குட்டி அரண்மனை மாதிரி இருக்கும்! ரூ10 லட்சத்திற்குள் விற்பனைக்கு வரவுள்ள புதிய எஸ்யூவி கார்கள்!
ஹூண்டாய், கியா மற்றும் ஸ்கோடா ஆகிய நிறுவனங்கள் அடுத்த 12 மாதத்தில் புதிய மற்றும் அப்டேட் செய்யப்பட்ட காம்பேக்ட் எஸ்யூவி கார்களை இந்தியாவில் களமிறக்குகின்றன. இந்த செக்மெண்டில் உள்ள கார்களுக்கு இந்தியாவில் மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் நிலையில், இந்த செக்மெண்டில் ஏராளமான கார்கள் அறிமுகமாகி வருகின்றன. இந்நிலையில் இந்த புதிய கார்களும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற வாய்ப்பு இருக்கிறது. இந்த புதிய கார்கள் என்னென்ன இதில் இருக்கும் அம்சங்கள் என்னென்ன என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட் இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட் அலை வீசுகிறது என்றே சொல்லலாம். ஏற்கனவே டாடா நிறுவனத்தின் நெக்ஸான், மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா, மற்றும் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 3எக்ஸ்0 கியா நிறுவனத்தின் சோனட் ஆகிய கார்கள் இந்த செக்மென்டின் சிறப்பாக விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில் அடுத்த ஓர் ஆண்டில் இன்னும் சில கார்கள் அறிமுகமாக உள்ளது.

ஸ்கோடா காம்பேக்ட் எஸ்யூவி: ஸ்கோடா நிறுவனம் சமீபத்தில் தனது அடுத்த காம்பேக்ட் எஸ்யூவி காரை இந்தியாவில் 2025ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடும் என அறிவித்துள்ளது. அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கார் 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் வடிவமைக்கப்பட்ட காராக இருக்கும். மிட் சைஸ் காரான ஸ்கோடா குஷாக் காரின் மினி வெர்ஷனாக இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
இந்த காரில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ சார்ஜர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும் 178 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே இன்ஜின் தான் ஸ்கோடா குஷாக் காரிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் இந்திய சாலைகளில் சோதனை செய்து வருவதை நம்மால் அவ்வப்போது காணமுடிகிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் வென்யூ: ஹூண்டாய் நிறுவனம் தனது வென்யூ காரின் இரண்டாம் தலைமுறை வெர்ஷனை விரைவில் வெளியிட திட்டமிட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தற்போது நடந்து வருகிறது. இந்த காரை தற்போது க்யூ2எக்ஸ்ஐ என்ற பெயரில் அந்நிறுவனம் அழைத்து வருகிறது. இந்த காரில் பல்வேறு டிசைன் மற்றும் அம்சங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. மெக்கானிக்கல் ரீதியாக பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.
வென்யூ கார் மார்க்கெட்டில் நல்ல விற்பனையில் இருக்கும் நிலையில், இதன் விற்பனையை அதிகரிக்க இந்த அப்டேட்டை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. 2025ம் ஆண்டு இந்த கார் அப்டேட் செய்யப்பட்டு அறிமுகமாகும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த கார் அப்டேட் செய்யப்படும் பட்சத்தில் அதன் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் பல முக்கிய அம்சங்கள் மற்றும் தற்போது உள்ள நவீன தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்ட காராக இந்த விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

கியா சைரோஸ்: கியா நிறுவனம் 2025ம் ஆண்டு கிளாவிஸ் காரின் ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் வேரியன்ட்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதை சோனட் மற்றும் செல்டோஸ் கார்களுக்கு இடையில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த காருக்கு இந்தியாவில் சைரோஸ் என பெயர் வைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த காரின் வடிவமைப்பை பொறுத்தவரை சர்வதேச அளவில் இந்நிறுவனம் விற்பனை செய்து வரும் சோல் என்ற எஸ்யூவி காரின் வடிவமைப்பிலிருந்து இன்ஸ்பயர் செய்யப்பட்டதாக இருக்கிறது.
2025ம் ஆண்டு இறுதியில் தான் கியா கிளாவிஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகமாகும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த காரில் பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வயர்லெஸ் ஆப்பிள் கார்பளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகிய தொழில்நுட்பம் , சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்ப்பு இருக்கிறது.
காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் இந்தியாவில் மிகப்பெரிய போட்டி இருக்கும் நிலையில், அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களும் இந்த செக்மெண்டில் தங்கள் வாகனங்களை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகின்றன. இந்நிலையில் தற்போது புதிய வாகனங்கள் இந்த செக்மெண்டில் விற்பனைக்கு அறிமுகமாக உள்ள நிலையில் இதை செக்மெண்டில் கடும் போட்டி ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளுக்கு காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட் மிகப்பெரிய வளர்ச்சியை பெறப்போகிறது. புதிதாக கார் வாங்குபவர்கள் கூட சிறிய ரக காரை விரும்பாமல், காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களை அதிகம் விரும்புவதால் இந்த செக்மென்ட் மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் எதிர்காலத்தில் இந்த செக்மெண்ட் எவ்வளவு கார்கள் வந்தாலும் விற்பனையாகும் அளவிற்கு பெரிய செக்மெண்டாக இருக்கும் என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது.


Click it and Unblock the Notifications









