ட் ஃபோன் சார்ஜர், 11 ஸ்பீக்கர்கள் கொண்ட யமஹா ஆடியோ சிஸ்டம், அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் உள்ளிட்டவற்றையும் இந்த காரில் டொயோட்டா வழங்கி இருக்கின்றது. இத்துடன் இயக்கத்தை பாதுகாப்பானதாகவும், சுவாரஷ்யமானதாகவும் மாற்றும் விதமாக 11 எச்டி கேமிராக்கள், ரேடார், லிடார் மற்றும் அல்ட்ரா சோனிக் சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இவை பாதுகாப்பான பயணத்திற்கு மட்டுமல்ல வாகன பாதுகாப்பிற்கும் உதவியாக இருக்கும். இந்த வாகனம் சற்றே தனித்துவமான தோற்றத்தைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. முழுமையாக மூடப்பட்ட கிரில், ஷார்பான தோற்றம் கொண்ட எல்இடி ஹெட்லைட், கவர்ச்சியான பகல் நேரத்தில் ஒளிரும் எல்இடி லைட், செதுக்கப்பட்டதைப் போன்ற லுக் கொண்ட பான்னெட் மற்றும் முரட்டுத் தனமான லுக்கைக் கொண்ட காற்றை உள்வாங்கும் துளைகள் உள்ளிட்டவை இந்த காருக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக அமைந்திருக்கின்றது.

இந்த காரின் பக்கவாட்டு தோற்றம் டாடா ஹாரியர் காரை பிரதிபலிக்கும் வகையில் இருந்தாலும், அளவில் ரெனால்ட் கைகர் மற்றும் நிஸான் மேக்னைட்டுக்கு இணையானதாக இருக்கும். ஆகையால், ஐந்து பேர் மிக தாராளமாக இந்த காரில் அமர்ந்து பயணிக்க முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலும் விரைவில் டொயோட்டா அதன் எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. மாருதி சுஸுகி உடன் இணைந்தே இந்தியாவிற்கான தன்னுடைய இ-காரை டொயோட்டா தயார் செய்துக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் அறிமுகம் வெகு விரைவிலேயே அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 11, 2024, 23:21 [IST]
English summary
Toyota unveils bz3x electric compact suv in china with advanced features and competitive pricing
மேலும்... #toyota #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+