29 கிமீ மைலேஜை வாரி வழங்கும் டொயோட்டா காரின் விலை இவ்ளோதானா! டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியதால் உற்சாகம்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx). இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் (Toyota Urban Cruiser Taisor) கார் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் டெலிவரி (Delivery) பணிகள் வரும் மே மாதத்தில் இருந்து தொடங்கப்படவுள்ளன. இதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள டொயோட்டா நிறுவனத்தின் டீலர்ஷிப்களுக்கு அர்பன் க்ரூஸர் டைசர் கார் தற்போது வர தொடங்கியுள்ளது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் காரின் டெலிவரிக்காக காத்து கொண்டிருப்பவர்களுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் கார் மொத்தம் 5 வேரியண்ட்களில் (Variants) விற்பனைக்கு கிடைக்கும். அவை E, S, S+, G மற்றும் V ஆகியவை ஆகும்.

Toyota Urban Cruiser Taisor

இந்திய சந்தையில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் காரின் ஆரம்ப விலை 7.74 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 13.04 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் காரில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் (Petrol) மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த கார் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன் உடனும் கிடைக்கும். சிஎன்ஜி மாடலில் பொருத்தப்பட்டிருப்பது, 1.2 லிட்டர் இன்ஜின் ஆகும்.

Toyota Urban Cruiser Taisor Display

டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் காரின் சிஎன்ஜி இன்ஜின், ஒரு கிலோவிற்கு 28.50 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்மிஷனை (Transmission) பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல், 5 ஸ்பீடு ஏஎம்டி மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் (Gear Box) ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வசதிகளை (Features) பொறுத்தவரையில், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்றவை டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் காரின் மிக முக்கியமான அம்சங்களாக உள்ளன.

இதுதவிர ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விம் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற வசதிகளும், டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் காரில் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், ரியர் டீஃபாகர், சென்சார்களுடன் பார்க்கிங் கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா ஆகிய 2 நிறுவனங்களும் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன. இந்த 2 நிறுவனங்களின் கூட்டணியில் வெளிவந்த பல்வேறு கார்கள் வெற்றி பெற்றுள்ளன. இந்த வரிசையில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் காரும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்றை பெறும் என நாங்கள் கருதுகிறோம்.

கியா சொனெட் (Kia Sonet), டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) போன்ற கார்களுக்கு, டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

More from DriveSpark

Article Published On: Monday, April 29, 2024, 13:58 [IST]
English summary
Toyota urban cruiser taisor reaches dealerships delivery soon
மேலும்... #டொயோட்டா #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+