பணத்தை சேர்த்து வைக்க ரெடியாகுங்க!! புது மாடர்ன் கார்கள் வரிசைக்கட்டி நிற்குது - ஏப்ரலில் அறிமுகமாகும் கார்கள்

உலகின் மிக பெரிய கார் சந்தைகளுள் ஒன்று நம் இந்தியா என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியாவில் இந்த ஏப்ரல் மாதத்தில் நிறைய கார்கள் புதியதாக அறிமுகம் செய்யப்பட உள்ளன. அவை என்னென்ன என்பதையும், அவற்றின் சிறப்பம்சங்களையும் சிறு குறிப்பாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபேஸ்லிஃப்ட் (Mahindra XUV300 Facelift): மஹிந்திராவின் எக்ஸ்யூவி300 எஸ்யூவி கார் நீண்ட மாதங்களாக அப்டேட் செய்யப்படவில்லை. மேம்படுத்தப்பட்ட எக்ஸ்யூவி300 ஃபேஸ்லிஃப்ட் காரை இந்த ஏப்ரல் மாதத்தில் மஹிந்திரா வெளியீடு செய்யும் என எதிர்பார்கிறோம். புதிய எக்ஸ்யூவி300 காரில் மிக முக்கிய அம்சமாக பனோராமிக் சன்ரூஃப் வழங்கப்பட உள்ளது.

upcoming car launches in april

அத்துடன், எல்இடி ஹெட்லைட்கள், ரீடிசைனில் க்ரில் மற்றும் அப்டேட்டான அலாய் சக்கரங்களையும் எக்ஸ்யூவி300 ஃபேஸ்லிஃப்ட் காரில் எதிர்பார்க்கலாம். காருக்கு உள்ளே பெரிய அளவிலான டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் பெறலாம்.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் (Maruti Suzuki Swift Facelift): மாருதி சுஸுகி நிறுவனம் அதன் பிரபலமான ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் காரை அப்டேட் செய்ய தயாராகி வருகிறது. புதிய மேம்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட் கார் ஏற்கனவே ஐப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. அதனை தொடர்ந்து வருகிற ஏப்ரலில் இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய ஸ்விஃப்ட் கார், இதே மாதத்தில் இந்தியாவிலும் வெளியீடு செய்யப்படலாம்.

upcoming car launches in april

4ஆம் தலைமுறை ஸ்விஃப்ட் காரான இது, இந்த ஏப்ரலில் வெளியீடு மட்டுமே செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதாவது, காரை பற்றிய விபரங்களை மாருதி சுஸுகி நிறுவனம் வெளியிடும். மற்றப்படி, காரின் அறிமுகத்தை அடுத்தடுத்த மாதங்களில்தான் எதிர்பார்க்க முடியும். புதிய ஸ்விஃப்ட் கார் மிக முக்கிய அம்சமாக மைல்ட்-ஹைப்ரீட் பவர்டிரெயின் ஆப்ஷனை பெறவுள்ளது.

டாடா அல்ட்ராஸ் ரேஸர் (Tata Altroz Racer): டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் காரில் புதிய ரேஸர் வெர்சனை கொண்டுவர கிட்டத்தட்ட கடந்த 1 வருடத்திற்கும் மேலாக தயாராகி வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஆட்டோ எக்ஸ்போவில் அல்ட்ராஸ் ரேஸர் வெர்சன் காட்சிக்கு நிறுத்தப்பட்டு இருந்தது.

upcoming car launches in april

வழக்கமான அல்ட்ராஸ் கார்களை காட்டிலும் செயல்திறன்மிக்க வேரியண்ட்டாக அல்ட்ராஸ் ரேஸர் உருவாக்கப்பட்டு வருகிறது. வழக்கமான அல்ட்ராஸ் காரில் இருந்து தோற்றத்தில் வேறுப்படும் விதமாக போல்டான கிராஃபிக்ஸ் மற்றும் ஸ்போர்டியான பக்கெட் இருக்கைகள் புதிய ரேஸர் வெர்சனில் வழங்கப்பட உள்ளன. அதேபோல், காருக்குள் பெரிய டச் ஸ்க்ரீன் டிஸ்பிளே மற்றும் அட்வான்ஸான தொழிற்நுட்ப அம்சங்களையும் எதிர்பார்க்கலாம்.

ஸ்கோடா சூப்பர்ப் (Skoda Superb): ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் விலையுயர்ந்த செடான் காரான சூப்பர்ப் இந்திய சந்தைக்கு ஒன்றும் புதியது கிடையாது. சூப்பர்ப் காரை இந்தியாவில் அவ்வப்போது அறிமுகம் செய்வதை ஸ்கோடா நிறுவனம் வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில், மேம்படுத்தப்பட்ட சூப்பர்ப் காரை இந்தியாவில் மீண்டும் அறிமுகம் செய்ய ஸ்கோடா நிறுவனம் தயாராகி வருகிறது.

upcoming car launches in april

வருகிற ஏப்ரல் 3ஆம் தேதி இந்தியாவில் வெளியீடு செய்யப்பட உள்ள புதிய சூப்பர்ப் செடான் காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட உள்ளது. தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் தொழிற்நுட்பங்கள் மற்றும் 360-டிகிரி கேமராவை சூப்பர்ப் காரில் ஸ்கோடா வழங்கவுள்ளது. வழக்கம்போல், புதிய சூப்பர்ப் கார்களையும் இந்தியாவில் ஸ்கோடா நிறுவனம் உருவாக்க போவதில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை மட்டுமின்றி, வேறு சில கார்களும் இந்த ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்படுவதற்கு லைன்-அப்பில் உள்ளன. அதேபோல், இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ள 4 கார்களும் வெளியீடு/ அறிமுகம் செய்யப்படும் என உறுதியாக கூற முடியாது. ஏனெனில், இவற்றில் சில மாடல்களின் வருகை தாமதமாகுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, March 31, 2024, 21:52 [IST]
English summary
Upcoming car launches in april 2024 mahindra xuv300 facelift to skoda superb
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X