இனி அரசியல்வாதிகள் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை ஏறெடுத்து கூட பாக்க மாட்டாங்க... காரணம் என்னனு தெரியுமா?

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஃபுல் சைஸ் எஸ்யூவி (Full Size SUV) ரக கார்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இது டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ள ஒரு செக்மெண்ட் ஆகும். ஆனால் டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு நேரடி போட்டியாக, 2 புதிய கார்கள் இந்தியாவின் ஃபுல் சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் களமிறங்கவுள்ளன. நடப்பு 2024ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் அந்த 2 புதிய கார்கள் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எம்ஜி க்ளோஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் (MG Gloster Facelift): இது தற்போது விற்பனையில் உள்ள எம்ஜி க்ளோஸ்ட்டர் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் ஆகும். இந்த புதிய மாடலின் சோதனை ஓட்டம் இந்தியாவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே கூடிய விரைவில் இந்த புதிய மாடலை நாம் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.

MG Gloster

இந்த காரில், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், லெவல் 2 அடாஸ், பனரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் என ஏராளமான வசதிகள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

செயல்திறனை பொறுத்தவரையில், 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்படலாம். இதன் 2 வீல் டிரைவ் வேரியண்ட் 160 பிஹெச்பி பவர் மற்றும் 375 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியதாக இருக்கும். அதே நேரத்தில் 4 வீல் டிரைவ் வேரியண்ட் 215 பிஹெச்பி பவர் மற்றும் 480 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியதாக இருக்கும்.

Nissan X-Trail

ஆனால் 2 வகையான மாடல்களுடனும், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்தான் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஜி க்ளோஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை, தற்போது விற்பனையில் உள்ள மாடலின் விலையை காட்டிலும் சுமார் 1 லட்ச ரூபாய் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

நிஸான் எக்ஸ்-ட்ரெயில் (Nissan X-Trail): இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிஸான் எக்ஸ்-ட்ரெயில் காரும் இந்திய சாலைகளில் தற்போது தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த காரில், 1.5 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இன்ஜின் உடன் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படலாம். வசதிகளை பொறுத்தவரையில், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் என ஏராளமான அம்சங்கள் வழங்கப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எம்ஜி க்ளோஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் ஆகிய 2 கார்களும், விற்பனையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. டொயோட்டா நிறுவனத்திற்கு இந்த கார்கள் மூலமாக மட்டுமல்லாது, மற்றொரு கார் மூலமாகவும் தலை வலி ஏற்படவுள்ளது.

அது கியா கார்னிவல் காரின் புதிய தலைமுறை மாடல் ஆகும். விரைவில் விற்பனைக்கு வரவுள்ள கியா கார்னிவல் காரின் புதிய தலைமுறை மாடல், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் ஆகிய கார்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

பொதுவாக டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் டொயோட்டா இன்னோவா ஆகியவை எல்லாம் அரசியல்வாதிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள கார்கள் ஆகும். ஆனால் அவற்றுக்கு போட்டியாக வரவுள்ள பல்வேறு புதிய கார்கள், அரசியல்வாதிகளின் கவனத்தை தங்கள் பக்கம் இழுப்பதற்கான வாய்ப்புகளும் கூட இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 4, 2024, 21:31 [IST]
English summary
Upcoming full size suvs mg gloster facelift nissan x trail
மேலும்... #MG Gloster 2024 #mg motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+