மாருதி இந்த 2024இல் அறிமுகம் செய்யவுள்ள ஒவ்வொரு காரும் ஒவ்வொரு ரகத்துல இருக்கு!! சேல்ஸ் குவிய போகுது!

மாருதி சுஸுகி ( Maruti Suzuki ), இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம். மாதந்தோறும் இலட்சக்கணக்கில் கார்களை விற்பனை செய்யும் இந்த நிறுவனத்தில் இருந்து இந்த 2024ஆம் ஆண்டில் 5 புதிய கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அவை என்னென்ன என்பதையும், அவற்றின் சிறப்பம்சங்களையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2024 ஸ்விஃப்ட்: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களுள் ஒன்று ஸ்விஃப்ட் ஆகும். இருப்பினும், ஸ்விஃப்ட் காரை அப்டேட் செய்ய வேண்டிய கட்டத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் உள்ளது. இதன்படி, ஸ்விஃப்ட் காரின் வெளிப்பக்கம் மற்றும் உட்பக்கத்தின் தோற்றம் மெருக்கேற்றப்பட உள்ளது. முக்கியமாக, புதிய ஸ்விஃப்ட் கார் முற்றிலும் புதுமையான முன்பக்கத்துடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

upcoming maruti suzuki cars

அத்துடன், புதிய டிசைனிலான அலாய் சக்கரங்கள் புதிய ஸ்விஃப்ட் காரில் வழங்கப்படலாம். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, புதிய ஸ்விஃப்ட் கார் வருகிற 2024 மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம். புதிய ஸ்விஃப்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சத்திற்குள் மாருதி சுஸுகி நிறுவனம் நிர்ணயிக்கும் என கூறப்படுகிறது.

2024 டிசைர்: ஸ்விஃப்ட்டை போல் இந்தியாவில் மக்கள் பலர் வாங்கும் காராக டிசைர் விளங்குகிறது. ஹேட்ச்பேக் காரான ஸ்விஃப்ட்டின் சப்-காம்பெக்ட் செடான் வெர்சன் தான் டிசைர் ஆகும். இதனால், ஸ்விஃப்ட்டை அப்டேட் செய்யும் அதேவேளையில் டிசைர் காரையும் மாருதி சுஸுகி அப்டேட் செய்யவுள்ளது. இருப்பினும், இவை இரண்டின் அறிமுகத்திற்கு இடையே சில மாத இடைவெளி இருக்கும்.

upcoming maruti suzuki cars

மேலும், புதிய ஸ்விஃப்ட் காரை விட புதிய டிசைர் காரின் விலை சற்று அதிகமாக நிர்ணயிக்கப்படும். இருப்பினும், ஸ்விஃப்ட்டிற்கும், டிசைருக்கும் 2024ஆம் ஆண்டிற்காக மாருதி சுஸுகி வழங்கும் டிசைன் அப்டேட்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும், புதிய டிசைர் காரில் கூடுதல் சிறப்பம்சமாக எலக்ட்ரிக் சன்ரூஃப் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

2024 இ.வி.எக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி: மாருதியின் முதல் எலக்ட்ரிக் காரான இது வருகிற அக்டோபர் மாதத்தில் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனையில் இந்த மாருதி எலக்ட்ரிக் காருக்கு போட்டியளிக்கும் வகையில் தற்போதைக்கு எந்த காரும் இல்லையென்றாலும், விரைவில் ஹூண்டாய் கிரெட்டா இவி மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி.இ9 எலக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

upcoming maruti suzuki cars

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, மாருதி சுஸுகி இ.வி.எக்ஸ் மொத்தம் 2 விதமான பேட்டரி ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம். இதில் ஒரு பேட்டரி ஆனது 48kWh திறனில் அளவில் சிறியதாகவும், மற்றொன்று 60kWh திறனில் அளவில் பெரியதாகவும் இருக்கும். பேட்டரியின் அளவை பொறுத்து, அது காருக்கு வழங்கும் பவர் அவுட்-புட் இருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

2024 கிராண்ட் விட்டாரா 7-சீட்டர்: தற்சமயம் விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் கிராண்ட் விட்டாரா காம்பெக்ட் எஸ்யூவி லாங்-வீல்பேஸ் வெர்சனும் இந்த 2024ஆம் ஆண்டில் மாருதி சுஸுகியில் இருந்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இந்த கார் நன்கு நீளமானதாக, 7 பேர் நன்கு சவுகரியமாக அமரக்கூடிய வகையில் இருக்குமாம்.

upcoming maruti suzuki cars

கிராண்ட் விட்டாராவில் வழங்கப்படும் என்ஜின் ஆப்ஷன்கள் இந்த புதிய காரிலும் வழங்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதேபோல் உட்பக்க கேபினின் தோற்றத்தில் இரண்டிற்கும் இடையே பெரியதாக வித்தியாசம் இருக்காது. ஆனால் வெளிப்பக்க தோற்றத்தை பொறுத்தவரையில், கிராண்ட் விட்டாராவை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாக இருந்தாலும், அதில் இருந்து வேறுப்படும் வகையில் சில மாற்றங்கள் உடன் இந்த 7-சீட்டர் கார் வடிவமைக்கப்படலாம்.

சுஸுகி ஸ்பேசியா காரின் அடிப்படையிலான எம்பிவி கார்: ஜப்பானில் விற்பனையில் உள்ள அளவில்-சிறியதான எம்பிவி காரான சுஸுகி ஸ்பேசியாவை அடிப்படையாக கொண்டு ஒரு எம்பிவி காரை மாருதி சுஸுகி உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த 2024ஆம் ஆண்டில் மாருதி சுஸுகி அறிமுகப்படுத்தும் விலை குறைவான காராகவும் இது இருக்கும் என தெரிகிறது.

upcoming maruti suzuki cars

ஆனால், இந்த அளவில்-சிறியதான மாருதி எம்பிவி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்குள் இந்த ஆண்டின் இறுதி வந்துவிடும். மாருதி எர்டிகா எம்பிவி காரை விட விலை குறைவானதாக அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த கார் ரெனால்ட்டின் டிரைபர் எம்பிவி காருக்கு விற்பனையில் போட்டியாக இருக்கும். 1.2 லிட்டர் இசட்-சீரிஸ் பெட்ரோல் என்ஜின் உடன் இந்த எம்பிவி கார் அறிமுகம் செய்யப்படலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகியின் புதிய கார்கள் என்பதினாலேயே இவற்றிற்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த 5 கார்களும் நிச்சயமாக இந்த 2024ஆம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அடித்து கூற முடியாது. ஏனெனில், இவற்றில் ஏதேனும் ஒரு கார் திட்டமிட்டப்படி இந்த 2024ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படாமல் போவதற்கும் வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, January 14, 2024, 10:48 [IST]
English summary
Upcoming maruti suzuki cars for indian market in this 2024
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X