ரெனால்ட் களமிறக்கும் எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்ரோல், டீசல் கார்களை இனி யாரும் சீண்ட கூட மாட்டாங்க
இந்திய சந்தையில் ஹேட்ச்பேக் கார்களுக்கு (Hatchback Cars) எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஓரளவிற்கு குறைவான விலையில் (Price) கிடைப்பதுதான் இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. அளவில் சிறியது என்பதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும் ஹேட்ச்பேக் கார்களை எளிதாக ஓட்ட முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சம்.
இந்த சூழலில் இந்திய சந்தையில் பல்வேறு எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. டாடா (Tata) மற்றும் ரெனால்ட் (Renault) ஆகிய நிறுவனங்களிடம் இருந்து விற்பனைக்கு வரவுள்ள இந்த எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார்கள் குறித்த முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா அல்ட்ராஸ் இவி (Tata Altroz EV): இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று டாடா அல்ட்ராஸ். இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் 2025ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. சமீபத்தில் களமிறக்கப்பட்ட டாடா பன்ச் இவி (Tata Punch EV) எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே பிளாட்பார்ம்தான், டாடா அல்ட்ராஸ் இவி எலெக்ட்ரிக் காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா அல்ட்ராஸ் இவி எலெக்ட்ரிக் கார், சிறப்பான செயல்திறன், தாராளமான இடவசதி மற்றும் பிரீமியமான வசதிகள் ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எலெக்ட்ரிக் காரில் 25 kWh முதல் 35 kWh வரையிலான பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 300-420 கிலோ மீட்டர்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்தியாவின் விலை குறைவான எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில், ஸ்டைலிஷ் மற்றும் ஸ்போர்ட்டியான ஆப்ஷனாக இது இருக்கலாம். டாடா அல்ட்ராஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 12 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரெனால்ட் க்விட் இவி (Renault Kwid EV): இந்தியாவில் கிடைக்க கூடிய விலை குறைவான ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்றாக ரெனால்ட் க்விட் இருந்து வருகிறது. அதேபோல் இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனும், விலை குறைவான இவி செக்மெண்ட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள டாசியா ஸ்பிரிங் இவி (Dacia Spring EV) எலெக்ட்ரிக் காரின் அடிப்படையில், ரெனால்ட் க்விட் இவி எலெக்ட்ரிக் கார் உருவாக்கபடவுள்ளதாக கூறப்படுகிறது. அனேகமாக 26.8 kWh பேட்டரி தொகுப்புடன், ரெனால்ட் க்விட் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.
இதன் டிரைவிங் ரேஞ்ச் சுமார் 230 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம். இந்த எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 8 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், டாடா டியாகோ இவி (Tata Tiago EV) மற்றும் எம்ஜி கோமெட் இவி (MG Comet) உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்களுடன், இது போட்டியிடும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: குறைவான விலையில் ஒரு புதிய எலெக்ட்ரிக் காரை வாங்க வேண்டும் என நினைத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்கள், டாடா அல்ட்ராஸ் இவி மற்றும் ரெனால்ட் க்விட் இவி ஆகியவற்றின் வருகைக்காக காத்திருக்கலாம். குறைவான விலையில் வரவுள்ளதால், இவை விற்பனையில் சாதிக்கும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








