காருக்கு பதிலா இந்த டிரக்க வாங்கலாம் போல! ரொம்ப அழகா இருக்கு! வெளிநாட்டு தயாரிப்பே இது முன்னாடி மண்டியிடனும்!
கர்நாடகா மாநிலம், பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் த்ரேஷா மோட்டார்ஸ் (Tresa Motors). இது ஓர் மீடியம் மற்றும் ஹெவி எலெக்ட்ரிக் டிரக் உற்பத்தி நிறுவனம் ஆகும். இதுவே விஓ.2 (VO. 2) எனும் மின்சாரத்தில் இயங்கும் டிரக் (electric truck)-கை வெளியீடு செய்திருக்கின்றது.
இதன் வெளியீட்டின் வாயிலாக இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் டிரக் உற்பத்தியாளர் எனும் வரலாற்று சிறப்புமிக்க மகுடத்தை த்ரேஷா மோட்டார்ஸ் சூடியிருக்கின்றது. விரைவில் இந்த எலெக்ட்ரிக் டிரக்கை சோதனையோட்டம் செய்ய நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. அட்வான்ஸ்டு டெலிமெட்ரி சிஸ்டம் மற்றும் பிஎம்எஸ் (BMS) அம்சம் கொண்ட 800 வோல்ட் மாடுலர் பேட்டரி பேக் (800V Modular Battery Pack) தொகுப்பைக் கொண்டதாகவும் இந்த விஓ.2 எலெக்ட்ரிக் டிரக் காட்சியளிக்கின்றது.

இதுதவிர, புதிய ஸ்டியரிங் சிஸ்டம், நிறுவனமே உருவாக்கிய பகல் நேரத்தில் ஒளிரும் மின் விளக்குகள் மற்றும் ஹீட் பம்ப் (Heat Pump) ஆகிய வசதிகளையும் இந்த டிரக் தாங்கி இருக்கும். ஹீட் பம்ப், இந்த அம்சமே வாகனத்தின் கேபின் தொடங்கி அனைத்திற்குமான கூலிங் சிஸ்டமாக வேலை செய்யும் என த்ரேஷா மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கின்றது.
இந்த எலெக்ட்ரிக் டிரக்கை பன்முக வழிகளில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. அந்தவகையில், சரக்கு மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்லும் பிரிவில் இந்த வாகனம் மிக சிறந்த ஈகோ-ஃப்ரெண்ட்லி வாகனமாக செயல்படும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

குறிப்பாக, ஆன்லைன் வர்த்தக துறையில் இந்த வாகனத்தின் பயன் மிகப் பெரிய அமையும் என்றும் நிறுவனம் கூறி இருக்கின்றது. மேலும், மின்சார வாகனங்கள் உட்பட இன்றைய மாடர்ன் கால வாகனங்கள் பலவற்றில் சப் சிஸ்டம் (sub-system)-களைக் கன்ட்ரோல் செய்ய 100 கணக்கான இசியூ (ECU)-க்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.
ஆனால், இந்த எலெக்ட்ரிக் டிரக்கில் அனைத்து இசியூ-க்களும் மண்டல கட்டமைப்பு ஒன்றுடன் இணைக்கப்பட்டு இருக்கும். இதன் சுமைகள் அனைத்தையும் என்விடியா ஜிபியூ (NVIDIA GPU) உடன் பகிரப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே இந்த இசியூ-க்கள் மிக சிறப்பாகவும், பெரிய அளவில் சுமையில்லாமலும் செயல்படும்.
மிக முக்கியமாக ஏஐ (AI) மற்றும் டெலிமேட்டிக் அம்சங்களுக்கு தேவையான வசதிகளை இந்த கருவி செய்துக் கொடுக்கும். இதன் டெலிமேட்டிக் சிஸ்டம் சுமார் 500 கண்கானிப்பு பாயின்டுகளைக் கொண்டிருக்கின்றது. இவை தொடர்ச்சியாக வேலை செய்து விபத்தில்லா பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும். ஆகையால், மிக சிறந்த மற்றும் பாதுகாப்பான ரைடு அனுபவம் இந்த டிரக்கில் கிடைக்கும்.
இதுதவிர இன்னும் பல சிறப்பம்சங்களை இந்த வாகனத்தில் த்ரேஷா மோட்டார்ஸ் வாரி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், புதிய சென்ட்ரல் ஸ்டியரிங் வீல் மற்றும் மிகவும் சௌகரியமான ரைடு அனுபவத்தை வழங்கும் ஏர்-சஸ்பெண்டட் (air-suspended) இருக்கை ஆகியவற்றை இந்த நிறுவனம் வழங்கி இருக்கின்றது.
இந்த இருக்கையை டிரைவர் அவரின் உடலுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள முடியும். மேலும், இந்த டிரக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 24,000 என்எம் டார்க்கை வழங்கும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 120 கிமீ ஆகும்.
இத்துடன், விஓ.2 வில் 300KWH பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த பேட்டரி பேக்கை 10 சதவீதம் தொடங்கி 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 20 நிமிடங்களே போதுமானது ஆகும். இதை முழுமையாக சார்ஜ் செய்தால் 350 கிமீ அதிகமான ரேஞ்ஜைப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வாடிக்கையாளர்கள் அதிக பயன்பாட்டை குறைவான செலவில் வழங்கும் வகையில் இந்த வாகனத்தை நிறுவனம் வடிவமைத்திருப்பதாக தெரிவித்து இருக்கின்றது. ஆனால், இது எப்போது விற்பனைக்கு வரும் என்கிற விபரங்கள் வெளியிடப்படவில்லை. இதேபோல், வாகனம் பற்றிய இன்னும் முக்கிய தகவல்களை நிறுவனம் வெளியிடவில்லை. அவற்றை நிறுவனம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, இந்த எலெக்ட்ரிக் டிரக்கை நிறுவனம் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் டிரக் பிரிவு இப்போதும் ஆரம்ப புள்ளியிலேயே உள்ளது. ஆமாங்க, கனரக எலெக்ட்ரிக் டிரக் பிரிவில் ஒரு மாடல் கூட விற்பனையில் இல்லை. இந்த பிரிவை விரைவில் த்ரேஷா மோட்டார்ஸ் அலங்கரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு சான்றாகவே விஓ.2 வெளியீடு சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








