இந்த ஜூலை மாதம் இத்தனை கார் புதுசா வரப்போகுதா? முழுமையான பட்டியல் இதோ!

2024ம் ஆண்டின் முதல் 6 மாதங்கள் முடிந்து இன்று முதல் இரண்டாவது 6 மாதத்திற்கான காலம் துவங்கி விட்டது. தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தங்கள் புதிய கார்களை இந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார்கள். இந்த ஆண்டின் 2ம் பாதியில் திட்டமிடப்பட்டிருந்த வாகனங்கள் எல்லாம் இன்று முதல் விற்பனைக்கு அறிமுகமாக காத்திருக்கின்றன. இதன்படி இந்த மாதம் அறிமுகமாக உள்ள வாகனங்களில் மூன்று புதிய எலெக்ட்ரிக் வாகனங்களும் இரண்டு அப்டேட் செய்யப்பட்ட வாகனங்களும் அறிமுகமாக உள்ளன. இப்படியான வாகனங்களின் பட்டியல் மற்றும் அதில் உள்ள அம்சங்களை காணலாம் வாருங்கள்.

டாடா கர்வ்: நீண்ட நாட்கள் காத்திருப்பதற்குப் பிறகு டாடா நிறுவனம் தனது கர்வ் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. முதல் முறையாக இந்த கார் எலெக்ட்ரிக் வெர்ஷனில் அறிமுகமாகிறது. அதன் பின்னர் இதன் பெட்ரோல் வெர்ஷன் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் ஒரு முறை சார்ஜ் போட்டால் 400 முதல் 500 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

upcoming car launches in july 2024

டாடா நிறுவனம் இந்த காரை ஆக்டி.இவி பிளாட்ஃபார்மில் தயாரிக்கிறது. இந்த காரின் உட்புறம் 10.25 இன்ச் கொண்ட ஸ்கிரீன் மற்றும் பானரோமிக் சன்ரூஃப் தொழிற்நுட்பம் எல்லாம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கிடையில் இந்த கார் விற்பனைக்கு இந்த மாதமே களமிறங்கும் என எதிர்பார்க்கலாம். அறிமுக தேதி குறித்து அறிவிப்புகள் பின்னர் வெளியிடப்படும்.

நிஸான் எக்ஸ்-டிரையல்: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் நிஸான் எக்ஸ்-டிரையல் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் இந்த காரின் விற்பனை நிறுத்தப்பட்ட பின்பு தற்போது மீண்டும் இந்த கார் இந்தியாவிற்கு வர போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த காரில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

upcoming car launches in july 2024

இந்த காரில் 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் ஆகிய இரண்டு விதமான டிரைவ் ஆப்ஷன்களும் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. இந்த காரின் உட்புறம் 12.3 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் போட்டு சிஸ்டம் முழு டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் மல்டி ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், அடாஸ் தொழில்நுட்பம் ஆகிய அம்சங்களும் இடம் பெற வாய்ப்புகள் உள்ளது.

ஹுண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்: ஹுண்டாய் நிறுவனத்தின் அல்கஸார் கார் அந்நிறுவனத்தின் 3 டோர் கொண்ட வெர்ஷன் காராக விற்பனையாகி வருகிறது. இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் இந்த மாதம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் இந்திய சாலைகளில் ஆங்காங்கே சோதனை செய்வதை நம்மால் காண முடிகிறது. ஹூண்டாய் கிரெக்டா கார் சமீபத்தில் தான் அப்டேட்டான நிலையில் தற்போது இந்த காரையும் ஹூண்டாய் நிறுவனம் அப்டேட் செய்கிறது.

upcoming car launches in july 2024

ஹூண்டாய் கிரெட்டா காரிலிருக்கும் அப்டேட் போலவே இந்த காரிலும் முன்பக்க கிரில், ஹெட்லைட், டெயில் லைட் உள்ளிட்ட பகுதிகள் அப்டேட் செய்யப்போகிறது. இந்த காரில் இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷன்களும் இருக்கும் என எதிர்பார்க்கலாம். முக்கியமாக இந்த காரில் டூயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் அடாஸ் தொழில்நுட்பங்கள் இடம்பெற ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

மெர்சிடிஸ் பென்ஸ் இகியூஏ: மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது காரின் மூலம் தனது எலெக்ட்ரிக் லைன் ஆப்களை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. இந்த கார் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜிஎல்ஏ என்ற எஸ்யூவி காரை அடிப்படையாகக் கொண்ட எலெக்ட்ரிக் வெர்ஷன் காராகும். இந்த கார் பல்வேறு விதமான பவர்டிரைன்களில் சர்வதேச அளவில் விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் எந்த விதமான பவர்டிரைன் வருகிறது என்பது அறிமுகத்தின் போது தான் செய்ய வரும்.

