கார் காதலர்களுக்காக டொயோட்டா தயாரித்திருக்கும் இந்த வாகனத்த யாரும் பிடிக்கலனு சொல்ல மாட்டாங்க..

ஒரு வழியா டொயோட்டா (Toyota) நிறுவனம் அதன் மின்சார கார் (Electric Car) மாடலை வெளியீடு செய்திருக்கின்றது. தன்னுடைய இந்த மின்சார வாகனத்திற்கு அதன் புகழ்பெற்ற கார் மாடல் ஒன்றின் பெயரையே சூட்டி இருக்கின்றது. இந்தியாவில் டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Urban Cruiser HyRyder) எனும் கார் மாடலை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த பெயரில் ஹைரைடரை மட்டும் தவிர்த்துவிட்டு அர்பன் க்ரூஸர் (Urban Cruiser) எனும் பெயரையே மட்டும் எடுத்திருக்கின்றனர். இதையே விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இ-காருக்காக சூட்டியிருக்கின்றனர்.

இதன் படங்களே தற்போது வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. இது, மாருதி சுஸுகியின் எலெக்ட்ரிக் கார் மாடலான இ-விட்டார (Maruti Suzuki eVitara)-வின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் என்பது குறிப்பிடத்தகுந்தது. இது ரீ-பேட்ஜ் மாடலாக இருந்தாலும், இ-விட்டாராவிடம் இருந்து பலநிலைகளில் மாறுபட்டுக் காட்சியளிக்கும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

Toyota urban cruiser ev dashboard

ஸ்டைல், செயல்திறன் மற்றும் சிறப்பம்சங்களைத் தாங்கியிருப்பதிலேயே அது இ-விட்டாராவிடம் இருந்து மாறுபட்டு இருக்கும். இந்த காரை வெகு விரைவிலேயே இந்தியாவில் டொயோட்டா விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 2025 ஆம் ஆண்டின் மத்தியில் இது விற்பனைக்கு வந்துவிடும் என்றே கூறப்படுகின்றது.

இதற்கு முன்னதாக இந்திய வருகையை உறுதிப்படுத்தும் விதமாக இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற இருக்கும் பாரத் மொபிலிட்டி ஷோ வாயிலாக அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி பிரசல்ஸ் மோட்டார் ஷோ (Brussels Motor Show) 2025-லும் இந்த கார் காட்சிப்படுத்தப்பட இருக்கின்றது.

Toyota urban cruiser ev unveiled

மக்கள் மனதை கவரும் நோக்கத்திலேயே இந்த ஆட்டோ ஷோ-க்கள் வாயிலாக அக்கார் காட்சிப்படுத்தப்பட இருக்கின்றது. இந்த காரை இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளில் டொயோட்டா விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், 49 kWh மற்றும் 61 kWh ஆகிய பேட்டரி பேக் தேர்வுகளே டொயோட்டா அர்பன் க்ரூஸர் இவி-யில் வழங்கப்பட இருக்கின்றது.

இதில் சிறிய பேட்டரி பேக் தேர்வில் 144 எச்பி மற்றும் 189 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட மின்சார மோட்டாரும், பெரிய பேட்டரி பேக்கில் 174 பிஎச்பி மற்றும் 189 என்எம் டார்க்கை உருவாக்கும் திறன் கொண்ட மின்சார மோட்டாரும் வழங்கப்பட இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.

இதேபோல், இதன் ரேஞ்ச் திறனும் ஓர் முழு சார்ஜில் 430 கிமீ முதல் 550 கிமீ வரையில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரேஞ்ச் தருவதில் மட்டுமல்ல சிறப்பம்சங்களைத் தாங்கியிருப்பதிலும் இந்த கார் மிக சிறந்ததாக இருக்கும் என தெரிகின்றது. அந்தவகையில், அடாஸ் (ADAS) அம்சம் இந்த காரில் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த அம்சத்தின் வாயிலாக அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், ப்ரீ கொலிசன் சிஸ்டம், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் லேன் டிபார்ச்சர் அலர்ட் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொள்ள முடியும். இதுதவிர, 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா மற்றும் 6 ஏர் பேக்குகள் உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றன.

பயணிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும் பொருட்டே இந்த அம்சத்தை டொயோட்டா வழங்கி இருக்கின்றது. இதுதவிர, பயணத்தை சுவாரஷ்யமானதாக மாற்றும் பொருட்டு 10.1 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் உள்ளிட்டவையும் டொயோட்டா அர்பன் க்ரூஸரில் வழங்கப்பட இருக்கின்றது.

இதுமட்டுமில்லைங்க, ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு அம்சம் உள்ளிட்டவையும் இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றன. இதுமட்டுமில்லைங்க, சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட் உள்ளிட்ட அம்சங்களும் இநத் காரில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த பிரிவின் மகுடம் சூடப்படாத மன்னனாக டாடா இருந்து வந்த நிலையில், அந்த இடத்தை எம்ஜி ஆக்கிரமிப்பு செய்திருக்கின்றது. இந்த நிலையிலேயே இவர்கள் அனைவருக்கும் டஃப் கொடுக்கும் விதமாக களத்தில் டொயோட்டாவும் தன்னுடைய அர்பன் க்ரூஸர் இவி வாயிலாக மோத இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, December 13, 2024, 5:00 [IST]
English summary
Toyota urban cruiser ev unveiled key features specifications and launch timeline
மேலும்... #toyota #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+