போட்டியாளர்களின் சிம்ம சொப்பனம்.. உண்மையிலேயே டொயோட்டாவின் இந்த கார் மிக சிறந்த போட்டியாளன்-தாங்க!

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), இந்தியாவின் எஸ்யூவி (SUV) கார் சந்தையில் வலுவான போட்டியாளராக உருவெடுத்து உள்ளது. குறிப்பாக காம்பேக்ட் எஸ்யூவி (Compact SUV) கார் பிரிவில் விற்பனையில் உள்ள மற்ற கார் மாடல்களுக்கு மிக சிறந்த போட்டியாளனாக இது உருவெடுத்து இருக்கின்றது. அதிக பிரீமியம் மற்றும் ஈர்க்கக் கூடிய எரிபொருள் செயல்திறன், அதாவது மிக சிறந்த மைலேஜ் திறன் ஆகியவற்றை இந்த கார் மாடல் கொண்டிருப்பதால் இந்தியர்கள் பலரின் ஃபேவரிட்டான கார் மாடலாக அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மாறி இருக்கின்றது.

இந்த பதிவில் டொயோட்டா அர்பன் க்ரூரஸ் அதன் போட்டியாளர்களுக்கு எந்தெந்த விஷயங்களில் மிகப் பெரிய எதிராளியாக உள்ளது என்பது பற்றிய விபரங்களையே பார்க்க உள்ளோம். விலை, மைலைஜ் மற்றும் செயல் திறன் உள்ளிட்டவற்றிலேயே பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Toyota urban cruiser hyryder

எரிபொருள் திறன் ஒப்பீடு: அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கே 28 கிமீ வரையில் மைலேஜை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். அதேவேளையில், இதன் ஹைபிரிட் அல்லாத தேர்வு லிட்டர் ஒன்றிற்கு 19.39 கிமீட்டருக்கும் அதிகமாக மைலேஜை வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இதன் வாயிலாக எரிபொருள் சிக்கனம் மற்றும் மைலேஜ் ஆகியவற்றில் மிக சிறந்ததாக ஹைரைடர் இருப்பது தெளிவாக தெரிகின்றது. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் இதன் போட்டியாளர்களாக கருதப்படும் ஹூண்டாய் க்ரெட்டாவோ லிட்டர் ஒன்றிற்கு 17.4 கிமீட்டர் வரையிலான மைலேஜையே வழங்குகின்றது. இதைப்போல மற்ற போட்டியாளர்களுக்கும் ஹைரைடரைக் காட்டிலும் சற்று குறைவான மைலேஜையே வழங்கிக் கொண்டிருக்கின்றன.

எஞ்சின் விவரக்குறிப்புகள்: ஹைரைடர் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் எலக்ட்ரிக் மோட்டாரும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஹைபிரிட் சிஸ்டத்தினாலேயே ஹைரைடர் அதிக மைலைஜை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் போட்டி கார் மாடல்களில் இந்த தொழில்நுட்ப வசதி வழங்கப்படவில்லை. உதாரணமாக, ஹூண்டாய் க்ரெட்டாவில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்சின் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது.

விலை மற்றும் மாறுபாடுகள்: அர்பன் க்ரூஸர் ஹைரைடரின் ஆரம்ப விலை ரூ.11.14 லட்சம் முதல் ரூ.20.19 லட்சம் வரை ஆகும். வழக்கமான பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் ஹைபிரிட் என பலதரப்பட்ட தேர்வுகள் இந்த கார் மாடலில் வழங்கப்படுகின்றது. ஹூண்டாய் கிரெட்டா ரூ. 11 லட்சம் தொடங்கி ரூ. 20.15 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இந்த கார் மாடலில் வழக்கமான பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய ஆப்ஷன்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன.

சிறப்பம்சங்கள்: இந்த விஷயத்திலும் மற்ற போட்டியாளர்களைக் காட்டிலும் கொஞ்சம் பெஸ்ட்டாகவே டொயோட்டா ஹைரைடர் இருக்கின்றது. இந்த கார் மாடலில் 9 இன்ச் தொடுதிரை, இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம் மற்றும் 360 டிகிரி கேமரா உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் போட்டி கார் மாடல்களிலும் இதே மாதிரியான அம்சங்களைக் காண முடிகின்றது. ஆகையால், இந்த விஷயத்தில் அனைத்தும் சமமானதாகவே காட்சியளிக்கின்றன.

சந்தை நிலை: டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் அதிகம் பிரீமியம் அம்சங்கள், எரிபொருள் திறன் கொண்ட எஸ்யூவியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் ஹைப்ரிட் தொழில்நுட்பம் ஹூண்டாய் க்ரெட்டா போன்ற போட்டியாளர்களை விட மிக சிறந்ததாகக் காட்டுகின்றது. இத்துடன், நம்பகத்தன்மைக்கான டொயோட்டாவின் நற்பெயரும் இந்த காருடன் இருப்பதால் இந்திய நுகர்வோர் மத்தியில் இதற்கு நல்ல ஈர்ப்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹைரைடருக்கான ஆரம்ப வாடிக்கையாளர் கருத்து நேர்மறையானது, பலர் அதன் எரிபொருள் திறன் மற்றும் மேம்பட்ட அம்சங்களைப் பாராட்டினர். இருப்பினும், சிலர் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது அதிக விலையை ஹைரைடர் கொண்டிருப்பதாக கூறுகின்றனர். இதை நாங்களும் ஒப்புக் கொள்கின்றோம். இருப்பினும், காரின் ஒட்டுமொத்த சிறப்புகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இந்த விலை அதிகம் பெரியதாக தெரியவில்லை என்றே கூறலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, June 3, 2024, 17:56 [IST]
English summary
Toyota urban cruiser hyryder has emerged as a strong contender in the indian suv market
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+