4 மாசத்துல 10 கார்கள் வெளியாக ரெடியா இருக்குது! ஒவ்வொன்னும் தரமா இருக்குதே!

இந்த ஆண்டு முடிவதற்குள், ஹூண்டாய், டாடா, மஹிந்திரா, கியா, எம்ஜி, நிஸான், ஆடி மற்றும் மெர்சிடீஸ் உள்ளிட்ட பல்வேறு பிராண்டுகளில் இருந்து குறைந்தது பத்து புதிய எஸ்யூவிகள் இந்திய மோட்டார் வாகன சந்தையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்னென்ன கார்கள் விற்பனைக்கு வருகிறது என்பது பற்றிய விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாடா கர்வ் கம்பஷன் இன்ஜின் வாகனத்தின் விலை செப்டம்பர் 2 அன்று அறிவிக்கப்படுகிறது. இது மூன்று இன்ஜின் தேர்வுகளுடன் வருகிறது: 1.2லி ரெவோட்ரான் பெட்ரோல், 1.2லி ஜிடிஐ டர்போ பெட்ரோல் மற்றும் 1.5L டீசல் இன்ஜின். மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்களுடன் கிடைக்கும். கர்வ் கார் அதன் எலெக்ட்ரிக் வேரியன்டுடன் பல அம்சங்களைப் பகிர்ந்து கொள்ளும், மேலும் இது சுமார் ரூ10 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Upcoming Cars 2024

ஹூண்டாய் செப்டம்பர் 9 அன்று ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட அல்கஸார் காருக்கான விலைகளை அறிவிக்க திட்டமிட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட மாடல் சமீபத்திய கிரெடாவிலிருந்து வடிவமைப்பு பெறுகிறது மற்றும் லெவல் 2 அடாஸ் போன்ற புதிய அம்சங்களை கொண்டுள்ளது. உட்புறம், வெளிப்புறம், கலர் மற்றும் வேரியன்ட், இன்ஜின் ஆப்ஷன் விபரங்களை அந்நிறுவனம் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

கியா இவி9 அக்டோபர் 3 அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கியா நிறுவனத்தின் முன்னணி மாடலாக மாறும். இந்த 7 சீட் எஸ்யூவி கார் முழுமையான இறக்குமதி செய்யப்ப்டடு இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இவி6 காரை விட உயர்ந்த நிலையில், இது பல மேம்பட்ட அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளதாக வழங்கப்பட்டுள்ளது.

Upcoming Cars 2024

செப்டம்பர் 11 அன்று, எம்ஜி நிறுவனம் விண்ட்ஸர் இவி காரை வெளியிடும். இது வூலிங் கிளவுட் இவி காரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த நடுத்தர அளவிலான எலெக்ட்ரிக் கிராஸ்ஓவர் எஸ்யூவி மற்றும் செடான் கார்களின் வடிவமைப்பை ஒருங்கிணைத்து ஒரு விரிவான உட்புறத்தை வழங்குகிறது. குறிப்பிடத்தக்க அம்சங்களில் 135 டிகிரி சாய்வு கொண்ட பின் இருக்கைகள் மற்றும் ஒரு பானரோமிக் சன் ரூஃப் ஆகியவை இதில் வழங்கப்பட்டுள்ளது.

டாடா நெக்ஸானின் சிஎன்ஜி எடிசன் கார் விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்த காரில் பூட் ஸ்பேஸை அதிகரிக்கும் வகையில் இரட்டை சிலிண்டர் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இந்த தொழிற்நுட்பத்தை ஏற்கனவே டாடா நிறுவனம் மற்ற சிஎன்ஜி காரில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் வெளியிடப்பட்டவுடன் இந்தியாவின் முதல் டர்போ சிஎன்ஜி காராக இது இருக்கும்.

Upcoming Cars 2024

அடுத்த மாதம் ஆடி Q6 e-tron, பிபிஇ (ப்ரீமியம் பிளாட்ஃபார்ம் எலக்ட்ரிக்) தளத்தில் கட்டப்படும் காரை களம் இறக்க திட்டமிடப்பட்டுள்ளது.. இந்தியா-குறிப்பிட்ட எடிசன், WLTp தரங்களின்படி 625 கி.மீ. ரேஞ்சை கொண்டுள்ளூ, இதில் உள்ள இரட்டை மின்சார மோட்டார் AWD அமைப்பை வழங்கும்.

மெர்சிடெஸ் மேபேக் EQS கார் செப்டம்பர் 9ம் தேதி அன்று விற்பனைக்கு வரும். இது 658 எச்பி பவர் மற்றும் 950 என்எம் டார்க் திறனை வழங்கும். இரட்டை எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது ஒரு முறை சார்ஜ் போட்டால் 600 கி.மீ. ரேஞ்ச் தரும் வகையில் 108.4 kWh பேட்டரி பேக்குடன் வருகிறது.

எம்ஜி குளோஸ்டர் கார் முழு அளவிலான எஸ்யூவி கார். இந்த ஆண்டு இறுதியில் மிட்-லைஃப் அப்டேட்டிற்கு தயாராக உள்ளது. இது வெளிப்புற மற்றும் உட்புற மாற்றங்களை பெறும் போது, ​​அதன் பவர்‌ட்ரெயின் மற்றும் கியர் ஆப்ஷன்கள் மாறாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற விஷயங்கள் அதிகமாக மாறுபட அதிகமான வாய்ப்புள் உள்ளன.

நிஸான் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதன் புதுப்பிக்கப்பட்ட மேக்னைட் காரை வெளியிட திட்டமிட்டு வருகிறது. இந்த காரை தற்போது இந்திய சாலைகளில் பரவலாக சோதித்து வருகிறது. புதுப்பிக்கப்பட்ட மாடல் தற்போதைய 1.0L நேச்சுரலி அஸ்பயர்டு மற்றும் டர்போ பெட்ரோல் இன்ஜின்களைத் தக்கவைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் உள்ளே மற்றும் வெளியே பல்வேறு அப்டேட்களை பெற்றள்ளது.

மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவிவி300 காம்பேக்ட் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் எடிசன் 2024ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எக்ஸ்யூவி 400 காரில் காணப்படும் சிறிய பேட்டரி பேக்கைப் பயன்படுத்துகிறது மற்றும் டாடாவின் பஞ்ச் இவி காருடன் நேரடியாக போட்டியிடுகிறது. இந்த காரை மக்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பல்வேறு வகையான லிஸ்டில் வழக்கமான கம்பஷன் இன்ஜினில் இயங்கும் வாகனங்கள் மற்றும் எலெக்ட்ரிக் மாடல்கள் இரண்டிலும் குறிப்பிடத்தக்க அப்டேட்களை செய்யப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது., இந்திய ஆட்டோமொபைல் துறையின் தொடர்ச்சியான வளர்ச்சி போக்கை இது பிரதிபலிக்கிறது. இதில் உங்களுக்கு பிடித்த வாகனத்தை கமெண்ட் செய்யுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 27, 2024, 15:35 [IST]
English summary
India's automotive market is set to welcome at least ten new SUVs from brands like Hyundai, Tata, and Mercedes by the end of 2023. These vehicles range from electric to luxury models, featuring advanced technology, design, and performance capabilities.
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X