புதுசா கார் வாங்க போறீங்களா? அடுத்தடுத்துனு வரிசையா 4கார் அறிமுகமாக இருக்கு.. அதுவும் அடுத்தடுத்த வாரத்திலேயே!
நீங்கள் புது கார் வாங்கும் பிளானில் இருக்கீங்களா. அப்போது இது உங்களுக்கான நியூஸ்தான். இந்தியாவில் அடுத்தடுத்துனு அடுத்து வரும் வாரங்களில் சில புதிய கார்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. புதுப்பிக்கப்பட்ட மற்றும் புதுமுக கார்கள் இந்திய சந்தையை விரைவில் அலங்கரிக்க இருக்கின்றன. அவற்றின் லிஸ்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம்.
அதாவது, அடுத்தடுத்த வாரங்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகக் கூறப்படும் நான்கு முக்கியமான கார் மாடல்களின் லிஸ்டையும், அவற்றில் உள்ள சிறப்புகள் பற்றிய தகவலையுமே இந்த பதிவில் விரிவாக தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஹூண்டாய் கிரெட்டா என் லைன் (Hyundai Creta N Line): இந்தியர்களின் ஃபேவரிட் எஸ்யூவி கார் என ஹூண்டாயின் கிரெட்டாவை கூறலாம். இந்தியாவில் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு யூனிட் கிரெட்டா விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இத்தகைய தரமான கார் மாடலின் என் லைன் வெர்ஷனையே ஹூண்டாய் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.
அதன் அறிமுக நாள் வருகின்ற மார்ச் 11 என தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கமான கிரெட்டாவைக் காட்டிலும் அதிக திறனை வெளியேற்றக் கூடிய தயாரிப்பே கிரெட்டா என் லைன் ஆகும். அதிக திறனை வெளிப்படுத்தும் காரை விரும்புவோரைக் கவரும் பொருட்டே இதனை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வருகின்றது ஹூண்டாய்.

வழக்கமான கிரெட்டாவிற்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பைப் போலவே இதற்கும் நம்மவர்கள் மத்தியில் நல்ல சூப்பரான டிமாண்ட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரில் பிரத்யேகமாக 1.5 லிட்டர் பெட்ரோல் மோட்டாரே எதிர்பார்க்கப்படுகின்றது. இது அதிகபட்சமாக 160 பிஎஸ் மற்றும் 253 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.
சஸ்பென்ஷன் மற்றும் மற்ற விஷயங்களில் வழக்கமான கிரெட்டாவை போலவே கிரெட்டா என்-ம் இருக்கும். அதேவேளையில், அதிக திறன் வெளிப்பாட்டிற்கு ஏற்ப ட்யூன்-அப் சஸ்பென்ஷனிலும், மேலும், கவர்ச்சியான தோற்றம் அதன் வெளிப்புறத்திலும் எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், கிரில் மற்றும் பம்பர் உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

2024 டாடா நெக்ஸான் டார்க் எடிசன் (2024 Tata Nexon Dark Edition): டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றே நெக்ஸான். இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எஸ்யூவி ரக கார் மாடல்களில் ஒன்றாகவும் நெக்ஸான் காட்சியளிக்கின்றது. இது அதிக பாதுகாப்பிற்கு பெயர்போனதாகக் காட்சியளிக்கின்றது.
இந்த விஷயத்தில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களை அது பெற்றிருக்கின்றது. இத்தகைய கார் மாடலையே டாடா மோட்டார்ஸ் பல அவதாரங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அதாவது, ஐசிஇ மற்றும் எலெக்ட்ரிக் போன்ற அவதாரங்களிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த நிலையிலேயே 2024 நெக்ஸான் டார்க் எடிசனை விற்பனையில் இருக்க டாடா மோட்டார்ஸ்.

