550 கிமீ ஓடும் இந்த எலெக்ட்ரிக் கார்ல 2, 3 குடும்பம் போலாம்! விலை இவ்ளோதானா! மார்க்கெட்ட ஒரு கை பாக்க போகுது!

இந்தியாவின் நம்பர்-1 கார் நிறுவனம் எது? என கேட்டால், பச்சை குழந்தை கூட, சற்றும் யோசிக்காமல் மாருதி சுஸுகி (Maruti Suzuki) என கூறும். ஆனால் இந்த பெருமை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்றால், மாருதி சுஸுகி நிறுவனம் எலெக்ட்ரிக் கார் (Electric Car) சந்தையில் களமிறங்கியாக வேண்டும். இந்தியாவின் நம்பர்-1 கார் நிறுவனமாக இருந்தாலும் கூட, இன்னும் ஒரு எலெக்ட்ரிக் காரை கூட விற்பனைக்கு அறிமுகம் செய்யாமல் இருப்பது, மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

மறுபக்கம் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனமோ தொடர்ச்சியாக பல்வேறு எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து, நாலு கால் பாய்ச்சலில் முன்னேறி கொண்டுள்ளது. இதை இப்படியே விட்டால் எதிர்காலத்தில் முதலிடத்திற்கு ஆபத்து வரலாம் என்பதை உணர்ந்துள்ள மாருதி சுஸுகி நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.

Maruti Suzuki eVX

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார், வரும் 2025ம் ஆண்டின் தொடக்கத்திலோ அல்லது 2025ம் ஆண்டின் மத்திய பகுதியிலோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாருதி சுஸுகி இவிஎக்ஸ் (Maruti Suzuki eVX) என்ற பெயரில் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரவுள்ளது. இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஆனால் ஒரே ஒரு எலெக்ட்ரிக் காருடன் மாருதி சுஸுகி நிறுவனம் நிற்க போவதில்லை. எதிர்காலத்தில் பல்வேறு எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Maruti Suzuki Ertiga

இதில், மாருதி சுஸுகி ஒய்எம்சி (Maruti Suzuki YMC) ஒன்றாகும். இந்த காருக்கு இன்னும் அதிகாரப்பூர்வமான பெயர் சூட்டப்படவில்லை. தற்போதைய நிலையில் ஒய்எம்சி என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. இது இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள 2வது எலெக்ட்ரிக் காராக இருக்கலாம்.

அதாவது இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட சிறிது காலத்திலேயே ஒய்எம்சி எலெக்ட்ரிக் காரும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார், எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது என்னும் நிலையில், ஒய்எம்சி எலெக்ட்ரிக் கார், எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்ததாக இருக்கும்.

எனவே இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எம்பிவி கார் என்ற பெருமையை இது பெறவுள்ளது. இந்தியாவின் எம்பிவி செக்மெண்ட்டில் ஏற்கனவே மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) மற்றும் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6) ஆகிய கார்கள்தான் இதற்கு காரணம்.

இந்த வரிசையில் வரவுள்ள ஒய்எம்சி எலெக்ட்ரிக் கார், இந்தியாவின் எலெக்ட்ரிக் எம்பிவி செக்மெண்ட்டில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்ட உதவி செய்யலாம். இது எம்பிவி ரகத்தை சேர்ந்தது என்பதால், 7 இருக்கைகளை கொண்டதாக இருக்கும். இந்த எலெக்ட்ரிக் காரில், 60 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், சுமார் 550 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும் என தெரிகிறது. இது சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் என்பதால், தொலை தூர பயணங்களுக்கும் கூட இந்த எலெக்ட்ரிக் காரை தைரியமாக பயன்படுத்தலாம். அத்துடன் பல்வேறு அதிநவீன வசதிகளையும் நாம் எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த எலெக்ட்ரிக் கார், 2026ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அனேகமாக இந்த எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை சுமார் 20 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இது 7 சீட்டர் கார் என்பதால், அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். சரியான விலையில் அறிமுகம் செய்யப்பட்டால், இந்த எலெக்ட்ரிக் எம்பிவி கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இந்த செய்தியில் படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 22, 2024, 17:00 [IST]
English summary
Upcoming maruti suzuki ymc electric mpv everything we know so far
மேலும்... #maruti suzuki #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+