29 கிமீ மைலேஜ் தரும் டொயோட்டா கார் களமிறங்கியது... விலை எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே ஷோரூமுக்கு கௌம்பிருவீங்க!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் (Toyota Urban Cruiser Taisor) கார், இன்று (ஏப்ரல் 3) அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது காம்பேக்ட் எஸ்யூவி (Compact SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.
இந்திய சந்தையில் ஏற்கனவே மிகவும் பிரபலமாக உள்ள மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) காரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன்தான், டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலாக இருந்தாலும் கூட, மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் உடன் ஒப்பிடும்போது, டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் காரில், ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் காரின் டிசைனை (Design) பொறுத்தவரையில், முன் பகுதியில் ரீ-டிசைன் செய்யப்பட்ட க்ரில் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பம்பர்களின் டிசைனும் சற்றே மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்களுக்கு, புதிய டிசைனும் கொடுக்கப்பட்டுள்ளது.
வசதிகளை பொறுத்தவரையில் (Features), வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதியுடன் கூடிய 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே போன்றவை மிகவும் முக்கியமான அம்சங்கள் ஆகும்.

பாதுகாப்பை (Safety) பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், இபிடி உடன் ஏபிஎஸ் போன்றவை குறிப்பிடத்தக்க வசதிகளாக இருக்கின்றன. செயல்திறனை பொறுத்தவரையில், டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் காரில், பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அவை 1.2 லிட்டர் 4 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் ஆகியவை ஆகும். இதில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் உடன் சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதில், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மறுபக்கம் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சிஎன்ஜி இன்ஜன் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்ஜி மாடல் சிறப்பான மைலேஜ் (Mileage) வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் இந்த சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 28.51 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக களமிறக்கப்பட்டுள்ள டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் காரிலும் இதே அளவிற்கான மைலேஜ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் காரின் ஆரம்ப விலை வெறும் 7.74 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 13.04 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா நெக்ஸான் (Tata Nexon), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), ரெனால்ட் கைகர் (Renault Kiger), நிஸான் மேக்னைட் (Nissan Magnite), மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) ஆகிய கார்களுக்கு, டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.


Click it and Unblock the Notifications