சமீபத்தில் இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதை தழுவிய அதிக கவர்ச்சியான அம்சங்கள் கொண்டதே இந்த நெக்ஸான் டார்க் எடிசன் ஆகும். இதன் அறிமுகம் மார்ச் தொடக்கத்திலேயே அரங்கேற இருப்பதாக இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போதைய நிலவரப்படி இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு விதமான மோட்டார் ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
விரைவில் இதில் சிஎன்ஜி தேர்வும் எதிர்பார்க்கப்படுகின்றது. ரூ. 8.14 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தே இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். புதிய நெக்ஸான் டார்க் எடிசன் ரூ. 9 லட்சம் அல்லது ரூ. 10 லட்சம் என்கிற விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 300 ஃபேஸ்லிஃப்ட் (Mahindra XUV300 Facelift): மஹிந்திரா நிறுவனத்தின் மிக மிக சூப்பரான தயாரிப்புகளில் ஒன்றே எக்ஸ்யூவி300 ஆகும். இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இதுவும் டாடா நெக்ஸானைப் போல அதிக பாதுகாப்பு திறன்மிக்கது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த காரையே ஃபேஸ்லிஃப்ட் செய்து விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது, மஹிந்திரா. இதன் அறிமும் அடுத்து வரும் ஒரு சில வாரங்களிலேயே அரங்கேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் மஹிந்திரா வெளியிடவில்லை. ஆகையால், இதன் வெளியீடு இன்னும் சில தினங்கள் தள்ளிப் போகலாம் என்றும் யூகிக்கப்படுகின்றது.
அதேவேளையில், இந்த காரை நிறுவனம் தீவிர சாலை பலபரீட்சையில் ஈடுபடுத்தி வருவதனால் எப்போது வேண்டுமானாலும் இந்த காரை மஹிந்திரா வெளியீடு செய்துவிடும் எக்ஸ்யூவி300 பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். வெளிப்புற தோற்றம் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றில் மிகப் பெரிய மாற்றங்களுடன் இந்த கார் உருவாக்கப்பட்டு இருப்பது கவனிக்கத்தகுந்தது. இதனாலேயே இதன் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.
பிஒய்டி சீல் இவி (BYD Seal EV): உலக புகழ்பெற்ற சீன மின்சார கார் உற்பத்தி நிறுவனமே பிஒய்டி. இந்த நிறுவனம் இப்போதைய நிலவரப்படி இரண்டே இரண்டு கார் மாடல்களை மட்டுமே நாட்டில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே தன்னுடைய இருப்பை வலுவாக்கும் பொருட்டு அந்த நிறுவனம் மூன்றாவது தயாரிப்பை இந்தியாவில் களமிறக்க போட்டிருக்கின்றது.
இதன் அடிப்படையிலேயே அதன் சீல் எனும் எலெக்ட்ரிக் செடான் ரக காரை விற்பனைக்குக் களமிறக்கும் முயற்சியில் பிஒய்டி களமிறங்கி இருக்கின்றது. டெஸ்லா மாடல்3 க்கு போட்டியாக உலக அளவில் விற்பனைக்குக் கிடைக்கும் ஓர் சூப்பரான மின்சார காரே இதுவாகும். இது ஓர் முழு சார்ஜில் 570 கிமீ ரேஞ்ஜை வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
மேலும், பிரீமியம் மற்றும் சொகுசு அம்சங்களையும் அதிக அளவில் இந்த கார் தாங்கி இருக்கும். இதன் அறிமுகம் மார்ச் 5 ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்டு உள்ளது. அன்றையே தினமே சீல் எலெக்ட்ரிக் காரின் விலைகள் தெரிய வரும். இந்த கார் சுமார் 50 லட்சத்திற்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன சந்தை வருடா வருடம் நல்ல வளர்ச்சியைக் கண்ட வண்ணம் இருக்கின்றது. இதற்கு சான்றாகவே சென்ற ஆண்டு இருக்கின்றது. இந்த ஆண்டிலும் நல்ல வரவேற்பை வாகன உலகம் காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை முன்னிட்டே வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் தயாரிப்புகளை விற்பனைக்குக் களமிறக்கிய வண்ணம் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications









