இந்த ஒரு காருக்காகதான் நிறைய பேர் தவம் கெடக்கறாங்க... வெளியான புதிய தகவலால் எகிறிய எதிர்பார்ப்பு...

இந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் கியா சொனெட் (Kia Sonet) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) ஆகிய 2 கார்களும் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. இந்த 2 கார்களுக்கும் இடைப்பட்ட நிலையில் ஒரு புத்தம் புதிய காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய கியா நிறுவனம் தயாராகி வருகிறது. முதலில் இந்த கார் கியா க்ளாவிஸ் (Kia Clavis) என்ற பெயரில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கியா சைரோஸ் (Kia Syros) என்ற பெயரில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கியா சைரோஸ் கார் இந்திய சாலைகளில் தற்போது தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. அப்போது எடுக்கப்படும் ஸ்பை படங்கள் மூலம், கியா சைரோஸ் காரை பற்றிய பல்வேறு புதிய தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் தற்போது நிறைய புதிய தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

Kia Sonet

இதன்படி கியா சைரோஸ் காரின் உட்புறத்தில் ட்வின் டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதில், ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆக செயல்படும். மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆக செயல்படும். இதுதவிர இந்த காரில், 2 ஸ்போக்குகள் உடன் தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டியரிங் வீல் வழங்கப்படலாம்.

இதில், மீடியா மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனலுக்கான கண்ட்ரோல்கள் இடம்பெற்றிருக்கும். டிசைனை பொறுத்தவரையில் செங்குத்தான பகல் நேர விளக்குகள், எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில்லேம்ப்கள், பின் பகுதியில் பெரிய விண்ட்ஸ்க்ரீன் மற்றும் தட்டையான டெயில்கேட் ஆகிய அம்சங்கள் எல்லாம் இடம்பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kia Seltos

செயல்திறனை பொறுத்தவரையில், 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா சைரோஸ் கார் மீது, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த கார் நடப்பு 2024ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து, 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

சரியான விலை நிர்ணயம் செய்யப்பட்டால், இந்த கார் விற்பனையில் சாதனை படைக்கலாம். அதற்கு முன்னதாக இந்திய சந்தையில் 2 கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய கியா நிறுவனம் தயாராகி கொண்டுள்ளது. அவை புதிய தலைமுறை கியா கார்னிவல் (New-Generation Kia Carnival) மற்றும் கியா இவி9 (Kia EV9) ஆகியவை ஆகும்.

இந்த 2 கார்களும் இந்திய சந்தையில் ஒரே நாளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. அது அக்டோபர் 3ம் தேதி ஆகும். கியா சைரோஸ் காரை போலவே, இந்த 2 கார்களுக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த செய்தியில் படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 21, 2024, 23:09 [IST]
English summary
Upcoming kia syros new details out check here
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+