இவ்ளோ மைலேஜ் தருதா! இது தெரிஞ்சா அம்பானியே ஈகோ-வை எல்லாம் விட்டுட்டு இந்த சாதாரண காரை வாங்க வந்துருவாரு!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder). இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி டொயோட்டா நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய சந்தையில் 4,976 அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4,201 ஆக மட்டுமே இருந்தது. இது 18 சதவீத வளர்ச்சி ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் ஆரம்ப விலை 11.14 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 20.19 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரில், 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் உடன், இ-சிவிடி கியர் பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு 27.97 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதவிர 1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர இந்த காரில், 1.5 லிட்டர் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனும் கொடுக்கப்படுகிறது.
இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் சிஎன்ஜி மாடல் ஒரு கிலோவிற்கு 26.6 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்த காரில் பல்வேறு அதிநவீன வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) போன்ற கார்களுடன், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் போட்டியிட்டு வருகிறது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 5 சீட்டர் மாடலில் மட்டுமே டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் கிடைத்து கொண்டுள்ளது. ஆனால் கூடிய விரைவில் இதன் 7 சீட்டர் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என நாங்கள் கருதுகிறோம். 7 சீட்டர் மாடல் என்பதால், தற்போதைய மாடலை காட்டிலும், விலை சற்று அதிகமாக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








