இப்ப விற்கப்படும் ஸ்விஃப்ட்டைவிட அதிக மைலேஜை தருமா! புதிய ஸ்விஃப்ட்டை வாங்க எல்லாம் வரிசை கட்டி நிற்க போறாங்க!

இந்தியர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக புதிய மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (New Maruti Suzuki Swift) கார் இருக்கின்றது. இந்த காருக்காக இந்தியர்கள் பலர் தவம் கொண்டு காத்துக் கொண்டிருக்கின்றனர் என்றே கூறலாம். இதற்கு அந்த காரில் இடம் பெற இருப்பதாகக் வெளியாகிக் கொண்டிருக்கும் சில சிறப்பம்சங்கள் பற்றிய தகவலே காரணமாக உள்ளது.

குறிப்பாக, புதிய ஸ்விஃப்ட் அதிக மைலேஜை வழங்கும் என வெளியாகிக் கொண்டிருக்கும் தகவலே இந்தியர்கள் பலரை அந்த காரின் வருகையை மிகப் பெரிய ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்க வைத்திருக்கின்றது. இந்த நிலையிலேயே ஓர் சூப்பரான தகவல் புதிய ஸ்விஃப்ட் பற்றி தற்போது மீண்டும் வெளியாகி இருக்கின்றது.

Maruti swift mileage

புதிய ஸ்விஃப்ட் காரின் மைலேஜை பற்றிய விபரங்கள்தான் அவை. விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஸ்விஃப்ட் தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்விஃப்ட்டை-விட அதிக மைலேஜ் வழங்கும் என்கிற தகவலே தற்போது வெளியாகி இருக்கின்றது. புதிய ஸ்விஃப்ட் ஒரு லிட்டருக்கு 25.72 கிமீ வரையில் மைலேஜ் தரும் என்கிற தகவல்களே வெளியாகி இருக்கின்றன.

தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்விஃப்ட் இதைவிட 3.3 கிலோ மீட்டருக்கும் குறைவான மைலேஜையே வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்து. இதுமட்டும் இல்லைங்க இந்த காரை அதிக பாதுகாப்பானதாக இருக்கும் வகையிலும் மாருதி சுஸுகி தயார் செய்திருப்பதாக இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆறு ஏர்-பேக்குகள் ஸ்டாண்டர்டான பாதுகாப்பு அம்சமாக இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. அதாவது, புதிய ஸ்விஃப்ட் கார் மாடலின் அனைத்து வேரியண்டுகளிலும் 6 ஏர்-பேக்குகள் என்பது கட்டாயமாக இடம் பெற்றிருக்கும். அதேவேளையில், புதிய ஸ்விஃப்ட் அதிக பாதுகாப்பு தரும் என்கிற தர சான்றைப் பெற்றிருக்கின்றது.

ஐந்திற்கு நான்கு ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கையே புதிய ஸ்விஃப்ட் பெற்றிருக்கின்று. ஜப்பானுக்கான புதிய ஸ்விஃப்டே இந்த ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவிற்கான ஸ்விஃப்ட் காரும் இதேபோல் அதிக பாதுகாப்பு ரேட்டிங்கையேக் கொண்டிருக்கும் என நம்பப்படுகின்றது. இந்தியாவில் புதிய ஸ்விஃப்ட் காருக்கான புக்கிங் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

ரூ. 11 ஆயிரம் முன் தொகையில் அதற்கான புக்கிங்குகள் ஏற்கப்படுகின்றது. வருகின்ற 9 ஆம் தேதி அன்றே புதிய ஸ்விஃப்ட் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இந்த நிலையிலேயே அக்காருக்கான புக்கிங் பணிகள் நாடு முழுவதும் தொடங்கி இருக்கின்றது.

இந்தியாவில் மாருதி சுஸுகி 1.2 லிட்டர் 3 சிலிண்டர் இசட் 12 இ பெட்ரோல் எஞ்சின் தேர்வில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது. இந்த எஞ்சினே ஒரு லிட்டருக்கு 25.72 கிமீ மைலேஜை வழங்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இதேபோல் அதிக திறனையும் அது வெளியேற்றும்.

80 பிஎச்பி மற்றும் 112 என்எம் டார்க்கை அது வெளியேற்றும். உலக சந்தையில் இந்த மோட்டாருடனேயே ஹைபிரிட் தொழில்நுட்பம் மற்றும் சிவிடி வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவிலும் இதே வசதி வழங்கப்படுமா என்பது தெரிவிக்கப்படவில்லை. வருகின்ற 9 ஆம் தேதி அன்று வரவிருக்கும் ஸ்விஃப்ட் பற்றிய அனைத்து முக்கிய விபரங்களையும் மாருதி சுஸுகி வெளியிட இருக்கின்றது.

குறிப்பாக, இந்த காரின் விலை, சிறப்பு வசதிகள் மற்றும் என்னென்ன வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது போன்ற அனைத்து தகவல்களையும் அது வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே பழைய ஸ்விஃப்ட்டைவிட அதிக மைலேஜை புதய ஸ்விஃப்ட் வழங்கும் என்கிற தகவல் வெளியாகி அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போது விற்பனையில் இருக்கும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் அதிகபட்சமாக 22.38 கிமீ வரையில் மைலேஜை வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மைலேஜ் திறன் மற்றும் குறைவான விலை மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு காரணமாகவே ஸ்விஃப்ட் காருக்கு அதிக இந்தியர்கள் ரசிகர்களாக இருக்கின்றனர். இதைவிட மிகப் பெரிய ரசிக பட்டாளத்தையே புதிய ஸ்விஃப்ட் இந்தியாவில் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 2, 2024, 12:59 [IST]
English summary
Upcoming new maruti swift mileage details leaked
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+