சோப்பு டப்பா எல்லாம் கிடையாது! ஆகஸ்ட் மாதம் வரப்போகும் தரமான கார்கள் இவைதான்!
இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களின் விற்பனை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. பல்வேறு வாகன தயாரிக்கும் நிறுவனங்கள் எல்லாம் எஸ்யூவி ரக கார்களை வரிசையாக அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அதன்படி வரும் ஆகஸ்ட் மாதமும் ஆஃப் ரோடு கார்கள், எஸ்யூவி கார்கள், சொகுசு கார்கள் என பல்வேறு விதமான கார்கள் அறிமுகமாக உள்ளன. இந்த பதிவில் நாம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள கார்களின் பட்டியலை தான் விரிவாக காணப்போகிறோம்.
சிட்ரோன் பசால்ட்: சிற்றூர் நிறுவனம் பசால்ட் என்ற கூபே ஸ்டைல் எஸ்யூவி காரை வரும் ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி அறிமுகப்படுத்துகிறது. இந்த காரை அந்நிறுவனம் சி3 ஏர் கிராஸ் கார் தயாரிக்கப்பட்ட அதே பிளாட்பார்மில் தான் தயாரிக்கிறது. இந்த காரில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 109 பிஎச்பி பவரையும் 25 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

டாடா கர்வ்: டாடா நிறுவனம் கூபே எஸ்யூவி ஸ்டைல் காராக கர்வ் என்ற காரை ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி விற்பனைக்காக அறிமுகப்படுத்துகிறது. இந்த கார் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷனுடன் விற்பனைக்கு வருகிறது. இந்த கார் மார்க்கெட்டில் உள்ள ஹூண்டாய் கிரெக்டா, சிட்ரோன் பசால்ட் ஆகிய கார்களுக்கு போட்டியாக களமிறங்கும் என எதிர்பார்க்கலாம்.
டாடா கர்வ் இவி: டாடா நிறுவனம் தனது கர்வ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது டாடா நிறுவனத்தின் 5வது எலvக்ட்ரிக் ஆகும். இதில் இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன்கள் உள்ளன. அதிகபட்சமாக 50 கிலோவாட் ஹவர் பேட்டரி ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் வரை பயணிக்கும். வழக்கம் போல இந்த காரிலும் ஸ்டாண்டர்ட் மற்றும் லாங்ரேஞ்ச் வெர்ஷன்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிங்கிள் மற்றும் டூயல் மோட்டார் செட்டப்பும் இதில் பொருத்தப்படும்.
மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூப்பே: மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது ஏஎம்ஜி ஜிஎல்சி 43 காரை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி இந்த கார் அறிமுகமாக உள்ளது. இந்த காரில் 2.0 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்படும். இந்த சிஸ்டம் 415 பிஎச்பி பவரையும் 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் சிஎல்இ கேப்ரியோலெட்: மெர்சிடிஸ் நிறுவனம் தனது சிஎல்இ கேப்ரியோலெட் காரை சி-கிளாஸ் கேப்ரியோலெட் காருக்கு பதிலாக அறிமுகப்படுத்துகிறது. இந்த கார் சி-கிளாஸ் மற்றும் இ-கிளாஸ் கார்கள் தயாராகும் அதே பிளாட்பார்மில் உருவாக்கப்படுகிறது. இந்த சிஎல்இ கேப்யோலெட் நெட் காரின் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இது மைல்டு ஹைபிக் சிஸ்டத்துடன் இணைந்து செயல்படும். இதுபோக 3.0 லிட்டர் 6 சிலிண்டர் இன்ஜின் ஆப்ஷனும் இருக்கிறது. இது 375 பிஎச்பி பவரையும் 500 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு இன்ஜினும் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் சேர்ந்து செயல்படுகிறது.

நிஸான் எக்ஸ்-டிரையல்: நிஸான் நிறுவனம் தனது காரை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி இந்த கார் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் சிவிடி கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டு 160 பிஎச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
லம்போர்கினி உரூஸ் எஸ்இ: லம்போர்கினி நிறுவனம் தனது உரூஸ் எஸ்இ காரை வரும் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி காட்சிப்படுத்துகிறது. இந்த காரில் 4.0 லிட்டர் இன் டர்போ சார்ஜர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது போக 25.9 கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டும் சேர்ந்து இந்த கார் ஹைபிரிட் காராக உருவாக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 789 பிஎஸ்பி பவரும் 950 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.4 நொடியில் பிக்கப் செய்து விடுகிறது. இந்த கார் எலெக்ட்ரிக் பவரில் மட்டும் 60 கிலோ மீட்டர் பயணிக்கும் திறந்து கொண்டதாக வடிவமைக்கப்பட்டது.
மஹிந்திரா தார் ராக்ஸ்: மஹிந்திரா நிறுவனம் தனது 5 டோர் கொண்ட தார் கார் வெர்ஷனாக ராக்ஸ் என்ற புதிய காரை வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது. இது பல்வேறு விதமான அப்டேட்களுடன் விரைவில் விற்பனைக்கு வருகிறது.
முக்கியமாக இதில் அடாஸ் தொழில்நுட்ப பொருத்தப்பட்டுள்ளது. இது போக புதிய 18இன்ச் கொண்ட அலாய் வீல்கள் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஹெட்லைட் மற்றும் கிரில் ஆகியவை இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கார் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்தியர்கள் மத்தியில் தற்போது இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வரும் ஆகஸ்ட் மாதம் ஏகப்பட்ட கார்களை எதிர்பார்க்கப்பட்டு வருகின்றன. இந்த கார்கள் எல்லாம் விற்பனைக்கு அறிமுகமாகும் தேதிகள் கூட அறிவிக்கப்பட்டு விட்டன. இதனால் அடுத்த 15 நாட்கள் இந்தியாவில் ஏகப்பட்ட புதிய கார்கள் அறிமுகமாகி இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறையில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









