மாருதியில் இருந்து இந்த புது கார்களுக்கு தான் எல்லாரும் வெயிட்டிங்!! கம்மியான விலையில் வாங்கிடலாம்!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் பல்வேறு புதிய கார்களின் வடிவமைப்பில் ஈடுப்பட்டு வருகிறது. அதில் சில எலக்ட்ரிக் கார்களும் உள்ளன என்றாலும், மாருதி சுஸுகியின் அடையாளமே அதன் விலை குறைவான கார்களாகும். வருகிற புதிய 2024-25ஆம் நிதியாண்டில் சில விலை குறைவான கார்களை மாருதி சுஸுகி அறிமுகம் செய்ய உள்ளது. அவை என்னென்ன என்பதை இங்கே காணலாம்.

1. நியூ-ஜென்ரேஷன் ஸ்விஃப்ட்: இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் கார்களுள் ஒன்று ஸ்விஃப்ட் ஆகும். மேம்படுத்தப்பட்ட நெக்ஸ்ட்-ஜென்ரேஷன் ஸ்விஃப்ட் கார் கடந்த 2023ஆம் ஆண்டில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வெளியீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, இந்தியாவில் இன்னும் 2 மாதங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

upcoming affordable maruti suzuki cars

வெளிப்பக்கம் மற்றும் உட்பக்கத்தின் தோற்றத்தை புத்துணர்ச்சியானதாக பெற்றுள்ளது மட்டுமின்றி, ஜப்பானில் வெளியீடு செய்யப்பட்ட புதிய ஸ்விஃப்ட் காரில் புதிய மாடர்ன் வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, புதிய 1.2 லிட்டர் இசட் சீரிஸ் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது.

2. நியூ-ஜென்ரேஷன் டிசைர்: மேலே கண்ட ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் காரின் செடான் வெர்சனாக டிசைர் விளங்குகிறது. இதனால், இந்த 2024ஆம் ஆண்டில் இறுதிக்குள் டிசைர் காரும் அப்கிரேட் செய்யப்படலாம். ஆனால், முதலாவதாக புதிய ஸ்விஃப்ட் கார் அறிமுகமாகும். அதன்பின்பே புதிய டிசைர் விற்பனைக்கு வரும். நியூ ஜென்ரேஷன் டிசைர் கார் ஏற்கனவே ரோடு டெஸ்ட்டிங்கில் உட்படுத்தப்பட்டு வருகிறது.

upcoming affordable maruti suzuki cars

தோற்றத்தை பொறுத்தவரையில், புதிய ஸ்விஃப்ட் எப்படியிருக்குமோ அதேபோன்றுதான் புதிய டிசைரும் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் தற்சமயம் அதிகம் விற்பனை செய்யப்படும் செடான் காராக டிசைர் விளங்குகிறது. புதிய ஜென்ரேஷன் அறிமுகம் செய்யப்பட்ட பின் டிசைர் கார்கள் விற்பனை மேலும் அதிகரிக்கும். தற்போது கிடைப்பதை போலவே, புதிய ஸ்விஃப்ட் & டிசைர் கார்கள் சிஎன்ஜி ஆப்ஷனிலும் அறிமுகம் செய்யப்படும்.

3. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் ஃபேஸ்லிஃப்ட்: கடந்த 2023 ஜனவரி மாதத்தில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஃப்ரான்க்ஸ் கார் விரைவில் ஃபேஸ்லிஃப்ட்டிற்கு அப்கிரேட் செய்யப்பட உள்ளது. இருப்பினும், புதிய ஃப்ரான்க்ஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனைக்கு வருவதற்குள் 2025ஆம் ஆண்டு வந்துவிடும் என கூறப்படுகிறது. ஃப்ரான்க்ஸ் கார் கஸ்டமர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதால், இதன் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலும் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கும்.

upcoming affordable maruti suzuki cars

மாருதி சுஸுகி நிறுவனம் அதன் கிராண்ட் விட்டாரா காரில் வழங்கிவரும் ஹைப்ரீட்-எலக்ட்ரிக் பவர்டிரெயினை மேலும் சில கார்களில் வழங்கவும் திட்டமிட்டுள்ளது. அந்த மேலும் சில கார்களில் முதலாவதாக இருப்பது ஃப்ரான்க்ஸ் ஆகும். அதேபோல், ஸ்விஃப்ட் மற்றும் டிசைர் காரில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய 1.2 லிட்டர் இசட் சீரிஸ் பெட்ரோல் என்ஜின் புதிய ஃப்ரான்க்ஸ் ஃபேஸ்லிஃப்ட் காரிலும் வழங்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மற்றும் டிசைர் கார்கள் விற்பனை கடந்த சில மாதங்களாக வெகுவாக குறைந்து வருகிறது. ஆதலால், இந்த கார்களை அப்டேட் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. இவற்றுடன், ஃப்ரான்க்ஸ் காரையும் மாருதி சுஸுகி நிறுவனம் அப்கிரேட் செய்ய இருப்பது நாம் எதிர்பார்க்காத ஒன்றே. இவை மட்டுமின்றி, வேறு சில விலை குறைவான கார்களும் வருகிற நிதியாண்டில் மாருதி சுஸுகியில் இருந்து வெளிவரலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, March 22, 2024, 19:57 [IST]
English summary
Upcoming affordable maruti suzuki cars in next financial year check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X