எலெக்ட்ரிக் அவதாரம் எடுக்கப்போகும் 8 பெட்ரோல் இன்ஜின் கார்கள்! ஒவ்வொன்னும் தரமா இருக்குதே!

தற்போது எலெக்ட்ரிக் கார்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வரும் நிலையில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் பெட்ரோல் இன்ஜின் கார்களை எல்லாம் வரிசையாக எலெக்ட்ரிக் கார்களாக மாற்றி வருகின்றனர். இப்படியாக விரைவில் எலெக்ட்ரிக் காராக மாறப்போகும் பெட்ரோல் இன்ஜின் கார்கள் குறித்த விபரங்களை தான் இங்கே விரிவாக காணப்போகிறோம்.

ஹூண்டாய் கிரெக்டா இவி: ஹுண்டாய் நிறுவனத்தின் கார் ரூபாய் 30 முதல் 35 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வர உள்ளது. இந்த காரில் உள்ள பேட்டரி மற்றும் சார்ஜிங் குறித்த விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் இதன் மோட்டாரை பொருத்தவரை 150பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

upcoming electric cars 2024

ஹோண்டா எலவேட் இவி: ஹோண்டா நிறுவனத்தின் எலவேட் கார் இவி அவதாரத்தில் ரூபாய் 20 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பேட்டரி மோட்டார் மற்றும் சார்ஜிங் குறித்து எந்த தகவலும் தற்போது வரை வெளியில் தெரியவில்லை. ஆனால் இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 350 முதல் 400 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்படுவதாக நமக்கு தகவல்கள் வெளியாகி உள்ளன.

டாடா ஹாரியர் இவி: டாடா நிறுவனத்தின் ஹாரியர் கார் இவி அவதாரத்தில் வெளியாக உள்ளது. இந்த கார் ரூபாய் 25 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்படும் என தெரிகிறது.

upcoming electric cars 2024

டாட்டா சஃபாரி இவி: டாடா நிறுவனத்தின் சஃபாரி கார் ஏழு சீட்டர் கொண்ட ஹாரியர் இவி காரை போல இந்த கார் உருவாக்கப்படுகிறது. இது பெட்ரோல் இன்ஜின் காரை விட சற்று மாறுபட்ட வடிவமைப்பில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் ரூபாய் 30 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இதன் பேட்டரி பேக் நெக்ஸான் இவி காரை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனால்ட் க்விட்: தற்போது விற்பனையில் இருக்கும் க்விட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த கார் ரூபாய் 10 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த காரில் 26.8 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

upcoming electric cars 2024

இந்த பேட்டரி பேக்தான் இதன் ஐரோப்பா வெர்ஷன் காரில் இடம் பெற்றுள்ளது. தற்போது இந்த கார் ஐரோப்பா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் விற்பனைக்கு உள்ளது. இந்த கார் ஒரு முறை சார்ஜ் போட்டால் 295 கிலோமீட்டர் வரை எந்த தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் எக்ஸ்டர் இவி: ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்டர் கார் ஏற்கனவே மைக்ரோ எஸ்யூவி மார்க்கெட்டில் நல்ல விற்பனையில் இருக்கும் நிலையில் இதனை எலெக்ட்ரிக் வெர்ஷன் கார் விரைவில் அறிமுகமாக உள்ளது. ரூபாய் 10 லட்சம் என்ற வெளியில் இது அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

upcoming electric cars 2024

இந்த காரில் 40 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்படும் எனவும் இதை சார்ஜ் செய்ய 50 கிலோ வாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் சார்ஜர் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு முறை சார்ஜ் போட்டால் 300 முதல் 350 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்படும் என தெரிகிறது.

டாடா அல்ட்ராஸ் இவி: டாடா நிறுவனத்தின் அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் கார் ரூபாய் 15 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 30 கிலோ வாட் ஹவர் மற்றும் 40.5 கிலோ ஹவர் என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 300 இவி: மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் கார் ரூ17 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 34.5 கிலோ வாட் ஹவர் மற்றும் 39.5 கிலோ வாட் ஹவர் என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம். இது 375 கிலோமீட்டர் முதல் 456 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் என தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீங்கள் எலெக்ட்ரிக் காரை வாங்க விரும்புகிறீர்கள் என்றால் இது தான் உங்களுக்கு சரியான நேரம். நீங்கள் எந்த எலெக்ட்ரிக் காரை வாங்க வேண்டும்? இதற்காக உங்களிடம் உள்ள பட்ஜெட்டிற்கு ஏற்ற எலெக்ட்ரிக் கார் எது? என்பதை இப்போதே தேர்வு செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த காரெல்லாம் அடுத்தடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 22, 2024, 11:17 [IST]
English summary
Upcoming electric cars 2024 india launch details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X