கோடி ரூபாய் கார் எல்லாம் தோற்றுப் போகும்... சில இலட்சங்களில் கிடைக்கக்கூடிய டொயோட்டா காரின் தோற்றமா இது!!

டொயோட்டா (Toyota) நிறுவனம் தீபாவளியை முன்னிட்டு தொடர்ச்சியாக ஸ்பெஷல் எடிசன் கார்களை அறிமுகம் செய்து வருகிறது. சமீபத்தில்தான், அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Urban Cruiser Hyryder) காரில் புதிய ஃபெஸ்டிவல் லிமிடெட் எடிசனை அறிமுகம் செய்தது. தற்போது, குறிப்பிட்ட சில டொயோட்டா கார்களின் புதிய ஸ்பெஷல் எடிசன்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. எந்தெந்த டொயோட்டா கார்களில் ஸ்பெஷல் எடிசன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்பதையும், அவற்றில் கொண்டுவரப்பட்டுள்ள அம்சங்களை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வரவிருக்கும் தீபாவளி பண்டிகை காலத்தை டார்க்கெட் செய்து நிறைய புது, புது கார்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. டொயோட்டா மட்டுமின்றி, இன்னும் நிறைய கார் நிறுவனங்கள் ஸ்பெஷல் எடிசன் கார்களை அறிமுகம் செய்துள்ளன. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கார்களில் சிறு, சிறு மாற்றங்களை செய்து ஸ்பெஷல் எடிசன்களாக அறிமுகம் செய்கின்றனர்.

toyota hyryder signature edition

டொயோட்டாவில் இருந்து அர்பன் க்ரூஸர் ஹைரைடர் லிமிடெட் எடிசன் மட்டுமில்லாமல், சமீபத்தில் டொயோட்டா டைசர் காரிலும் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், டொயோட்டா ஃபார்ச்சூனர், இன்னோவா ஹைகிராஸ், ஹைரைடர் மற்றும் கிளான்ஸா காரில் புதிய ஸ்பெஷல் எடிசன் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சிக்னெச்சர் எடிசன் என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசனில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் மெர்சிடிஸ-மேபக் கார்களை போன்று லக்சரியான தோற்றத்தில் ஜொலிக்கிறது. அதாவது, மேபக் கார்களை போன்று மேலே ஒரு நிறத்திலும் கீழே ஒரு நிறத்திலும் என ட்யூயல்-டோன் நிறங்களில் ஹைரைடர் சிக்னெச்சர் எடிசன் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

toyota hyryder signature edition

மெர்சிடிஸ் கார்கள் பென்ஸ், ஏஎம்ஜி, மேபக் என 3 விதமாக விற்பனை செய்யப்படுகின்றன. இதில் மெர்சிடிஸ்-மேபக் கார்கள் விலைமிக்கவை ஆக விளங்குகின்றன. அதற்கேற்ப மெர்சிடிஸ்-மேபக் கார்கள் ஒட்டுமொத்தமாக மிகவும் லக்சரியானவை ஆக உருவாக்கப்படுகின்றன. அந்த அளவிற்கு இல்லையென்றாலும், புதிய ஹைரைடர் சிக்னெச்சர் எடிசன் நமக்கு மேபக் கார்களை நினைவுப்படுத்துகிறது.

ஹைரைடர் சிக்னெச்சர் எடிசன் ஒன்று டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றின் வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. மற்ற டொயோட்டா ஃபார்ச்சூனர், இன்னோவா ஹைகிராஸ் மற்றும் கிளான்ஸா கார்களின் புதிய சிக்னெச்சர் எடிசன்களும் இவ்வாறான தோற்றத்தை கொண்டுள்ளனவா என்பது உறுதியாக தெரியவில்லை. ஏனெனில், ஹைரைடர் சிக்னெச்சர் எடிசனின் தோற்றம் மட்டுமே தற்போதைக்கு வெளியாகி உள்ளது.

toyota hyryder signature edition

காரின் வெளிப்பக்கத்தில் இரு நிறங்களும் இணையும் பகுதியில் இளம் நீல நிறம் அருமையாக கொடுக்கப்பட்டுள்ளது. காரின் வெளிப்பக்கத்தில் நிறைய இடங்களில் பளபளக்கக்கூடிய பிரீமியம் தரத்திலான ஃபினிஷிங்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஹெட்லைட்களை சுற்றிலும் வழங்கப்பட்டுள்ள பளபளக்கும் கருப்பு நிறத்திலான சரவுண்டிங்க்ஸும், புதிய டிசைனிலான அலாய் சக்கரங்களும் ஹைரைடர் சிக்னெச்சர் எடிசன் காரின் முக்கியமான சிறப்பம்சங்கள் எனலாம்.

சக்கரங்களில் பிரேக் டிஸ்க்குகளும் நீல நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்பெஷல் எடிசன் காருக்கு உள்ளே மென்மையான மெட்டீரியல்கள் மற்றும் லெதர்களை கொண்டு வடிவமைத்துள்ளனர். காரின் வெளிப்பக்க நீலம்- சில்வர் கலர் காம்பினேஷனுக்கு ஏற்ப காருக்கு உள்ளே இளம் நீல நிறத்தில் கேபின் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டேரிங் சக்கரம் கூட நீல நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாகவே ஸ்பெஷல் எடிசன் கார்கள் வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியாக அறிமுகம் செய்யப்படுகின்றன. அதாவது, வழக்கமான காரில் இருந்து வேறுப்பட்டு புதுமையான காரை வாங்க விரும்புபவர்களுக்காக. டொயோட்டாவில் இருந்து அவ்வப்போது ஸ்பெஷல் எடிசன் கார்கள் விற்பனைக்கு வருவது வழக்கமே. ஆனால், இந்த தீபாவளிக்கு கொஞ்சம் அதிகமாகவே விற்பனைக்கு வந்துள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, October 18, 2024, 18:23 [IST]
English summary
Toyota urban cruiser hyryder signature edition detailing video check all details here
மேலும்... #toyota #new launches #diwali #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X