இந்த காரில் உள்ள அம்சங்களை பொருத்தவரை எம்பக்ஸ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டிஜிட்டல் அசிஸ்டன்ட் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போக பானரோமிக் சன்ரூஃப் மற்றும் அடாஸ் தொழில் நுட்பமும் இந்த காரில் இடம் பெற வாய்ப்புகள் இருக்கிறது. இந்த காரின் விலையும் மிக அதிகமாக இருக்கவே வாய்ப்புகள் உள்ளன.

பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் எல்டபிள்யூபி: பிஎம்டபிள்யூ நிறுவனம் கடந்த மாதம் தனது 5 சீரிஸ் காரின் எல்டபிள்யூபி வெர்ஷனை பொதுவெளியில் காட்சிப்படுத்தியிருந்தது. இந்த கார் இந்தியாவிற்கு கொண்டுவரப் போவதாக நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், இந்த ஜூலை மாதம் 24ம் தேதி இந்த கார் இந்தியாவில் அறிமுகமாகிறது. இது ஒரு எலெக்ட்ரிக் செடான் காராகும்.

இந்த காரில் புதிய ஹெட்லைட் புதிய கிரில் புதிய டெயில் லைட் மற்றும் புதிய டிசைன் அம்சங்கள் இடம்பெறுகின்றன. இந்த காரில் டூயல் டிஜிட்டல் ஸ்கிரீன்கள் மற்றும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, நான்கு ஸோன் கொண்ட கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெறுகிறது. அடாஸ் தொழிற்நுட்பத்துடன் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

மினி கூப்பர்: புதிய தலைமுறை மினி கூப்பர் எஸ் கார் இந்தியாவில் இந்த மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனித்துவமான டிசைன் அம்சங்களுடன் இந்த கார் விற்பனைக்கு வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த காரின் டிசைன் வடிவமைப்பு வழக்கமான இந்த காரின் வடிவமைப்பு போலவே இருக்கிறது. இந்த கார் மீதான எதிர்பார்ப்பு இந்தியர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

இந்த காரில் உள்ள அம்சங்களை பொருத்தவரை 9.4 இன்ச் கொண்ட ஓ எல்இடி டச் ஸ்கிரீன் பேனல் பொருத்தப்பட்டுள்ளது. மற்றும் இதே அளவிலான டிரைவர் டிஸ்பிளேயும் இருக்கிறது. இந்த கார் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் உடன் விற்பனைக்கு வருகிறது. இதில் ஒயர்லெஸ் போன் சார்ஜர் சாம்பியன்ஸ் லைட்டிங் ஆட்டோமேட்டிக் ஏசி உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது.

மினி கண்ட்ரிமேன் எலெக்ட்ரிக்: மினி நிறுவனம் தனது கண்ட்ரிமேன் என்ற எலெக்ட்ரிக் காரை இந்த ஜூலை 24ம் தேதி விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இது மினி கூப்பர் எஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இருக்கிறது. மினி கூப்பர் காரில் என்னென்ன அப்டேட்களிடம் பெற்று இருக்கிறதோ அந்த அப்டேட்கள் இதிலும் இருக்கிறது.

இந்த காரின் பேட்டரியை பொருத்தவரை 66.4 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் போட்டால் 462 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் டிரைவர் சீட்டுக்கு உயர அட்ஜெஸ்ட்மென்ட் மற்றும் மசாஜ் பங்க்ஷன் உள்ளிட்ட ஏராளமான அம்சங்களும் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பலரும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த வாகனங்கள் எல்லாம் இந்த ஜூலை மாதம் அறிமுகமாக திட்டமிட்டு வருகின்றன. இதில் சில வாகனங்களின் அறிமுக தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. சில வாகனங்களில் அறிமுக தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த மாதம் அறிமுகமாக வாய்ப்புகள் இருப்பதால் இந்த பட்டியலில் சேர்த்துள்ளோம்.

More from DriveSpark

Article Published On: Monday, July 1, 2024, 13:45 [IST]
English summary
Upcoming car launches in july 2024 tata curvv nissan x trail hyundai alcazar etc
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X