இந்த புலி இவ்வளவு நாளா பதுங்குனதே இப்படி பாய்வதற்கு தானா? ரெனால்ட் வெளியிடப்போகும் 4 கார்கள் இது தான்!
ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் தனது வாகன அணி வரிசையை விரிவுபடுத்த தற்போது திட்டமிட்டுள்ளது. இதற்காக புதிய கார்களை களம் இறக்க திட்டமிட்டு வருகிறது. அதன்படி மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் புதிய தலைமுறை டஸ்டர் முதல் அப்டேட் செய்யப்பட்ட டிரைபர் வரை பல்வேறு கார்கள் விரைவில் அறிமுகமாக உள்ளன. இது குறித்து விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா தற்போது ஆட்டோமொபைல் சந்தையில் மூன்றாவது மிகப்பெரிய நாடாக இருக்கிறது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் இந்தியாவில் தங்கள் தயாரிப்புகளை விரிவுபடுத்த திட்டமிட்டு வருகிறார்கள். பல்வேறு புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. அதில் எஸ்யூவி கார்கள் முதல் எலெக்ட்ரிக் கார்கள் எம்பிவி கார்கள் என பல்வேறு லைன் அப் கார்கள் வரிசையில் இருக்கின்றன. இதற்காக நிறுவனம் ரூபாய் 5,300 கோடியை இந்தியாவின் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

தற்போது நிறுவனத்திடம் க்விட், டிரைபர் மற்றும் கைகர் ஆகிய கார்கள் மட்டுமே விற்பனையாகி வருகின்றன. இதனால் புதிய கார்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்திய மக்கள் மத்தியில் அவர்களுக்கு தேவையான கார்களை அறிமுகப்படுத்தி அவர்கள் மனதில் இடம் பிடித்து நல்ல விற்பனையை பெற அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதனால் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் டஸ்டர் கார் முதல் தற்போது விற்பனையாகும் டிரைபர் காரின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் வரை பல்வேறு புதிய கார்கள் அறிமுகமாக உள்ளன.
ரெனால்ட் டஸ்டர்: ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் கார் இந்திய மார்க்கெட்டில் மிகப்பெரிய புரட்சி செய்த காராக இருக்கிறது. இதன் மூன்றாம் தலைமுறை கார் விரைவில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் கடந்த ஆண்டு சர்வதேச அளவில் ஐரோப்ப மார்க்கெட்டில் வெளியிடப்பட்டது. இந்த கார் 2025ம் ஆண்டு இரண்டாம் பாதியில் இந்திய மார்க்கெட்டுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

இந்த கார் அந்நிறுவனத்தின் சிஎம்எஃப்-பி பிளாட்பார்மில் உருவாக்கப்படும் காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 130 பிஎஸ் பவரை தரும் டர்போ பெட்ரோல் மைல்டு ஹைபிரிட் இன்ஜின் மற்றும் ஸ்டிராங் ஹைபிரிட் இன்ஜின் ஆகிய இரண்டு விதமான வேரியன்ட்களில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த காரின் சிறப்பம்சமாக 209 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெனால்ட் பிக்சர் 7 சீட்டர் எஸ்யூவி: ரெனால்ட் நிறுவனம் தனது துணை நிறுவனமாக சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் டேஸிகா பிராண்டில் பிக்ஸ்டர் என்ற காரை அறிமுகப்படுத்தி விற்பனை செய்கிறது வருகிறது. இந்த கார் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் 5 சீட்டர் கொண்ட கார் மட்டுமே சர்வதேச அளவில் விற்பனையாகி வரும் நிலையில், இந்தியாவிற்கு இந்த கார் வரும்போது 7 சீட்டர் காராக மாற்றப்பட்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 7 சீட்டர் காரும் ரெனால்ட் நிறுவனத்தின் சிஎம்எஃப்-பி பிளாட்பார்மில் உருவாக்கப்படும் காராக தான் இருக்கிறது. இந்த காரின் வடிவமைப்பு பெரும்பாலும் டஸ்டர் காரின் வடிவமைப்பு போலவே இருக்கிறது. இந்தியாவில் வெளியாகும் டஸ்டர் காராகவும் அதன் 7 சீட்டர் வெர்ஷனாக இந்த காரும் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த காரில் 230 மிமீ அளவுக்கு நீளம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெனால்ட் க்விட் இவி: ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் கார் இந்தியாவில் தற்போது சிறிய ரக காராக விற்பனையாகி வருகிறது. இதன் எலெக்ட்ரிக் வெஷனை வெளியிட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன் படி 2025ம் ஆண்டு இதனை எலெக்ட்ரிக் வெர்ஷன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கார் ஏற்கனவே டேஸிகா பிராண்டில் ஸ்பிரிங் இவி என்ற பெயரில் விற்பனையாகி வருகிறது. அதே காரணம் இந்தியாவிற்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். அப்படி வரும் பட்சத்தில் டாடா டியாகோ இவி மற்றும் எம்ஜி கோமெட் இவி ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம்.
புதிய தலைமுறை ரெனால்ட் டிரைபர்: ரெனால்ட் நிறுவனம் தனது டிரைபர் காரை இந்திய மார்க்கெட்டில் ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது. இந்த கார் 7 சீட்டர் காராக விற்பனையாகி வரும் நிலையில், இந்த காரை அப்டேட் செய்து அந்நிறுவனம் வெளியிட திட்டமிட்டு வருகிறது. தற்போது இந்த கார் ரூ5.99 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
அப்டேட் செய்யப்பட்ட டிரைபர் கார் 2025ம் ஆண்டு இறுதி அல்லது 2026ம் ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் புதிய வடிவமைப்பு புதிய அப்டேட் செய்யப்பட்ட உட்புற கட்டமைப்பு புதிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு அப்டேட்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரெனால்ட் நிறுவனம் தனக்கென ஒரு இடத்தை பிடித்து மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது. இந்நிலையில் புதிய கார்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை ஏற்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த கார்கள் எல்லாம் அறிமுகமானால் இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









