33 கிமீ மைலேஜ் தரும்னு சொன்னாங்களே அந்த காரா இது!.. டீலர்களின் கைகளுக்கே வர தொடங்கிருச்சு..
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் வெகு விரைவில் இந்தியாவில் அதன் புதிய தலைமுறை டிசையர் New Gen Dzire) கார் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்தியர்களின் எதிர்பார்ப்பை மிகப் பெரிய அளவில் கவர்ந்திருக்கும் கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். நிறுவனம் அதன் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் (Swift) கார் மாடலை சில வாரங்களுக்கு முன்னரே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, தற்போது புதிய தலைமுறை டிசையர் கார் மாடலையும் விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் நிறுவனம் தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது.
இந்த காரை வருகின்ற நவம்பர் 11 ஆம் தேதி அன்றே மாருதி சுஸுகி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையிலேயே புதிய தலைமுறை டிசையர் கார் மாடல் கன்டெய்னர் லாரியில் இருந்து இறக்கப்படும் படங்கள் வெளியாகி உள்ளன.

விற்பனைக்கான அறிமுகத்திற்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் இந்த காரை டீலர்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளையே மாருதி சுஸுகி தொடங்கி இருக்கின்றது. இதேபோல், மாருதி சுஸுகி கார் விற்பனையாளர்கள் சிலரும் இந்த காருக்கு புக்கிங்கை ஏற்கும் பணிகளைத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எங்களுக்கு கிடைத்திருக்கும் தகவலின்படி, மாருதி சுஸுகி டிசையர் புதிய தலைமுறைக்கான புக்கிங் பணிகள் பெங்களூருவில் தொடங்கி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஆனால், அதிகாரப்பூர்வமற்ற டீலர்கள் அளவிலான புக்கிங் ஆகும். டீலர்களைப் பொருத்து ரூ. 5 ஆயிரம் தொடங்கி ரூ. 10 ஆயிரம் வரையிலான முன்தொகையின்கீழ் இந்த காருக்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன.

சென்னையிலும் இதேபோல் சில டீலர்கள் புக்கிங்கை தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால், இதை டீலர்கள் உறுதி செய்ய தவிர்த்துவிட்டார்கள். இந்த நிலையிலேயே டீலர்களின் கைகளுக்கும் புதிய டிசையர் கார் தற்போது வர தொடங்கி இருக்கின்றது. புதிய தலைமுறை டிசையர் 33 கிமீ வரையில் மைலேஜ் தரும் என கூறப்படுகின்றது.
நிறுவனம் புதிய ஸ்விஃப்ட் காரில் பயன்படுத்தி இருக்கும் அதே எஞ்சினே இந்த காரில் வழங்க இருக்கின்றது. தொடர்ந்து, இந்த காரில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய இரண்டு ஆப்ஷன்களிலும் புதிய டிசையர் விற்பனைக்குக் கிடைக்கும் என கூறப்படுகின்றது. இதில் சிஎன்ஜி ஆப்ஷனே மிக அதிக மைலேஜை தரும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
கிலோ ஒன்றிற்கு 32.85 கிமீ வரையில் மைலேஜ் தருமாம். ஆனால், மாருதி சஸுகி முதலில் டிசையரின் பெட்ரோல் வெர்ஷனை மட்டுமே விற்பனைக்கு வழங்கும் என கூறப்படுகின்றது. இதற்கு அடுத்தபடியாகவே பின்னாளில் இதில் சிஎன்ஜி அறிமுகம் செய்யப்படுமாம். இதன் பெட்ரோல் ஆப்ஷன் லிட்டர் ஒன்றிற்கு 23 கிமீ முதல் 25 கிமீ வரையில் மைலேஜ் தரும் என கூறப்படுகின்றது.
புதிய டிசையர் அதிகம் மைலேஜ் தரக் கூடிய கார் மாடலாக மட்டுமல்ல அதிக பிரீமியம் மற்றும் புதிய அம்சங்கள் பலவற்றை தாங்கிய கார் மாடலாகவும் இருக்கும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. மிக முக்கியமாக இந்த சப்-காம்பேக்ட் செடான் காரில் சன்ரூஃப் அம்சத்தை வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.
எனவே, மிகுந்த பிரீமியம் தர காராக புதிய டிசையர் இருக்கும் என்பது உறுதியாகி இருக்கின்றது. இந்த காரில் கூடுதல் சிறப்பம்சமாக இந்த காரில் வயர் இணைப்பற்ற செல்போன் சார்ஜர், ஹெட்ஸ்-அப் திரை, 360 டிகிரி பார்வை திறன் கொண்ட மற்றும் 9 அங்குல பெரிய தொடுதிரை சிஸ்டம் உள்ளிட்டவை இந்த காரில் இடம் பெற இருக்கின்றன.
இந்த திரை ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதிக் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமில்லைங்க, இன்னும் பல்வேறு சிறப்பம்சங்களை இந்த கார் தன்னுள் தாங்கியிருக்கும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனால்தான் இந்த காருக்கான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்துக் காணப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த மாதிரியான சூழலிலேயே டீலர்கள் அளவிலான புக்கிங் பணிகள் தொடங்கி இருக்கின்றன. தொடர்ந்து, இந்த காரை டீலர்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளையும் மாருதி சுஸுகி தற்போது தொடங்கி இருக்கின்றது. மேலும், முந்தைய வெர்ஷன் டிசையர் மற்றும் மாருதி சுஸுகியின் மற்ற தயாரிப்புகளுக்கு கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே இதற்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








