28 கிமீ மைலேஜ் தரும் டொயோட்டா காரின் விலை இவ்ளோதானா! பெங்களூர்ல தண்ணீக்கு நிக்கற மாதிரி வரிசைல நிக்கறாங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder). இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதன் நடப்பு 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி டொயோட்டா நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5,601 அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3,307 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 69 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் அசத்தியுள்ளது.

Toyota Urban Cruiser Hyryder

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மிட்-சைஸ் எஸ்யூவி காரின் இந்த மிக பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு பின்னால் பல்வேறு முக்கியமான காரணங்கள் உள்ளன. இதில், சரியான விலை (Price) நிர்ணயம் மற்றும் அட்டகாசமான மைலேஜ் (Mileage) ஆகியவை மிகவும் முக்கியமான காரணங்கள் ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் ஆரம்ப விலை 11.14 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 20.19 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

Toyota Urban Cruiser Hyryder Front Design

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் பெட்ரோல்/மேனுவல் மாடல் ஒரு லிட்டருக்கு 21.12 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் மாடல் ஒரு லிட்டருக்கு 20.58 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் இதன் சிஎன்ஜி/மேனுவல் மாடல் ஒரு கிலோவிற்கு 26.60 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என டொயோட்டா கூறியுள்ளது.

இவை எல்லாவற்றையும் விட இந்த காரின் ஹைப்ரிட் (பெட்ரோல்/ஆட்டோமேட்டிக்) மாடல் 27.97 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என டொயோட்டா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் தவிர பெட்ரோல்/மேனுவல் கலவையில், ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ஒரு லிட்டருக்கு 19.39 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும்.

இந்த சரியான விலை நிர்ணயம் மற்றும் சிறப்பான மைலேஜ் ஆகிய காரணங்களால்தான், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரில் பல்வேறு அதிநவீன வசதிகளும் வழங்கப்படுகின்றன.

இவை அனைத்தும் ஒன்று சேர்ந்துதான், இந்த காரை வாங்க வாடிக்கையாளர்களிடையே கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் நகரில் தற்போது குடிநீருக்கு கடுமையான தட்டுப்பாடு (Bangalore Water Crisis) ஏற்பட்டுள்ளது. குடிநீருக்காக மக்கள் பல இடங்களில் காலி குடங்களுடன் காத்து கிடக்கின்றனர். அதேபோன்று காத்திருப்பு காலத்தையும் (Waiting Period) பொருட்படுத்தாமல், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரை வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் பலரும் போட்டி போடுகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹோண்டா எலவேட் (Honda Elevate), கியா செல்டோஸ் (Kia Seltos), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் மாருதி க்ராண்ட் விட்டாரா (Maruti Grand Vitara) ஆகிய கார்களுக்கு, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, March 11, 2024, 23:55 [IST]
English summary
Toyota urban cruiser hyryder sales report february 2024 all details here
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+