வாங்கி 15 வருஷம் ஆன டொயோட்டா இன்னோவா காரா இது! இப்பதான் ஷோரூம்ல இருந்து எடுத்துட்டு வந்த மாதிரி மின்னுது!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா (Toyota Innova). அதிகம் பேர் பயணம் செய்ய முடியும், பல லட்சம் கிலோ மீட்டர்களுக்கு எந்தவிதமான பிரச்னையும் இல்லாமல் ஓடக்கூடிய நம்பகமான இன்ஜின் போன்ற காரணங்களால்தான், டொயோட்டா இன்னோவா புகழ்பெற்று விளங்கியது.
தற்போது விற்பனையில் இல்லை என்றாலும் கூட, இந்திய சாலைகளில் இன்னமும் ஏராளமான டொயோட்டா இன்னோவா கார்களை உங்களால் பார்க்க முடியும். டொயோட்டா இன்னோவா காரின் உரிமையாளர்கள் பலர், பழைய மாடலை, புதிது போல் மாற்றி தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த வரிசையில் ஒரு உரிமையாளர் தனது பழைய டொயோட்டா இன்னோவா காரை, ஷோரூம் கண்டிஷனுக்கு மாற்றியுள்ளார்.

புனே (Pune) நகரில் செயல்பட்டு வரும் ப்ரோட்டோமோட்டிவ் (Brotomotiv) நிறுவனம்தான், பழைய டொயோட்டா இன்னோவா காரை புதிது போல் மாற்றியுள்ளது. இது மிகவும் பிரபலமான ஒரு கார் ஒர்க் ஷாப் (Car Work Shop) ஆகும். கடந்த காலங்களில் நிறைய பழைய கார்களை அவர்கள் ஷோரூம் கண்டிஷனுக்கு மாற்றியுள்ளனர்.
இந்த பணிகளை எல்லாம் வீடியோவாக எடுத்து, யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடுவதை அவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இந்த வரிசையில் அவர்கள் வெளியிட்டுள்ள வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில், 15 வயதான டொயோட்டா இன்னோவா கார் ஒன்றை அவர்கள் புத்தம் புதியது போல் மாற்றியுள்ளனர்.

இது 2009 மாடல் கார் ஆகும். ப்ரோட்டோமோட்டிவ் நிறுவனம் இந்த 15 வயதான டொயோட்டா இன்னோவா காரை புதியது போல் மட்டும் மாற்றவில்லை. கூடவே டைப் 2-ல் இருந்து, டைப் 4-ஆகவும் மாற்றியுள்ளனர். டொயோட்டா இன்னோவா காரில், டைப் 1, டைப் 2, டைப் 3 மற்றும் டைப் 4 என வெர்ஷன்கள் இருந்தன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இந்த வீடியோவில் நாம் பார்ப்பது டைப் 2 வெர்ஷன். அதை 'பாடி கிட்' உதவியுடன், டைப் 4 ஆக இவர்கள் மாற்றியுள்ளனர். இந்த டைப் 2 டொயோட்டா இன்னோவா காரின் இன்ஜின் 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்னமும் அருமையான கண்டிஷனில் உள்ளது.
எனவே இந்த டைப் 2 டொயோட்டா இன்னோவா காரை, டைப் 4-ஆக மாற்றி தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என அதன் உரிமையாளர் விரும்பியுள்ளார்.இதன் காரணமாகவே ப்ரோட்டோமோட்டிவ் நிறுவனத்தின் உதவியுடன், அவர் நாடியுள்ளார். அவர்களும் இந்த சவாலான பணியை ஏற்றுக்கொண்டு, வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த டைப் 2 டொயோட்டா இன்னோவா கார் சிதிலமடைந்த நிலையில், ப்ரோட்டோமோட்டிவ் நிறுவனத்தின் ஒர்க் ஷாப்பிற்கு வருவதை நம்மால் வீடியோவில் பார்க்க முடிகிறது. அதே சமயம் இந்த வீடியோவின் இறுதியில், அந்த கார் புதிது போல் மாற்றப்பட்டிருப்பதை காட்டுகின்றனர்.
உண்மையில் இந்த டைப் 2 டொயோட்டா இன்னோவா கார் நம்ப முடியாத அளவிற்கு உருமாற்றம் அடைந்துள்ளது. ஷோரூமில் இருந்து டெலிவரி எடுத்து வந்து ஒரு சில மணி நேரம் மட்டுமே ஆகிறது என்பது போல் அந்த கார் இருக்கிறது. ப்ரோட்டோமோட்டிவ் நிறுவன ஊழியர்களின் கடுமையான உழைப்பே இதற்கு காரணம்.


Click it and Unblock the Notifications








