35 கிமீ மைலேஜ் தரும் இந்த கார்ல 2, 3 குடும்பம் ஒன்னா போலாம்! விலை இவ்ளோதானா! அப்ப இனி ரோடு முழுக்க இதான் ஓடும்

இந்தியாவில் எஸ்யூவி (SUV) ரக கார்கள் விற்பனையில் பிரம்மாண்டமான வளரச்சியை பெற தொடங்கிய பிறகு, மற்ற செக்மெண்ட் கார்கள் எல்லாம் தள்ளாட ஆரம்பித்தன. குறிப்பாக செடான் (Sedan) செக்மெண்ட்டை சேர்ந்த பெரும்பாலான கார்களின் விற்பனை 'டல்' அடிக்க தொடங்கியது. இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியிலும், எம்பிவி (MPV) ரக கார்கள் ஓரளவிற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன. எம்பிவி ரக கார்களில் அதிகம் பேர் பயணம் செய்ய முடியும் என்பதுதான் இதற்கு காரணம். எனவே அதிக உறுப்பினர்களை கொண்ட குடும்பங்களுக்கு எம்பிவி கார்கள் ஏற்றவையாக உள்ளன.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி ரக கார்களில் ஒன்றாக இருப்பது மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப விலை 8.69 லட்ச ரூபாயாக இருக்கிறது.

Suzuki Spacia

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 13.03 லட்ச ரூபாயாக உள்ளது. இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலையில் விற்பனை செய்யப்படும்போதே மாருதி சுஸுகி எர்டிகா அதிகப்படியான வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் காராக இருக்கிறது.

நிலைமை இப்படி இருக்கும்போது, எர்டிகாவை விட குறைவான விலையில் புத்தம் புதிய காம்பேக்ட் எம்பிவி (Compact MPV) கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் மாருதி சுஸுகி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தற்போதைய நிலையில் 'YDB' என்ற குறியீட்டு பெயரில் இந்த கார் அழைக்கப்படுகிறது.

Suzuki Spacia Interior Design

அதிகாரப்பூர்வமான பெயர் இன்னும் சூட்டப்படவில்லை. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த எம்பிவி கார், மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. குறைவான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதற்காக, செலவை குறைக்கும் பல்வேறு யுக்திகளை மாருதி சுஸுகி நிறுவனம் கையாளவுள்ளது.

ஜப்பான் (Japan) உள்ளிட்ட நாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ள சுஸுகி ஸ்பாசியா (Suzuki Spacia) காரின் ஒரு சில முக்கியமான அம்சங்கள், மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய எம்பிவி காரில் இடம்பெற்றிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது காம்பேக்ட் எம்பிவி என்பதால், இதன் நீளம் 4 மீட்டருக்கும் குறைவாகதான் இருக்கும்.

எனினும் இந்த எம்பிவி காரில், 3 வரிசை இருக்கை அமைப்பு வழங்கப்படவுள்ளது. எனவே நிறைய பேர் தாராளமாக பயணம் செய்ய முடியும். செயல்திறனை பொறுத்தவரையில், ஸ்ட்ராங் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 1.2 லிட்டர் இஸட் சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மைலேஜ் (Mileage) ஒரு லிட்டருக்கு 35 கிலோ மீட்டர் என்ற அளவில் இருக்கலாம். எனவே அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலும், அதே நேரத்தில் சிறப்பான மைலேஜ் வழங்க கூடிய வகையிலும் ஒரு எம்பிவி காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது ஏற்றதாக இருக்கும். இந்த கார் குறைவான விலையில் வரவுள்ளது என்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) காருக்கு நேரடி போட்டியாக, மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த எம்பிவி கார் விற்பனைக்கு வரவுள்ளது. ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப விலை தற்போதைய நிலையில் வெறும் 6 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். கிட்டத்தட்ட இதே விலையில்தான் மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய எம்பிவி காரும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என நாங்கள் கருதுகிறோம். எனவே ரெனால்ட் ட்ரைபர் காருக்கு மிக கடுமையான போட்டி காத்து கொண்டுள்ளது என உறுதியாக சொல்ல முடியும். அனேகமாக வரும் 2026ம் ஆண்டில், இந்த கார் அறிமுகம் செய்யப்படலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, August 12, 2024, 16:41 [IST]
English summary
Upcoming maruti suzuki compact mpv all you need to know
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+