மார்க்கெட்டுக்கு இவை எல்லாமே புதுசு தான்... டாடா மோட்டார்ஸுக்கு ஸ்கெட்ச் போடுகிறதா மஹிந்திரா?

எலக்ட்ரிக் கார் (Electric Car), இந்தியா மட்டுமின்றி உலகளவில் வரவேற்பை பெற்றுவரும் ஒன்றாக உள்ளது. இந்திய மார்க்கெட்டில் பல்வேறு விதமான புதிய கார்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அவற்றுள் மிட்-சைஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களும் ஒன்றாகும். அத்தகைய மிட்-சைஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் அடுத்த 1 வருடத்திற்குள் பல்வேறு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அவற்றுள் பிரபலமான 5 எலக்ட்ரிக் கார்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

ஹூண்டாய் கிரெட்டா இவி (Hyundai Creta EV): இந்தியாவில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் எலக்ட்ரிக் கார்களுள் ஒன்று இதுவாகும். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, கிரெட்டா இவி அடுத்த 2025ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருக்கலாம். இந்த காருக்கான சாலை சோதனை பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டன. இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் அடிப்படையிலானதாக கிரெட்டா இவி இருக்கும்.

upcoming mid-size electric suv cars

மாருதி சுஸுகி இவிஎக்ஸ் (Maruti Suzuki eVX): மேலே கண்ட ஹூண்டாய் எலக்ட்ரிக் காரை காட்டிலும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருப்பது. காரணம், இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமான மாருதி சுஸுகியின் முதல் எலக்ட்ரிக் கார். இந்த 2024ஆம் ஆண்டு முடிவதற்குள் அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால், 2025ஆம் ஆண்டில்தான் இந்த கார் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

upcoming mid-size electric suv cars

மஹிந்திரா பிஇ.05 (Mahindra BE.05): மஹிந்திரா அதன் எலக்ட்ரிக் கார்களை பிஇ பிராண்டில் இருந்து அறிமுகம் செய்ய உள்ளது. இதன்படி மஹிந்திரா பிஇ பிராண்டில் இருந்து முதல் எலக்ட்ரிக் காராக பிஇ.05 2025இல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. எலக்ட்ரிக் இன்க்லோ ஸ்கேட்போர்டு பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படும் இந்த எலக்ட்ரிக் காரின் நீளம் 4,370மிமீ ஆகும்.

upcoming mid-size electric suv cars

மஹிந்திரா எக்ஸ்யூவி.இ8 (Mahindra XUV.e8): புதியதாக பிஇ பிராண்டை கொண்டுவரும் அதேநேரம் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள எக்ஸ்யூவி பெயரையும் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. இதன்படி, எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் கார் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் நிலையில், எக்ஸ்யூவி700 காரின் எலக்ட்ரிக் வெர்சனாக எக்ஸ்யூவி.இ8 அறிமுகம் செய்யப்பட உள்ளது.

upcoming mid-size electric suv cars

டாடா ஹெரியர் இவி (Tata Harrier EV): கடந்த 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட டாடா ஹெரியர் இவி எலக்ட்ரிக் கார் இன்னமும் வடிவமைப்பு பணிகளில்தான் உள்ளது. எலக்ட்ரிக் கார்களில் டாடா மோட்டார்ஸ் தீவிரமாக உள்ளது. இருப்பினும், ஹெரியர் இவி விஷயத்தில் மட்டும் கொஞ்சம் நேர அவகாசம் எடுத்துக் கொள்கிறது. இருப்பினும், அடுத்த 2025ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஹெரியர் இவி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம்.

upcoming mid-size electric suv cars

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு புதியது, புதியதாக எலக்ட்ரிக் கார்கள் மார்க்கெட்டிற்கு வருவது, இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு அதிகரித்துவரும் வரவேற்பை காட்டுகிறது. இந்த தொகுப்பில் நாங்கள் குறிப்பிட்டுள்ளவை சற்று விலைமிக்க எலக்ட்ரிக் கார்களாகும். இவற்றை காட்டிலும் குறைந்த விலையில் எலக்ட்ரிக் காரை வாங்க விரும்புபவர்களுக்காகவும் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, October 26, 2024, 23:22 [IST]
English summary
Upcoming mid size electric suv cars for india hyundai creta ev to tata harrier ev
மேலும்... #electric car #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X